𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz ‘Clogard Natural Salt’ அதன் டெப் அதிர்ஷ்ட ஊக்குவிப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு

‘Clogard Natural Salt’ அதன் டெப் அதிர்ஷ்ட ஊக்குவிப்புத் திட்டம் வெற்றிகரமாக நிறைவு

| | 0 Comments |

முன்னணி வாய்ச் சுகாதார பராமரிப்பு தரக்குறியீடான Clogard, அதன் Clogard Natural Salt Tab Wasana நுகர்வோர் ஊக்குவிப்பு திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இத்திட்டத்தின் மூலம், நாடு முழுவதிலும் உள்ள 30 அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு, Clogard Natural Salt இனால், அதிநவீன டெப்களை வழங்க முடிந்துள்ளது. வெற்றியாளர்களுக்கு அவர்களின் ஒன்லைன் கற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுவதோடு மட்டுமல்லாமல், இன்றைய டிஜிட்டல் உலகில் எப்போதும் ஒருங்கிணைந்த பகுதியாக காணப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த இதன் மூலம் அவர்களுக்கு உதவியுள்ளது. இந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலிகள், இப்பண்டிகை காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது!

இந்த ஊக்குவிப்புத் திட்டமானது, இரண்டு நோக்கங்களைக் கொண்டிருந்தது. ஒன்லைன் கற்றலை எளிதாக்குதல் எனும் இலக்கு மற்றும் Clogard Natural Salt மூலம் வாய்ச் சுகாதாரத்தில் இயற்கை உப்பு கொண்டுள்ள சக்தியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துதல் ஆகிய இரண்டுமே அவையாகும். அனைத்து வகையான வாய்ச் சுகாதாரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கும் இயற்கை கிருமிகொல்லி என்பதன் அடிப்படையில், உப்பானது தலைமுறை தலைமுறைகளாக வாய் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கான விண்ணப்பங்கள் ஓகஸ்ட் 01 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு நவம்பர் 30 ஆம் திகதி வரை ஏற்கப்பட்டிருந்தன. இக்காலப் பகுதியில் நாடு முழுவதிலும் இருந்து Clogard Natural Salt இற்கு ஏராளமான சமர்ப்பிப்புகள் கிடைக்கப்பெற்றன. இது போட்டித்தன்மையுடையதாக இருந்தபோதிலும், மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ளும் திறனுக்கும் ஆர்வத்திற்கும் இது ஒரு சான்றாக இருந்தது.

அனைத்து Tab வெற்றியாளர்களும் தங்களுக்கு கிடைத்த பரிசுகள் தொடர்பில் மகிழ்ச்சியடைந்ததுடன், Clogard Natural Salt இற்கு தங்களது நன்றிகளைத் தெரவித்திருந்தனர்.

வெற்றியாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், “எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய Clogard Natural Salt இற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் தற்போது எனது உயர்கல்வியை கற்று வருகிறேன், பெரும்பாலான விரிவுரைகள் மற்றும் பாடங்கள் ஒன்லைனில் நடத்தப்படுவதால், இந்த டெப் கணனியானது எனக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதற்காக நான் Clogard Natural Salt இற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த டெப்பை பயன்படுத்தி பார்க்க மிகவும் ஆர்வமாக உள்ளேன்.” என்றார்.

மற்றொரு வெற்றியாளர் தெரிவிக்கையில், “நான் வெற்றி பெற்றுள்ளேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்துள்ள எனக்கு கிடைத்த இந்த வாய்ப்பானது, எனதும் எனது கல்வியிலும் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துமென நான் நம்புகிறேன். Clogard Natural Salt இனது இந்த அற்புதமான முயற்சி தொடர்பில் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்கள் சமூகத்திற்கு எதையாவது திரும்பக் கொடுக்க விரும்பும் என நினைக்கும் ஒரு வர்த்தக நாமமாகும் என்பதை இது காட்டுகிறது” என்றார்.

இந்தத் திட்டம் தொடர்பான இறுதி வெளியீடு தொடர்பில் Clogard Natural Salt மகிழ்ச்சியடைந்துள்ளதுடன், எதிர்காலத்தில் இவ்வாறான செயல்பாடுகள் மூலம் பொதுமக்களை தொடர்ந்தும் சென்றடைய அது எதிர்பார்க்கிறது.

இந்த ஊக்குவிப்புத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த க்ளோகார்ட் சிரேஷ்ட வர்த்தகநாம முகாமையாளர் ரமிலா பெனாண்டோ தெரிவிக்கையில், “இந்த ஊக்குவிப்புத் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் காணப்பட்ட வரவேற்பு தொடர்பில் நாம் மிகப் பெருமிதத்துடன் மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன், ஆரோக்கியமான பல் ஈறுகள் மற்றும் வலுவான பற்களை பேணுவதற்காக, இயற்கை உப்பு கொண்ட Clogard Natural Salt பற்பசையைப் பயன்படுத்துவதன் நன்மைகள் பற்றிய விழிப்பூட்டலையும் மேற்கொள்ள எம்மால் முடிந்துள்ளது. Clogard ஆகிய நாம், இந்நிகழ்வின் அனைத்து வெற்றியாளர்களையும் வாழ்த்துவதுடன், இந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

Clogard Natural Salt தற்போது Hemas E-store களில் https://hemasestore.com/brand/clogard/ ஊடாக கிடைக்கிறது. மேலும் மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்களிலும் அதனை கொள்வனவு செய்யலாம்.

Hemas Consumer Brands ஆனது, வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் மிகப் பெரும் இலங்கை நிறுவனமாகும். 70 ஆண்டுகளுக்கும் மேலான உயர்ந்த பாரம்பரியத்துடன், வலுவான நோக்கம் கொண்ட தரக்குறியீடுகள் கொண்ட தயாரிப்புகள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம், நுகர்வோர் இதயங்களை அது வென்றுள்ளது. அது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட  புத்தாக்கம் மிக்க குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பில் அது பாராட்டைப் பெற்றுள்ளது.

பல முன்னணி தரக்குறியீடுகளை தன்னகத்தே கொண்டு வலுப்பெற்றுள்ள Hemas Consumer Brands ஆனது, Aya பெண்களின் சுகாதாரம், புற்றுநோயாளிகளுக்கான குமாரிகா சொந்துறு திரியவந்தி போலி சிகை நன்கொடைத் திட்டம், பேபி செரமியின் முற்போக்கான பெற்றோருக்குரிய முன்முயற்சி போன்ற பல சமூக ரீதியான திட்டங்களை முன்னெடுத்து, தனது முயற்சிகளின் மூலம் புதுமைகளை உருவாக்கி மக்கள் வாழ்க்கையில் இடம்பிடித்துள்ளது. Hemas Consumer Brands சிந்தனையின் மூலம் புரட்சிகரமான தயாரிப்புகளான Vivya பாரம்பரிய அரிசி அடிப்படையிலான சருமப் பராமரிப்பு தயாரிப்புகள் மாத்திரமன்றி இயற்கை மீது அக்கறை கொண்டு Dandex Handy, Kumarika Poddi ஷாம்பு வகைகளின் பொதியிடல் மூலம், ஒற்றை உபயோகப் பொதிகளின் பயன்பாட்டை இல்லாதொழித்து, பசுமையான தேசத்திற்கான அதன் அர்ப்பணிப்பை அது காண்பிக்கிறது. அந்த வகையில், அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் நிலைபேறான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கு பங்களிப்பதனை நோக்காகக் கொண்டு, நிறுவனம் பல வழிகளிலும் முற்போக்காக செயற்பட்டு முன்னணியில் திகழ்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

කිරි නිෂ්පාදන ක්ෂේත්‍රය වෙනුවෙන් රජය ගෙනා අයවැය යෝජනා පැල්වත්ත සමාගම අගයයි.කිරි නිෂ්පාදන ක්ෂේත්‍රය වෙනුවෙන් රජය ගෙනා අයවැය යෝජනා පැල්වත්ත සමාගම අගයයි.

මෙරට දැවැන්තම දේශීය කිරි නිෂ්පදකයා වන පැල්වත්ත සමාගම 2021 වසර සඳහා රජය විසින් ඉදිරිපත් කරන ලද අයවැය යෝජනාවන් හි දේශීය කිරි කර්මාන්තය ඇතුළු දේශීය ආහාර නිෂ්පාදනය හා නගා සිටුවීම වෙනුවෙන්