𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz Fems AYA: மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு – முதலாவது நாடளாவிய முயற்சி

Fems AYA: மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு – முதலாவது நாடளாவிய முயற்சி

| | 0 Comments |

Hemas Consumer நிறுவனத்துக்குச் சொந்தமான பெண்களின் சுகாதார பராமரிப்பு தொடர்பான முன்னணி தயாரிப்பான Fems, மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் பல கூட்டாளர்களுடன் இணைந்து, நாடு தழுவிய ரீதியலான விழிப்புணர்வு பிரச்சாரமொன்றை  முன்னெடுத்துள்ளது.

மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வூட்டுவதும், ஒவ்வொரு பெண்ணும் உயர்தர சுகாதார துவாய்களை பெறுவதில், சமமான அணுகலை வழங்குவதை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட Fems “AYA” திட்டமானது, சர்வதேச மகளிர் தின கொண்டாட்டடத்தை ஒட்டியவாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் பிரதம விருந்தினராக, முதன்மை சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே கலந்து கொண்டார்.  

மாதவிடாய் ஆரோக்கியம் குறித்து, நீண்ட காலமாக நிலவும் மாயையான, தவறான எண்ணங்களை களைவதற்கு, இலங்கை பெண்களின் பொரும்பாலானோருக்கு அது தொடர்பில் தெளிவூட்டுவதற்கும், ARKA initiative, டில்மாவின் மெரில் ஜே. பெனாண்டோவின் MJF Foundation, சர்வோதயா மகளிர் இயக்கம் மற்றும் Sarvodaya-Fusion ஆகியவற்றுடன் Fems இணைந்துள்ளது. அறிவைப் பெறுவதற்கான இடைவெளியை நிவர்த்தி செய்வதன் மூலம், பெண்கள் சுகாதார துவாய்களை பயன்படுத்த ​​இம்முயற்சி ஊக்குவிக்கிறது. காரணம் மாதவிடாய் காணப்படும் பெண்களில் பெரும்பாலானோர், சுகாதார துவாய்களை பயன்படுத்தாதவர்களாக இருப்பதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Arka Initiative அமைப்பானது, இலங்கையில் பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான சுகாதார பிரச்சினைகள் குறித்து செயல்படும் ஒரு அமைப்பாகும். இது இளம் மருத்துவர்கள், உளவியலாளர்கள், சட்டத்தரணிகள், ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழுவினால் வழிநடத்தப்படுகிறது. Arka Initiative இனது, முக்கிய நோக்கங்களில் ஒன்றாக, இளம் பெண்களுக்கு மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்தல் தொடர்பில் அவசியமான போதிய அறிவு மற்றும் கருவிகள் தொடர்பில் தெளிவூட்டுவதாகும். MJF Foundation உடனான கூட்டிணைவானது, ARKA Initiative இன் ஆதரவுடன் 10,000 இற்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர் குடும்பங்களை விழிப்பூட்ட Fems இற்கு உதவியுள்ளது. MJF Foundation ஆனது, விசேட தேவையுடைய மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களுக்கு உதவிகள், தொண்டு முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் மூலம், இலங்கையர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான முயற்சியின் மூலம் இலங்கையர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு வழி வகுத்துள்ளது. இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்தை, நாடு முழுவதும் காணப்படுகின்ற, பெண்கள் வலையமைப்பான சர்வோதயா பெண்கள் இயக்கம் மூலம் கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்த Fems விரும்புகிறது.  பெண்களின் பிரச்சினைகளை கையாள்வதிலும், அவர்களின் அறிவை மேம்படுத்துவதன் மூலம் பெண்களை மேம்படுத்துவதிலும் அவ்வியக்கத்தின் பல ஆண்டு அனுபவம் ஆனது, இம்முயற்சியை முன்னோக்கி நகர்த்துவதற்கு தேவையான உந்துதலை வழங்குகிறது. அபிவிருத்தி தொடர்பான முயற்சிகளுக்காக தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை (ICT) பயன்படுத்தி வரும் Sarvodaya-Fusion ஆனது, தற்போது டிஜிற்றல் சகாப்தத்தில் வாழும் பெண்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கை குறித்தான ஒன்லைன் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்துவதற்கு உதவியாக அமைகின்றது.

முதன்மை சுகாதார, தொற்றுநோய் மற்றும் கொவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே இந்நிகழ்வில் கலந்து கொண்டமையானது இந்நிகழ்விற்கு பெரும் உத்வேகமாக அமைந்ததோடு, இதன்போது கருத்துத் தெரிவித்த அவர், “ஹேமாஸ் போன்ற ஒரு முன்னணி தனியார் துறை நிறுவனமானது, ஒரே விடயம் தொடர்பில் ஆர்வத்தைக் கொண்ட பல நிறுவனங்களுடன் இணைந்து, அறிவைப் பெறுவதற்கான நீண்டகால இடைவெளியை நிறைவேற்றுவது தொடர்பான, இவ்வாறான சமூக பொறுப்பை வழிநடத்த முன்வந்துள்ளமையை இட்டு, நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த முயற்சி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கும் வகையில் பெண்களை மேம்படுத்துவதற்கான உந்துதலை வழங்கும். இம்முயற்சி வெற்றிகரமாக அமைய, ஹேமாஸ் மற்றும் அதன் கூட்டாளர்களுக்கும் வாழ்த்துகைளத் தெரிவிக்க இவ்வாய்ப்பை பயன்படுத்துகிறேன். ” என்றார்.

நாடளாவிய ரீதியிலான இம்முயற்சியுடன் இணைந்தவாறு, இலங்கை பெண்களுக்கு ஏதுவான வகையில் அமைந்த சுகாதார துவாய்களை வழங்குவதற்கான தீர்வாக, ஒரு புதிய சுகாதார துவாயை Fems அறிமுகப்படுத்தியுள்ளது. பயன்படுத்துபவருக்கு உச்ச சௌகரியத்தை வழங்கும் வகையிலான, மென்மையான பருத்தி மேற்பரப்பை கொண்டவாறு தயாரிக்கப்படும் Fems Aya சுகாதார துவாய்கள், சந்தையில் கட்டுப்படியாகும் விலையில் விரைவில் கிடைக்கவுள்ளது.

இவ்வறிமுக நிகழ்வின் போது, ​​ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழுவின் பிரதான நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சன் கருத்து வெளியிடுகையில், “இதுவொரு சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட முயற்சி என்பதோடு, தற்போது இலங்கையில் பெரும்பாலான பெண்களுக்கு, பல்வேறு காரணங்களால் சுகாதார துவாய்களை பெற முடிவதில்லை. Fems Aya முயற்சியானது, பெண்களின் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வழிநடத்துதல் மற்றும், அவர்கள் தங்கள் உண்மையான திறனை அடைய தடுக்கின்றதுமான, மாதவிடாய் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய உதவுகிறது. ஒரு ஆரோக்கியமான தேசத்தை ஊக்குவிப்பதை நோக்காகக் கொண்டுள்ள, ஒரு சமூக பொறுப்புள்ள தரக்குறியீடான Fems, அதன் Fems Aya முயற்சித் திட்டத்தின் மூலம் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைத்து மட்டத்திலான பெண்களையும் வலுவூட்டும். ” எனத் தெரிவித்தார்.

Fems ஆனது, ஒரு முன்னணி சுகாதார பராமரிப்பு தயாரிப்பாகும். ஹேமாஸ் கன்சியுமர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும் இதன் உற்பத்திகள், தோலியல் தொடர்பான பரிசோதனை செய்யப்பட்டு, SLS சான்றிதழ் அங்கீகாரம் பெற்றதாகும். அது தொடர்பான சான்றிதழைக் கொண்டுள்ள ஒரேயொரு சுகாதார பராமரிப்பு தயாரிப்பாக Fems காணப்படுவதால், அது அனைத்து வயதிலான பெண்களினாலும் மிகவும் விரும்பப்படும் தரக்குறியீடாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு இலங்கை பெண்ணுக்கும் உச்சபட்ச வசதியை வழங்கும் நோக்கில், அதன் புதுமையான தயாரிப்புகளை வழங்குவதற்காக Fems தன்னை அர்ப்பணித்துள்ளது. இதன் மூலம் பெண்கள் நம்பிக்கையுடன் முன்னோக்கி செல்ல வழி வகுக்கிறது. அனைத்து Fems தயாரிப்புகளும், உயர் ரக மூலப் பொருட்களை பேணியவாறு, மிக உயர்ந்த தரத்தில் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன் அவை சௌகரியம், பாதுகாப்பு, உள்ளார்ந்த தூய்மை ஆகியவற்றை வழங்குவதற்காக விஞ்ஞான ரீதியில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

எமது நோக்கத்திற்காக வாழ்வோம்: Hemas நிறுவனத்திற்குள் ஆரோக்கிய துவாய் விநியோகத்தின் மூலம் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதார விடயங்களை இயல்பாக்கும் Fems Ayaஎமது நோக்கத்திற்காக வாழ்வோம்: Hemas நிறுவனத்திற்குள் ஆரோக்கிய துவாய் விநியோகத்தின் மூலம் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதார விடயங்களை இயல்பாக்கும் Fems Aya

முன்னணி பெண்கள் சுகாதார வர்த்தக நாமமான Fems, கடந்த 2021 மார்ச் மாதத்தில், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நடைமுறைகள் குறித்து பெண்களுக்கு தெளிவுபடுத்தும் மற்றும் மலிவான விலையில் ஆரோக்கிய துவாய்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் ஆகிய இரு தனித்துவமான குறிக்கோள்களுடன் ஒரு