𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz IDH சுகாதார பராமரிப்பு நாயகர்கள் கௌரவிக்கப்பட்டனர்

IDH சுகாதார பராமரிப்பு நாயகர்கள் கௌரவிக்கப்பட்டனர்

| | 0 Comments |

கொவிட் – 19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டம் இலங்கை உட்பட முழு உலகிலும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, நோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்களவு வெற்றிகரமாக செயற்பட்டுள்ளது. அங்கொடையில் உள்ள தொற்று நோய் மருத்துவமனை (IDH) நாட்டில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கை வகித்துள்ளது, அங்குள்ள ஊழியர்களின் தீவிரமான அர்ப்பணிப்பு மற்றும் அவர்கள் செய்த பல தியாகங்கள் நிச்சயமாக தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளன.

கொவிட் – 19 இற்கு எதிரான இந்த போராட்டத்தில் சுகாதார பராமரிப்பு ஊழியர்கள் மேற்கொண்ட தியாகங்கள் தொடர்பில் இலங்கைப் பிரஜைகள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நாயகர்கள் கணிசமான தனிப்பட்ட தியாகங்களைச் செய்துள்ளனர். தங்கள் சொந்த பாதுகாப்பில் சமரசம் செய்துள்ளதுடன், அதிக நேரம் வேலை, தங்களை மிகுந்த மன அழுத்தத்திற்கும் பதற்றத்திற்கும் உட்படுத்தியுள்ளமை மட்டுமன்றி, கடந்த பல மாதங்களாக தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக கடினமான முடிவுகளை அவர்களால் எடுக்க வேண்டியிருந்தமையை DIMO அறிந்து கொண்டது. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு பருவத்தில் மற்றவர்கள் அனைவரும் வெளியே சென்று கொண்டாடிக் கொண்டிருந்த போது, அவர்களின் தியாகங்கள் இன்னும் அதிகமாக சவாலுக்குட்படுத்தப்பட்டது. அவர்கள் IDH வளாகத்திற்குள் தங்கியிருந்ததுடன், உயிரைக் காப்பாற்ற போராடுவதற்கும், நாட்டிற்கு தங்கள் கடமையைச் செய்வதற்கும் உறுதிபூண்டிருந்தனர். எனவே, இவ்வளவு நீண்ட காலத்திற்கு சுகாதார ஊழியர்கள் தினமும் அனுபவிக்கும் உடல் மற்றும் உள ரீதியான சுமை வியக்கத்தக்கது.

இந்த சுகாதார பராமரிப்பு நாயகர்களை கௌரவிக்க DIMO  முன்வந்ததுடன், இதற்கான நிகழ்வு இறுக்கமான சுகாதார வரைமுறைகளுக்குட்பட்டு ஜனவரி முதலாம் திகதியன்று IDH வளாகத்தில் எளிமையான முறையில் இடம்பெற்றதுடன், இதன்போது அவர்களை கௌரவிக்கும் முகமாக வெகுமதியும் வழங்கப்பட்டது. ஒரு பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை குடிமகனாக DIMO நிறுவனமானது, இந்த சுகாதாரபராமரிப்புத் துறை நாயகர்களை பாராட்டி, இந்த நிச்சயமற்ற நேரத்தில் தமது ஆதரவை வெளிப்படுத்த விரும்பியது. அவர்களது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பாராட்டும் மற்றும் தாய்நாட்டிற்கான அவர்களது துணிச்சலான முயற்சிகளை அங்கீகரிகரிக்கும் முகமாக, உதவியாளர் முதல் IDH இன் பணிப்பாளர் வரை மொத்தமாக 530 ஊழியர்களுக்கு, BLACK  + DECKER வீட்டு உபயோகப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் PPE வழங்கி வைக்கப்பட்டன.

DIMO வின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்ஜித் பண்டிதகே IDH ஊழியர்களுக்கு விஷேட தகவலை அனுப்பி குறிப்பிடுகையில், “உங்களது அயர்வுறாத அர்ப்பணிப்பு, முயற்சி, தைரியம் என்பன உயிராபத்துமிக்க வைரஸின் தாக்கத்தைக் குறைத்துள்ளதுடன், கட்டுப்படுத்தக்கூடிய அளவிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த அன்பளிப்பானது, நாம் ஒரு நாடாக, உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கின்றோம் என்பதை மீளுறுதி செய்வதற்காகும். ‘எமது நாயகர்களே’ உங்களுக்கு மிகப் பெரிய நன்றிகள்,” என்றார். இந் நிகழ்வில், மருத்துவ விஞ்ஞான பிரிவின் தலைமை செயல் அலுவலர் பிரியந்த திசாநாயக்க மற்றும் சிரேஷ்ட கணக்காளர் இஷார தனசூரிய ஆகியோர் DIMO நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தனர்.

பட விளக்கம்

சுகாதாரபாராமரிப்பு ஊழியர்களை கௌரவிக்கும் முகமாக அன்பளிப்புகள் வழங்கி வைக்கப்பட்ட போது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

இலாபத்திற்கானதல்லாத கூட்டமைப்பு சிறுவர்களுக்கான இணையப்பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது LEADS, Save the Children International மற்றும் World Vision Lanka என்பன நிகழ்நிலை வன்முறையை முடிவுறுத்துவதில் தமது வீச்சினையும், விளைவுகளையும் வியாபித்துள்ளனஇலாபத்திற்கானதல்லாத கூட்டமைப்பு சிறுவர்களுக்கான இணையப்பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது LEADS, Save the Children International மற்றும் World Vision Lanka என்பன நிகழ்நிலை வன்முறையை முடிவுறுத்துவதில் தமது வீச்சினையும், விளைவுகளையும் வியாபித்துள்ளன

இலங்கையிலுள்ள பாதிக்கப்படத்தக்க சமூகங்களுடன் பணிபுரியும் இலாப நோக்கற்ற அமைப்புக்களான, LEADS, Save the Children International மற்றும் World Vision Lanka என்பன, இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு எதிரான நிகழ்நிலை வன்முறைகள் மற்றும் சுரண்டல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் தமது வீச்சு மற்றும் விளைவுகளை

இளம் மாணவர்களுக்காக கற்பித்தல் மையங்களை மீண்டும் திறக்க British Council திட்டமிட்டுள்ளதுஇளம் மாணவர்களுக்காக கற்பித்தல் மையங்களை மீண்டும் திறக்க British Council திட்டமிட்டுள்ளது

இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலாகிய (British Council) நாம், எதிர்வரும் 2022 ஜனவரி 07ஆம் திகதி முதல், கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தறை ஆகிய இடங்களில், நேருக்கு நேர் கற்பிக்கும் வகுப்புகளை நடாத்துவதற்காக, எமது கற்பித்தல் மையங்களை மீண்டும் திறக்கத் தயாராகி வருவதில்