𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz எங்கள் வாழ்வில் உள்ள அனைத்து தாய்மார்களையும் கொண்டாடுதல்

எங்கள் வாழ்வில் உள்ள அனைத்து தாய்மார்களையும் கொண்டாடுதல்

| | 0 Comments |

உலகெங்கிலும் உள்ள தாய்மார்கள், தாய்மை, தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் செல்வாக்கினை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது.  தாய்மார்கள் நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கினை வகிப்பதுடன்,  அவர்கள் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட தகுதியானவர்கள். பொதுவாக குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் தாய்மார்கள் வகிக்கும் பல பாத்திரங்களுக்கு அவர்களை கௌரவிக்க வருடத்திற்கு ஒரு நாள் என்றும் போதாது.

இந்த அன்னையர் தினத்தில் Pelwatte Dairy வயதான தாய்மார், புதிய தாய்மார், வேலை செய்யும் தாய்மார், வீட்டில் தங்கியிருக்கும் தாய்மார், ஒற்றை தாய்மார், மாற்றாந்தாய், வளர்ப்பு தாய்மார், ஞானமாதா, குழந்தைகளை இழந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் இல்லாத போதிலும்  பலருக்கு தாயாக இருப்போர் என அனைத்து வகையான தாய்மாரையும் கௌரவப்படுத்துகின்றது. “அனைத்து தாய்மார்களும் சூப்பர் ஹீரோக்களே, உடல் உணர்வு ரீதியாகவும், ஒரு தாயின் வலிமையை உண்மையிலேயே ஒப்பிடமுடியாது. இதே காரணத்துக்காகவே ஒவ்வொரு சூப்பர்தாயும் சமச்சீரான உணவைப் பேணுவதும் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை முன்னெடுப்பதும் அவசியமாகும், என Pelwatte Dairy இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க தெரிவிக்கின்றார்.

“பால் மற்றும் பாலுற்பத்திகள் நல்ல சமச்சீரான உணவின் முக்கிய பகுதியாகும். எலும்பின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான புரதங்கள், கல்சியம், அயோடின், விட்டமின்கள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அவை வழங்குவதுடன், ஒஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைப்பதுடன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.

இதற்காக Pelwatte சர்வதேச தரமான பாலுற்பத்திப் பொருட்களை வழங்குவதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. மேலும், இலங்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாய்மார்களின் முழுமையான நம்பிக்கையையும் வென்றெடுத்துள்ளதுடன், இலங்கையின் பொது உணவுத்திட்டத்தை பூர்த்தி செய்கின்றது, ”என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

தரம், சுவை மற்றும் ஆரோக்கியம் குறித்த Pelwatte Dairy இன் வலுவான அர்ப்பணிப்பு அதன் தயாரிப்புகளில் பிரதிபலிப்பதுடன், இது அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச பெறுமதியை வழங்குகிறது. இந் நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையானது திரவ பால், பால்மா, தயிர், யோகர்ட், ஐஸ்கிரீம் மற்றும் பசு  நெய் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை அனைத்தும் இயற்கையானவை என்பதுடன் பாதுகாப்புப் பொருள்கள் எவையும் சேர்க்கப்படாதவை. மேலும், அனைத்து தயாரிப்புகளும் ISO 22,000: 2018 தர நியமங்களுக்கு இணங்க தயாரிக்கப்படுவதுடன், இது நாட்டில் மிகவும் விரும்பப்படும் பாலுற்பத்தி வர்த்தகநாமமாகும்.

ஒவ்வொரு இலங்கையரின் நல்வாழ்வே Pelwatte Dairy இன் முதன்மை குறிக்கோளாகும். இந்த விசேட சந்தர்ப்பத்தில், ஒவ்வொரு தாய்க்கும் Pelwatte நிறுவனம் தனது அன்னையர் தினத்தை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறது!

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

රාණි සඳුන් ශ්‍රී ලාංකික උරුම පෞද්ගලික සනීපාරක්ෂක සන්නාමය වෙතින් “රාණි සඳුන් වාසනා වරමේ” ජයග්‍රාහකයින් අගයයිරාණි සඳුන් ශ්‍රී ලාංකික උරුම පෞද්ගලික සනීපාරක්ෂක සන්නාමය වෙතින් “රාණි සඳුන් වාසනා වරමේ” ජයග්‍රාහකයින් අගයයි

ස්වදේශී කර්මාන්තායතනය, විශ්වාසනීය රාණි සඳුන් පාරිභෝගිකයන් ඇගයීමේ අරමුණින් දියත් කළ රාණි සඳුන් වාසනා වරම ප්‍රවර්ධන වැඩසටහනෙහි රන් මාල දිනා ගත්  ජයග්‍රාහකයන් මෑතක දී ප්‍රකාශයට පත් කර කෙරුණි. යූ. මාරියන් ප්‍රනාන්දු