𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz பிரிட்டிஷ் கவுன்சிலின் Skills Plus பாடநெறி உயர்கல்வி மற்றும் A/L இற்கு பின் பணிபுரியும் மாணவர்களின் தகவல் தொடர்பாடல் திறனை மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

பிரிட்டிஷ் கவுன்சிலின் Skills Plus பாடநெறி உயர்கல்வி மற்றும் A/L இற்கு பின் பணிபுரியும் மாணவர்களின் தகவல் தொடர்பாடல் திறனை மேம்படுத்த உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது

| | 0 Comments |

பிரிட்டிஷ் கவுன்சில் உயர்தரப் பரீட்சைகளை நிறைவு செய்த மாணவர்களுக்காக தற்போது பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அதன் Skills Plus ஆங்கில பாடநெறிக்கான மாணவர் பதிவுகளை முன்னெடுத்து வருகிறது. மாணவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும், அவர்களின் ஆங்கில மொழித் திறனை வளர்த்துக் கொள்ளவும் இந்த பாடநெறி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் பாடசாலை மற்றும் தொழில் பாதை தொடர்பான திட்டங்களில் வாழ்க்கையின் முக்கியமான தெரிவுகளை மேற்கொள்ளும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு, அவர்களுக்கான வாழ்க்கைத் திறன்களுக்கு மேலதிகமாக வழங்கப்படுகிறது.

இப்பாடநெறியானது தங்களிடையே ஒரே எண்ணம் கொண்டவர்களைச் சந்திக்கவும், அவர்களுடன் பழகவும் வாய்ப்பளிப்பதுடன், பாடங்களை நிஜ வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்குப் பொருத்தமானதாகவும் உரிய வகையில் பொருந்தக்கூடியதாகவும் மாற்ற, திட்ட அடிப்படையிலான, செயற்பாட்டு ரீதியான கற்றல் நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. விளக்கக்காட்சிகள் அல்லது விளக்கவுரைகளை வழங்குதல், விவாதங்களில் பங்கேற்றல், குழு நிர்மாணம், டிஜிட்டல் கல்வியறிவு போன்ற பல்வேறு தகவல் தொடர்பாடல் திறன்களில் இது கவனம் செலுத்துகிறது. Skills Plus ஆனது, ஆரம்பநிலை முதல் மேம்பட்ட நிலை வரையான ஐந்து வெவ்வேறு நிலைகளை கொண்டுள்ளது. இதன் மூலம் தங்கள் திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

Young Learners and Adults (கற்றலில் ஈடுபடும் இளையவர்கள் மற்றும் பெரியவர்கள்) கற்பித்தல் நிலையத்தின் தலைவர் அஞ்சு மோசஸ் இது தொடர்பில் தெரிவிக்கையில், “இலங்கைச் சுற்றுலா அதிகாரசபையின் அபிவிருத்தித் திட்ட முன்மொழிவை உருவாக்குதல் அல்லது இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சமூக ஊடகங்களின் பாதுகாப்பான பயன்பாட்டை ஊக்குவித்தல் தொடர்பான பிரசாரத்தை வடிவமைத்தல் போன்ற நிஜ உலகத் திட்டங்களை மேற்கொள்வதற்காக, எமது மாணவர்கள் வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் இணைந்து பணியாற்றுகிறார்கள். இந்தத் திட்டங்களின் போது, மாணவர்கள் தங்களது ஆராய்ச்சித் திறன்கள், விமர்சிக்கும் சிந்தனை மற்றும் கூட்டுத் திறன்கள் ஆகியவற்றைக் கற்பதோடு, அது தொடர்பான பயிற்சியையும் பெறுவார்கள். இது அவர்களின் எதிர்கால கற்கைகள் மற்றும் தொழில்துறை வாழ்க்கையில் அவர்களுக்கு உதவியாக இருக்கும்.

நாடளாவிய ரீதியில் கற்பித்தல் நிலையங்களை நடாத்தி வரும் பிரிட்டிஷ் கவுன்சிலின் பிரதிப் பணிப்பாளர் ஹெலன் சைக்ஸ் கருத்து வெளியிடுகையில், “Skills Plus ஆனது, ஆங்கில மொழியைக் கற்பதற்கும் அப்பாற்பட்ட ஒரு விடயமாகும். இது இலங்கை மாணவர்கள் தங்கள் கல்விப் பாதை, தொழில் பாதை, வாழ்க்கையின் இலக்குகளை அடைவதற்காக தயார்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட, தங்களை பாடநெறியுடன் ஈடுபாட்டை ஏற்படுத்தக் கூடிய வகையிலான நேரடியான பாடநெறியாகும். பிரிட்டிஷ் கவுன்சிலின் உச்ச தகுதிகளைக் கொண்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளில் ஆங்கில மொழியைப் பயன்படுத்துவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய, நேருக்கு நேர் மற்றும் ஒன்லைன் மூலமான ஆங்கிலப் பாடநெறிகள் மூலம் நிபுணத்துவம் வாய்ந்த வழிகாட்டல்களை வழங்குகிறார்கள். பிரிட்டிஷ் கவுன்சில், 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஆங்கிலக் கல்வியை வழங்கி வருவதுடன், உலகம் முழுவதும் 100 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களி

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

පැල්වත්ත කිරි සමාගම කාන්තාවන් සවිබල ගන්වමින් සැමට සමාන අවස්ථා ලබා දීමට කැපවී සිටී.පැල්වත්ත කිරි සමාගම කාන්තාවන් සවිබල ගන්වමින් සැමට සමාන අවස්ථා ලබා දීමට කැපවී සිටී.

පැල්වත්ත කිරි සමාගම කාන්තා නායකත්වයෙන් යුතු පවුල් 100කට අධික සංඛ්‍යවක් සහ 1200කට අධික කිරි කර්මාන්තයේ නියුතු කාන්තාවන් පිරිසක් සවිබල ගන්වමින් කාලෝචිත සමාජ  ප්‍රයත්නයක් සඳහා කැපවී සිටී. ඒ අනුව පැල්වත්ත සමාගම විවිධත්වය පිළිගැනීම