𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த Softlogic IT நிறுவனத்தின் புதிய இணையத்தளம்

வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த Softlogic IT நிறுவனத்தின் புதிய இணையத்தளம்

| | 0 Comments |

இலங்கையின் முன்னணி தொழில்நுட்ப வழங்குநர்களில் ஒருவரான Softlogic Information Technologies (Pvt) Ltd (Softlogic IT) நிறுவனம் அண்மையில் www.softlogicit.lk எனும் ஒரு புதிய இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் நிறுவனத்தின் சேவை வழங்கல்களின் முழு நோக்கமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளதோடு, வாடிக்கையாளர்களின் ஆதரவை அதிகரிப்பதற்கான அதன் அர்ப்பணிப்பும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை இலங்கைக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக திகழும் Softlogic IT நிறுவனமானது, உலகளாவிய தரக்குறியீடுகளுடனான அதன் முக்கியந்துவம் வாய்ந்த கூட்டாண்மையின் மூலம், தனியார் மற்றும் அரச துறைகளுக்கு புத்தாக்கமான வன்பொருள், மென்பொருள் மற்றும் நிறுவனம் சார்ந்த தீர்வுகளை வழங்கி வருகிறது.

புதிய இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, Softlogic IT நிறுவனமானது அடிப்படை முதல் மேம்பட்டது வரையான தொழில்நுட்பத் தீர்வுகளைத் தேடும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் உள்ளுணர்வுக்கு ஏற்ற வகையிலானதும், பயனர் நட்பு மிக்கதுமான அனுபவத்தை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது. நிறுவனம் தொடர்பில் வாடிக்கையாளர்கள் முழுமையாக அறிந்து கொள்ள அனுமதிப்பதன் மூலம், நிறுவனத்தின் நிலையையும், அதன் திறன்களையும் புரிந்து கொள்ள வழியமைக்கப்பட்டுள்ளது. தயாரிப்புகள் மற்றும் சேவைகள், தரக்குறியீடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு தெரிவுகளுடனும், எளிதாக அணுகக்கூடிய வகையிலான பயனர் இடைமுகத்துடனும் இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Softlogic IT நிறுவனம் வழங்கும் பரந்த அளவிலான சேவைகள் விரிவான தகவல்களுடன் இந்த இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. தரவு மையங்கள், தொடர்பாடல் வலையமைப்புகள், தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு, இறுதிப் பயனர் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய புதுமையான தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு தீர்வுகள் மூலம் நிறுவனம் இதற்கு வலுச் சேர்த்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு அவசியமான மற்றும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான மிக தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகள் கிடைக்கின்றன.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையத்தளம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ​​Softlogic IT நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி/ குழும பணிப்பாளர் ரொஷான் ரசூல், “எமது சொந்த இணையத்தளத்தை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இணையத்தளம் எமது நிறுவனத்திற்கு அபரிமிதமான மதிப்பை சேர்க்கும் என்பதுடன், இது Softlogic IT நிறுவனத்தின் முழு நோக்கத்தையும் வெளிப்படுத்தவும், வாடிக்கையாளர் மைய சேவைகளை மேம்படுத்தவும் உதவும். பெருநிறுவன உலகத்துக்கும், தனிநபர்களுக்கும் அவர்களின் தேவைகளுக்கு தகுந்தாற்போலான பல்வேறு வன்பொருள் மற்றும் மென்பொருள் தீர்வுகள் எம்மிடம் உள்ளன. எமது நிறுவனத் தீர்வுகள், சிறந்த தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய இணையத்தளத்தின் மூலம் எமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிந்துகொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்.” என்றார்.

Dell Technologies, Lenovo, Cisco, HP Aruba, VMware, Samsung, Microsoft, Huawei உள்ளிட்ட பயனர்களால் விரும்பப்படும் பல்வேறு புகழ்பெற்ற தரக்குறியீடுகளால் நிரம்பியுள்ளதன் காரணமாக, Softlogic IT நிறுவனமானது, சிறந்த தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக அறியப்படுகிறது. Softlogic IT நிறுவனத்தினால் வழங்கப்படும் விரிவான கண்ணோட்டத்தை புதிய இணையத்தளம் வெளிப்படுத்துவதுடன், ஒவ்வொரு பிரிவிலும் தொடர்புபட்டுள்ள உலகளாவிய பங்காளர்களை அது கோடிட்டுக் காட்டுகிறது.

“Softlogic IT நிறுவனமானது, இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மற்றும் நம்பகமான தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநராக இருக்க வேண்டுமெனும் தூரநோக்கின் அடிப்படையில் இயங்கி வருகிறது” என Softlogic IT நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் சிதந்த பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ​​“எமது புதிய இணையத்தளம், மதிப்புமிக்க வாடிக்கையாளர்களைச் சென்றடைவதன் ஊடாக அவர்கள் எமது நிபுணத்துவத்தைப் பயன்படுத்த அது உதவும். இணையத்தளத்தில் வெளியிடப்படும் தகவல்கள் மூலம், தொழில்நுட்பங்களின் புதுப்பிப்புகள், தொழில்நுட்பப் போக்குகள், வளர்ச்சிகள் போன்றன வாடிக்கையாளரைக் சென்றடைகின்றன. இது எமது வாடிக்கையாளர், எமது சேவை நோக்கத்தைப் பற்றி நன்கு புரிந்துகொள்ளவும், தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு நாம் எவ்வாறு பங்களிக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ளவும் உதவும். ஒன்லைன் கொள்வனவுக்கான கட்டண நுழைவாயில்களை (payment gateway) இணைப்பதன் மூலமும், தொழில்நுட்ப முன்னேற்றங்களில் மிக அண்மைய விடயங்கள் பற்றிய பெறுமதி மிக்க உள்ளார்ந்த விடயங்களை வழங்கும் வகையிலான, ஒரு தகவல் வழங்கல் அமைப்பை (newsfeed) வழங்குவதன் மூலமும் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

Softlogic Holdings நிறுவனத்தின் துணை நிறுவனமான Softlogic Information Technologies ஆனது, தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்குவதில் முன்னோடியாக உள்ளதுடன், இலங்கைக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் (ICT) தயாரிப்புகளை இறக்குமதி செய்வதில் முன்னணியில் உள்ளது. பல ஆண்டுகளாக, பல்வேறு விருது வழங்கும் நிகழ்வுகளில் நிறுவனத்திற்கு, அதன் சிறந்த செயல்திறனுக்காக பல்வேறு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு, அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளது. இன்று, Softlogic IT நிறுவனமானது, இலங்கையிலுள்ள பல்வேறு பெரு நிறுவனங்களின் தகவல் தொடர்பாடல் (IT) மற்றும் டிஜிட்டல் உருமாற்ற பங்காளியாக மாறியுள்ளதன் மூலம் உலகளாவிய ரீதியிலான தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை உள்நாட்டில் வழங்க உறுதி பூண்டுள்ளது. வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட நிறுவனம் எனும் வகையில் Softlogic IT நிறுவனமானது, நாடளாவிய ரீதியில் உள்ள காட்சியறைகள், விநியோகத்தர்கள் மற்றும் துணை விநியோகத்தர்கள் மூலம் வாடிக்கையாளர்களின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் (ICT)  தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, நம்பகமான உத்தரவாதங்களை வழங்குவதனாலும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

காயத்ரி ஷானை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்த HUTCHகாயத்ரி ஷானை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்த HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரோட்பேண்ட் சேவை வழங்குநரான HUTCH, பிரபல சமூக ஊடக பிரபலமும், திரை நட்சத்திரமுமான காயத்திரி ஷானை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்துள்ளது. இந்த நியமனத்தின் மூலம் HUTCH இன் சேவைகளை பயன்படுத்த தயாராகி வரும் இலங்கை தமிழ்