𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz முதலாவது டிஜிட்டல் வருடாந்த பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ள SLASSCOM

முதலாவது டிஜிட்டல் வருடாந்த பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ள SLASSCOM

| | 0 Comments |

மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் இலங்கை சங்கமான SLASSCOM, அறிவு மற்றும் புத்தாக்கத்திற்கான கழகமாக விளங்குவதுடன், தனது முதலாவது பொதுக்கூட்டத்தை microsoft team இன் அனுசரணையுடன் 30 ஆனி 2020 ஆம் திகதி நடத்தியது. இந்தப் பொதுக்கூட்டத்தில், SLASSCOM 2020/21 ஆம் ஆண்டிற்கான தனது புதிய தலைவர்,  பணிப்பாளர் சபை மற்றும் பொது சபையை  தெரிவுசெய்தது.

முன்னாள் தலைவர், ரணில் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், ‘பத்து வருடங்களுக்கு முன் சிறிய தொடக்கங்களிலிருந்து, இன்று SLASSCOM ஆனது அறிவு மற்றும் புத்தாக்கத்திற்கான கழகமாக திகழ்வதுடன் தகவல் தொழில்நுட்பம் BPM ஆகிய துறைகளை ஊக்குவித்தல், திறமை வாய்ந்த மனித வளம் மிக்க நாடாக அடையாளப்படுத்தல், மனிதவள விரிவுபடுத்தல் மற்றும் திறமை மேம்படுத்தல், மற்றும் தொழில்துறை, கல்வியுலகு, அரசாங்கம் ஆகியவற்றுக்கிடையிலான வலிமை வாய்ந்த பிணைப்பாக திகழ்ந்து தொழில்துறையை முன்னோக்கி நகர்த்துகிறது. மேலும் இதன் புது தலைவரையும் குழுவையும் வாழ்த்துவதுடன் SLASSCOM மானது இத்தொழில் துறையின் வளர்ச்சி மற்றும் இலங்கையை அறிவு செயல்முறை , உயர்நிலை தயாரிப்பு பொறியியல் மற்றும் அறிவுசார் சொத்து உரிமையாண்மை (IP) உருவாக்கம் போன்றவற்றில் சிறந்த சர்வதேச நிலையமாக மாற்றுவதில் தொடர்ந்தும் ஈடுபடும் என எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

SLASSCOM இன் புதிய தலைவராக சன்ன மனோகரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். புதிதாக தெரிவுசெய்யப்பட்ட பணிப்பாளர் குழுவில் உள்ளடங்கியவர்கள் : சாண்ட்ரா டீ சொய்ஸா – பிரதி தலைவர் , ஆஷிக் அலி – பிரதி தலைவர், சேவன் குணதிலக்க – செயற்பாடுகளுக்கான பணிப்பாளர், ஜெகன் பேரின்பநாயகம்- நிதிப் பணிப்பாளர், ஹரிது அபேகுணரத்ன, நுவான் பெரேரா , நிஷான் மெண்டிஸ், ஷெஹானி செனவிரத்ன, ஷீராஸ் லயே, போஷன் தயாரத்ன, மற்றும் அனுர டீ அல்விஸ்.

பங்கேற்பாளர்களின் முன் புதிய தலைவர் சன்ன மனோஹரன் “SLASSCOM மின் தலைவராக பணி புரிவது மிகப்பெரிய மரியாதையும் வரப்பிரசாதமுமாகும். நாங்கள் சவாலான காலகட்டத்தில் கடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் , எம் கவனம் எங்களின் பங்குதாரர்கள் நாளை தொழில் துறைகளையும் நிறுவனங்களையும் கட்டியெழுப்பி வளர்ச்சியடையச் செய்வதற்கு உதவுவதாகும். எங்களுடைய தொழில் துறையின் கண்ணோட்டம் திடமானதாக உள்ளதுடன் நாங்கள் எங்களுடைய முக்கிய சந்தைகளில் அதிகரித்துவரும் டிஜிட்டல் மயமாக்கல் மூலம் அதிகரித்துள்ள வாய்ப்புகளினால் எமது தொழில் துறையானது வளர்ச்சி பெறும் என நம்பிக்கையும் கொண்டுள்ளோம். எங்களுடைய முக்கிய கவனமானது சந்தை விரிவாக்கம், இலங்கை உருவாக்கல் பொறியியல் மற்றும் அறிவுசார் சொத்து உரிமையாண்மை (IP) உருவாக்கல் திறமைகளில் இலங்கையின் நிலையை உயர்த்துதல், மற்றும் வருங்கால தலைமுறை நிறுவனங்களை ஊக்குவிக்கும் ஒரு சூழலை உருவாக்குவதில் உதவுதல் என்பனவாகும். நாங்கள் சர்வதேச நிறுவனங்களை இலங்கையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள கவருவதற்கும், கல்வியில் புதுமுறைகள் மூலம் எமது தொழில் துறைக்கு உதவ திறமைகளிற்கு சரியான வழியமைப்பதில் செல்வாக்கு செலுத்துவதற்கும் அரசாங்கத்துடனும், கல்வியுலகுடனும் கை கோர்க்கும் எண்ணத்தில் உள்ளோம்,” எனக் குறிப்பிட்டார்.

SLASSCOM பொது சபைக்கு அங்கத்துவ நிறுவனங்களிலிருந்து வழங்கப்பட்ட நியமனங்கள் அங்கீகரிக்கப்பட்டது. 2020/21 ஆம் ஆண்டிற்கான பொதுசபை பின்வருமாறு : சம்பத் ஜெயசுந்தர,  முதித் உஸ்வத்த, ஷனக பெர்னாண்டோ, ரொஹான் பெர்னாண்டோ, சமில் ஜீவந்த, ஷெஹான் குமார், சிசிர குமார, ஜனித் குணசேகர, ஹசித் யகஹாவிட, ஷெஹான் செல்வநாயகம், திலீஷா ராஜபக்ஷ  , ஜகத் டீ சில்வா, மங்கல பெரேரா, தரிந்து அதிகாரி, ரஹல் ஜெயவர்தன, ஜெஹான் டயஸ், ஹரேஷ் பெரேரா, தரிந்திர ஜயமஹா, பிரியந்த பெத்மகே, பெரோஸ் காதர், மற்றும் சன்ஹர்ஷ ஜயதிஸ்ஸ.

நாங்கள் அவர்களுக்கு வெற்றிகரமான வருடமாக அமைய வாழ்த்துகிறோம்

SLASSCOM பற்றி

SLASSCOM இலங்கையின் அறிவு மற்றும் புத்தாக்கத்திற்கான தொழில் துறையின் தேசிய சம்மேளனமாக திகழ்வதுடன், வர்த்தகம் மற்றும் வியாபார செயற்பாடுகளை ஊக்குவித்தல், கல்வி மற்றும் தொழில் வாய்ப்பினை ஏற்படுத்தல், ஆய்வுகள் மற்றும் புத்தாக்கம் போன்றவற்றிற்கான ஊக்குவிப்பு நிறுவனமாகவும் தொழிற்படுவதுடன், IT/BPM தொழில் துறையின் வளர்ச்சிக்குரிய தேசிய கொள்கையின் கட்டமைப்பை உருவாக்குவதிலும் உதவுகிறது. SLASSCOM கற்பனை பொருளாதாரத்தை நோக்கி கொண்டுசெல்கிறது: இலங்கை தொழில் துறையின் எதிர்காலமாகத் திகழ்வதுடன் இலங்கையின் முதல் நிலை ஏற்றுமதி வருவாய் ஈட்டும் துறையாக வரக்கூடிய சாத்தியத்தன்மையையும் கொண்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Fems AYA: மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு – முதலாவது நாடளாவிய முயற்சிFems AYA: மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு – முதலாவது நாடளாவிய முயற்சி

Hemas Consumer நிறுவனத்துக்குச் சொந்தமான பெண்களின் சுகாதார பராமரிப்பு தொடர்பான முன்னணி தயாரிப்பான Fems, மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் தொடர்பான மிக முக்கியமான பிரச்சினைகள் தொடர்பில் பல கூட்டாளர்களுடன் இணைந்து, நாடு தழுவிய ரீதியலான விழிப்புணர்வு பிரச்சாரமொன்றை  முன்னெடுத்துள்ளது. மாதவிடாய்

හච් “ගමට සන්නිවේදනය” වැඩසටහන හා එක්ව ග්‍රාමීය සිසුන් දහසකට වැඩි පිරිසකට අන්තර්ජාල සම්බන්ධතාවය ලබාදෙන වෙනිවැල්ආර සන්නිවේදන කුළුණ විවෘත කරයිහච් “ගමට සන්නිවේදනය” වැඩසටහන හා එක්ව ග්‍රාමීය සිසුන් දහසකට වැඩි පිරිසකට අන්තර්ජාල සම්බන්ධතාවය ලබාදෙන වෙනිවැල්ආර සන්නිවේදන කුළුණ විවෘත කරයි

ජංගම දුරකථන බ්‍රෝඩ්බෑන්ඩ් සේවාවන් සඳහා ශ්‍රී ලාංකේය පාරිභෝගිකයින් අතර වඩාත් ප්‍රියතම තේරීම වන හච්, භූගෝලීය අභියෝග ජය ගනිමින් දීපව්‍යාප්ත ආවරණ ජාලයක් වෙනුවෙන් වන තම කැපවීම තවදුරටත් පෙරට රැගෙන යමින් ශ්‍රී

ස්වදේශී කොහොඹ බේබි, හැටන් නැෂනල් බැංකුව හා එක්ව අලුත උපන් බිළිඳුන්, මෙලොවට බිහි කළ මව්වරුන්ට තිළිණ ලබා දෙයිස්වදේශී කොහොඹ බේබි, හැටන් නැෂනල් බැංකුව හා එක්ව අලුත උපන් බිළිඳුන්, මෙලොවට බිහි කළ මව්වරුන්ට තිළිණ ලබා දෙයි

දශක 08ක විශ්වාසය දිනා ගත්  ශ්‍රී ලංකාවේ අංක එකේ ශාකසාර සත්කාර නිෂ්පාදනයේ පුරෝගාමියා ස්වදේශී කොහොඹ, සිය ළදරු සබන් සන්නාමය වන ස්වදේශී කොහොඹ බේබි සබන් හා හැටන් නැෂනල් බැංකුව සමඟ සහයෝගිත්වයෙන්