𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz ,வங்கி சாராத நிதித்துறையில் ஒரு கட்டுப்பாட்டாளராக செயல்பட்டு, ஒரு முறையான நிதி அமைப்பு மூலம் பொதுமக்களை மேம்படுத்துவதில் FHA உறுதிபூண்டுள்ளது

,வங்கி சாராத நிதித்துறையில் ஒரு கட்டுப்பாட்டாளராக செயல்பட்டு, ஒரு முறையான நிதி அமைப்பு மூலம் பொதுமக்களை மேம்படுத்துவதில் FHA உறுதிபூண்டுள்ளது

| | 0 Comments |

The Finance Houses Association of Sri Lanka  (FHA) சங்கமானது, நெறிமுறையை பின்பற்றும் நிதி நடைமுறைகளுடன் தேசத்தை தொடர்ந்து வலுவூட்டுவதுடன், வங்கி சாராத நிதித்துறையின் மத்தியஸ்தராக செயற்படுவதாக அறிவித்துள்ளது. இச் சங்கமானது, 1958 ஆம் ஆண்டு அதன் தொடக்கத்திலிருந்து, ஒழுங்குபடுத்தப்படாத நிதி நிறுவனங்களின் ஊழல் மிகுந்த நடைமுறைகளிலிருந்து பொது மக்களைப் பாதுகாப்பதிலும், நாட்டின் வங்கி சாரா நிதித் துறையின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதிலும் முக்கிய பங்கை ஆற்றியுள்ளது.

இச் சங்கத்தின் சட்ட வட்டம், இணக்க அலுவலகம் மற்றும் மனித வள மன்றம் ஆகியவை பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட அதிகாரிகளுக்கு ஒரு மன்றத்தை வழங்குகிறது. மேலும், அதன் உறுப்பு நிறுவனங்களுக்கு சிறந்த நடைமுறைகளை பரிந்துரைக்கின்றன.

மத்திய வங்கி, பிற ஒழுங்குபடுத்தல் அமைப்புகள், அமைச்சுகள் மற்றும் வர்த்தக சம்மேளனம் ஆகியவற்றின் அதிகாரிகளுடான கலந்துரையாடல்களில் உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் FHA தற்போது ஈடுபட்டுள்ளது. மேலும், இச் சங்கமானது ஊழியர்களுக்கான பயிற்சி திட்டங்கள், ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்களின் நன்மதிப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களின் (RFC) சமூகங்களிடையே  நட்புறவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளது.

முறையான ஆவணங்கள் இன்மையால் வங்கிகளை அணுக முடியாத பின் தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழில் முயற்சியாளர்களுக்கு மிகவும் தேவையான உதவிகளை வழங்கும் சிறிய மற்றும் நடுத்தர வணிக முயற்சிகள் மற்றும் பின் தங்கிய உள்ளடக்க நிதியத்துக்கு, மேல் மாகாணத்திற்கு வெளியே நிகர கடன் வழங்குநராக CFC துறை செயல்படுகிறது. வங்கி அல்லாத நிதி நிறுவன (NBFI) துறை நிதி தேவையுள்ள, ஆனால் வங்கித் துறைக்கு தேவையான முறையான ஆவணங்கள் இல்லாத முதல் முறையாக கடன் வாங்குபவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஒரு முக்கியமான பங்கை வகிக்கின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த FHA வின் தலைவர் ஆர்.எச்.அபேகுணவர்தன, ” உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களுடன் NBFI  துறையின் எல்லைப் பரப்புக்குள் அதிக வாய்ப்புகளைப் பெற்று வெற்றிகரமான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் FHA நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  இந்தத் தொழிற் துறையானது மிக விரைவாக முன்னேறி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், மக்களின் வாழ்வாதாரத்தையும் தனிநபர் வருமானத்தையும் உயர்த்த அதன் ஆதரவை வழங்கியுள்ளது. மேலும், நிதியிடல், இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொள்ளல், முதலீட்டுக்கான இலாபகரமான வாய்ப்பு என மேலும் பல நன்மைகளை வழங்குகின்றது,” என்றார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,”சாதாரண வங்கித் துறையிலிருந்து பொதுவாக விலக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்கு சேவை செய்வதில் உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. பொதுவாக சிறிய தனிநபர் கடன்களை வழங்குதல், இரு / மூன்று சக்கர வாகனங்களுக்கு நிதியளித்தல், டிரக் நிதி, பண்ணை உபகரணங்களுக்கான நிதியளித்தல், பயன்படுத்தப்பட்ட வணிக நோக்கிலான வாகனங்கள் / இயந்திரங்களை வாங்குவதற்கான கடன்கள், பாதுகாப்பான / பாதுகாப்பற்ற தொழிற்படு மூலதன நிதி போன்ற நிதி சேவைகளை வழங்குவதில் பொதுவாக LFCக்கள்  ஈடுபட்டுள்ளன. LFCக்கள், வணிகத் தேவைகளுக்கு மிகவும் ஏற்ற நுண், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) புத்தாக்கமான நிதி சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாக கருதப்படுகிறது.

இலங்கையின் வங்கி சாரா நிதித் தொழிற்துறையானது வேகமாக வளர்ந்துள்ளதுடன் 2013 ஆம் ஆண்டில் RFC இன் மொத்த சொத்துத் தளம் 622 பில்லியன் ரூபாவாக இருந்தது. ஆறு வருட காலத்திற்குள், இது ரூபா 1.390 டிரில்லியன் வரை அதிகரித்தது. அதே காலகட்டத்தில், ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்களின் (RFC’s) கடன்கள் மற்றும் முற்பணங்கள் 471 பில்லியன் ரூபாயிலிருந்து, 1.066 டிரில்லியன் ரூபாவாக வளர்ச்சியடைந்துள்ளது. இந்த 60 வருடகால தொழிற்துறையானது தற்போது ஏழு மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதுடன், அதில் 57-60% கடன் பெறுநர்களையும்,  40-43% வைப்புத்தொகையாளர்களாகவும் கொண்டுள்ளது. அதேவேளை 32,000 ஊழியர்களையும் கொண்டுள்ளது.

NBFI தொழிற்துறையானது பிரதானமாக பொது வைப்புகள் (50%-55%), வங்கிக் கடன் (25%-30%) மற்றும் பங்குதாரரின் மூலதன உட்செலுத்துதல் (8%-12%) மூலம் நிதியளிக்கப்படுகிறது. இது 31 பட்டியலிடப்பட்ட மற்றும் 8 பட்டியலிடப்படாத நிதி நிறுவனங்களைக் கொண்டுள்ளது. தொழில்துறையில் 85%, முதல் 16 நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துவதுடன், இது 20 பில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களைக் கொண்டுள்ளது. மீதமுள்ள 15% மீதமுள்ள 23 நிறுவனங்களிடையே பகிரப்படுகிறது.

இந்தத் தொழிற்துறையானது பொது மக்களைச் சென்றடைய வேண்டியதன் அவசியத்தை அடையாளம் கண்டு, கிளை வலையமைப்பை 1350 க்கும் மேற்பட்ட கிளைகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் இத்துறையானது இலங்கை மக்களில் எந்த அளவிற்கு செல்வாக்கு செலுத்துகின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது. அதன் வலுவான வளர்ச்சிக்கு மேலதிகமாக, இந்த தொழிற்துறையானது நாட்டின் முன்னேற்றம் குறித்தும் கவனம் செலுத்தியுள்ளதுடன், கடந்த நிதியாண்டில்  ரூபா 16 பில்லியனை நேரடி வரியாக  செலுத்தியுள்ளது. இதற்கு மேலதிகமாக இந்த தொழிற்துறையானது Finance Business Act No. 07 of 2007, Finance Leasing Act No. 56 of 2000, Consumer credit Act No. 29 of 1982.  ஆகியவற்றால் ஒழுங்குபடுத்தப்படுகின்றது.

ஒழுங்குபடுத்தப்படாத நிதி நிறுவனங்களின் சில மோசடி நடவடிக்கைகள், ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்களைப் பற்றிய தவறான எண்ணங்களுக்கு வழிவகுத்தன என்பதுடன் நிதித் துறையை நெறிப்படுத்த நடைமுறைச் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்பது நிரூபணமாகியுள்ளது. FHA ஆனது முன்மொழியப்பட்ட  பணப்பரிமாற்றம் மற்றும் நுண் நிதிச் சட்டத்தை இயற்ற அறிவுறுத்துவதுடன், அந்தச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாவிட்டால் கடன் வழங்கும் நடவடிக்கைகளைத் தடுக்கவும், நாட்டில் செயல்படும் அனுமதியளிக்கப்படாத நிறுவனங்கள் மீது விசாரணை மற்றும் நடவடிக்கைகளைச் செயல்படுத்த ஒரு சிறப்பு விசாரணைப் பிரிவை உருவாக்கவும், ஆரோக்கியமான NBFI செயற்பாட்டு சூழலை உருவாக்குதல் மற்றும் பொருளாதாரத்துக்கு துணைபுரியும் அதேவேளை போது மக்களையும் சமூகங்களையும் மேம்படுத்தும் சட்ட கட்டமைப்புகள் மற்றும் உகந்த கொள்கை நியமங்களை அறிமுகப்படுத்தவும் பரிந்துரை செய்கின்றது. 

CBSL இல் பதிவுசெய்யப்பட்ட 39 நிதி நிறுவனங்களின் உச்ச அமைப்பாக FHA செயல்படுகிறது. இது Ceylon Hire purchase and Finance Associationஇன் பின்னுரிமையாளராகும். இந்த சங்கமானது 1986 ஆம் ஆண்டு The Finance Houses Association of Sri Lanka (FHA)  என மீளப் பெயரிடப்பட்டது.  மேலதிக விபரங்களுக்கு http://www.fhalanka.lk/

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ශ්‍රී ලංකා අලෙවිකරණ ආයතනය, SLIM DIGIS 2.0 සම්මාන උළෙල යළි අරඹයිශ්‍රී ලංකා අලෙවිකරණ ආයතනය, SLIM DIGIS 2.0 සම්මාන උළෙල යළි අරඹයි

අලෙවිකරණය පිළිබඳ ශ්‍රී ලංකාවේ පිළිගත් ජාතික ආයතනය වන, ශ්‍රී ලංකා අලෙවිකරණ ආයතනය (SLIM) මගින් පවත්වනු ලබන, ශ්‍රී ලංකාවේ වඩාත්ම ජනප්‍රිය ඩිජිටල් සම්මාන උළෙල වන SLIM DIGIS 2020 සම්මාන උළෙල ඉදිරියේදී