𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz மாதவிடாய் ஏழ்மையை ஒழிக்கும் பயணத்தின் முதல் ஆண்டைக் கொண்டாடுகிறது Fems AYA

மாதவிடாய் ஏழ்மையை ஒழிக்கும் பயணத்தின் முதல் ஆண்டைக் கொண்டாடுகிறது Fems AYA

| | 0 Comments |

Fems Aya திட்டமானது, Hemas Consumer Brands இனது பெண்களுக்கான சுகாதார பராமரிப்பு வர்த்தகநாமமான Fems இன் தேசிய அளவிலான முன்முயற்சியாகும். மாதவிடாய் சுகாதாரம் மற்றும் குறைந்த விலையிலான உயர்தர ஆரோக்கிய துவாய்களுக்கான சமமான அணுகலை வழங்குவதன் மூலம், மக்களிடையேயும் சமூகங்களிடையேயும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் இத்திட்டமானது அதன் முதலாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.

Merrill J.Fernando Foundation, Arka Initiative, Sarvodaya Women’s Movement, Sarvodaya-Fusion ஆகிய ஒரே எண்ணம் கொண்ட கூட்டாளர்களுடன் இணைந்து Fems அதன் குறிக்கோளுடனான முயற்சியான ‘Fems AYA’ திட்டத்தை, சர்வதேச மகளிர் தினமான 2021, மார்ச் 08ஆம் திகதி அறிமுகப்படுத்தியது. ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாடு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வு ஊடகவியலாளர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

கடந்த வருடம் முழுவதுமாக மட்டுமன்றி கொவிட் தொற்று காலப்பகுதி முழுவதும் கிராமப்புற பிரதேசங்களில் உள்ள உள்ளூர் சமூகங்கள் முதல் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இளம் யுவதிகள் வரை 2,500 பெண்களுக்கு பயிற்சி மற்றும் விழிப்பூட்டல்களை Fems தொடர்ந்தும் முன்னெடுத்து வந்துள்ளது. இத்திட்டத்தின் பங்காளிகளின் ஆதரவுடன் ஒன்லைன் மற்றும் நேரடியான பயிற்சித் திட்டங்கள் இதன்போது நடாத்தப்பட்டன

முன்னேறிக் கொண்டிருக்கும் ஒரு பெரு நிறுவன முன்னோடி எனும் வகையில் Hemas Consumer Brands நிறுவனம், 6,700 இற்கும் மேற்பட்ட அதன் ஆண், பெண் ஆகிய இருபால் ஊழியர்களுக்கும் Fems AYA ஆரோக்கிய துவாய்களை வழங்கும் இலவச விநியோகத்தின் மூலம், நிறுவனத்திற்குள்ளும் தனது நோக்கத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்த முதலாவது பெரு நிறுவனம் எனும் பெயரை பெற்றுள்ளது. நிறுவனத்தின் பணியாளர்களிடையேயான இந்த விநியோக நடைமுறையானது, அவர்களின் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை ரீதியான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதை இயல்பாக்க உதவியது. கட்டுப்படியாகும் விலையில், உயர்தர மாதவிடாய் சுகாதார தயாரிப்புக்கான அணுகலை வழங்குவதற்கான பங்களிப்பை இத்தயாரிப்பு வழங்கிய அதே வேளையில், மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய மிக முக்கியமான கலந்துரையாடல்களில் நிறுவனத்தின் அனைத்து குழு உறுப்பினர்களும் ஈடுபடுவதற்கும் அது ஊக்குவித்தது.

மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய போதிய அறிவு இல்லாமை மற்றும் மாதவிடாய் தொடர்பான சமூகத்திலுள்ள களங்க ரீதியிலான பார்வை காரணமாக, பெரும்பாலானோர் இவ்விடயங்களை வெளிப்படையாக பேசத் தயங்குகின்றனர். பாலின வேறுபாடின்றி, மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் குறித்து அனைவரும் வெளிப்படையாகப் பேச வேண்டும். மாதவிடாய் தொடர்பான கல்வியானது சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதுடன், இது மாதவிடாய் ஆரோக்கியத்தைச் சூழ்ந்துள்ள களங்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் என Hemas Consumer Brands நம்புகிறது. இது சம்பந்தமான செய்தியை சமூகம் முழுவதும் எடுத்துச் சென்று, அதன் மூலம் இது தொடர்பான உரையாடலை இயல்பாக்குவது தொடர்பில் ஆண்கள் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க முடியும்.

நாடு தழுவிய இந்த விழிப்புணர்வு முயற்சியுடன், இலங்கைப் பெண்களுக்கு கட்டுப்படியான விலையில் ஆரோக்கிய துவாயின் தேவையை நிவர்த்தி செய்ய Fems AYA வை Fems அறிமுகப்படுத்தியது. Fems Aya ஆனது, பருத்தி உணர்வுடனான, விங்ஸ் (wings) அமைப்பைக் கொண்ட, சர்வதேச தரத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய துவாயாகும்.  இது பெண்களுக்கு சௌகரியத்தை வழங்குவதுடன் அவர்கள் நம்பிக்கையுடனும் இருக்க உதவுகிறது. அதன் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் உரிய பாதுகாப்புத் தரத்தை பூர்த்தி செய்வதுடன், இது பெண்களின் சௌகரியத்தை கருத்திற் கொண்டு மென்மையான பருத்தி உணர்வு கொண்ட தாளை கொண்டவாறு, உச்சபட்ச பாதுகாப்பிற்காக விங்ஸ் (wings) உடன் வருகிறது.

ஒவ்வொரு இலங்கைப் பெண்ணின் தேவைகளையும் புரிந்துகொண்டு, உச்ச சௌகரியம் மற்றும் பாதுகாப்பிற்கான வாக்குறுதியை வழங்கும் ஒரு வர்த்தக நாமம் Fems ஆகும். Fems நாடு முழுவதும் கிடைப்பதுடன், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து நுகர்வோரும் அணுகக்கூடியதாக உள்ளது. இலங்கையின் முன்னணி சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்று எனும் வகையில், Fems ஆனது பல வருடங்களாக இலங்கைப் பெண்களின் இதயங்களை வென்ற தரக்குறியீடாக விளங்குவதோடு, பெண்கள் முன்னோக்கிச் செல்லும் வகையில், அவர்களுக்கு சிறந்த சௌகரியம், பாதுகாப்பு, தூய்மை ஆகியவற்றை வழங்குவதில் புகழ் பெற்று விளங்குகின்றது.

Hemas Consumer Brands பற்றி

வீடு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தயாரிப்புகளின் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer Brands, பல ஆண்டுகளாக வலுவான நோக்கம் கொண்ட தரக்குறியீடுகள் கொண்ட தயாரிப்புகள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம், நுகர்வோர் இதயங்களை வென்றுள்ளது. Hemas Consumer Brands ஆனது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட  புத்தாக்கம் மிக்க குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சந்தையில் முன்னணியான மற்றும் விருது வென்ற சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பில் அது பாராட்டைப் பெற்றுள்ளது. அந்த வகையில், அர்த்தமுள்ள சலுகைகளை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து, மேலும் சூழலுக்கு உகந்த உலகத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டின் அனைத்து பாகங்களிலுமுள்ள சமூகங்களின் வாழ்க்கையை சென்றடைகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post