𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz இலங்கையரின் சருமத்திற்காக வடிவமைக்கப்பட்ட Velvet Body Lotion பாதுகாப்பான மூல்பொருட்களுடன் சிறந்த ஈரப்பதனை வழங்குகின்றது

இலங்கையரின் சருமத்திற்காக வடிவமைக்கப்பட்ட Velvet Body Lotion பாதுகாப்பான மூல்பொருட்களுடன் சிறந்த ஈரப்பதனை வழங்குகின்றது

| | 0 Comments |

உங்கள் சருமத்திற்குப் பொருந்தாத சில தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இலங்கையின் வெப்ப வலய காலநிலை காரணமாக, சருமத்தில் வறட்சி, பொலிவிழப்பு, எரிவு போன்ற தன்மைகள் ஏற்படுகிறது. வாடிக்கையாளர்கள் தாம் கொள்வனவு செய்யும் சருமமப் பராமரிப்புப் பொருட்கள் தொடர்பில் கரிசனை செலுத்துகிறார்களா? இது இன்றைய காலகட்டத்தில் கேட்கப்பட வேண்டிய மிகவும் பொருத்தமான கேள்விகளில் ஒன்றாகும். எனவே, சருமப் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு அவற்றைப் பற்றி அறிந்திருப்பது மிக முக்கியமானதாகும்.

Velvet (வெல்வெட்) உற்பத்தியானது, 100% உண்மையான இலங்கையில் தயாரிக்கப்படும் வர்த்தகநாமமாகும். இது உயர்ந்த வரலாற்றைக் கொண்ட, சிறந்த தனிநபர் தூய்மையாக்கல் மற்றும் சருமப் பராமரிப்பு தயாரிப்புகளை வழங்குகின்றது. உங்கள் சருமம் உங்கள் உடலின் மிகப்பெரிய அங்கம் என்பதுடன், அதற்கு உரிய கௌரவத்தை வழங்கி பேணுவதன் மூலம் அதன் மூலமான நன்மையை நாம் அதிலிருந்து பெற முடியும். நாம் நமது சூழலில் எவ்வாறு வாழ்கிறோமோ, நமது சருமமும் அந்த சூழலிலேயே வாழ்கிறது. எனவே நாம் எதிர்கொள்ளும் அனைத்து விடயங்களையும் எமது முகமும் எதிர் கொள்கின்றது; அதை நாம் அதிகம் கண்டுகொள்வதில்லை. ஆரோக்கியமான சருமத்தின் மூலமே உண்மையான அழகு வெளிப்படுத்தப்படுகின்றது என Velvet நம்புகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தைப் பெறுவதற்கும் தொடர்ச்சியாக அதனை பேணி வருவதற்கும் சிறந்த தீர்வுகளை Velvet வழங்க முயற்சிக்கிறது.

வெப்ப வலயத்தில் அமைந்த நாட்டில் வசிப்பது உண்மையில் நாம் எதிர்கொள்ளும் பொதுவான மூன்று தோல் பிரச்சினைகளான சருமம் வறட்சியடைதல், பொலிவு இழப்பு, எரிச்சல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. நாம் வாழும் காலநிலையானது, எமது தோல் அமைப்புகள் மற்றும் அதன் நிலைமை ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், சருமப் பராமரிப்பு தொடர்பான கட்டுப்படுத்த முடியாத நிலைமைகளுக்கு அது வழி வகுக்கின்றது.

உங்கள் சருமத்தை பராமரிக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய அம்சம் யாதெனில், பயன்தரக்கூடிய ஈரப்பதன் தொடர்பில் கவனம் செலுத்துவதாகும். உங்கள் சருமப் பராமரிப்பு தயாரிப்பானது, ஈரப்பதனளிக்கும் பண்புகளைக் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இது தோலில் வறட்சி மற்றும் சுருக்கம் கொண்ட தோற்றத்தைத் தடுத்து, உங்கள் சருமத்தை ஈரப்பதன் கொண்டதாக பேணும் தன்மையை ஏற்படுத்த உதவுகிறது. Velvet சருமப் பராமரிப்புத் தயாரிப்புகள் மிக உயர்ந்த ஈரப்பதனூட்டும் பண்புகள் நிறைந்ததாக காணப்படுகின்றது. இதன் மூலம் உங்கள் அன்றாட சருமப் பராமரிப்பு நடவடிக்கைகளும் அனைத்து வகையிலும் பயனுள்ளதாக அமையும்.

இலங்கையருக்கான சருமத்திற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட Velvet சருமப் பராமரிப்பு தயாரிப்புகள் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன. ஒரு பரந்த ஆராய்ச்சிக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட, Glow Perfect, All Day Fresh, Intense Nourish ஆகிய மூன்று தனித்துவமான தயாரிப்புகள், சிறந்த விஞ்ஞான ரீதியான மற்றும் இயற்கையான நன்மைகளை உங்களுக்கு வழங்குகின்றன. இந்த ஒவ்வொரு தயாரிப்பு வகையும், சருமத்தின் இயற்கையான அழகை மேம்படுத்தவும், உங்கள் வசமுள்ள நம்பிக்கையின் பிரகாசத்துடன் நீங்கள் தனித்துவமாக தோற்றமளிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. புற ஊதா (UV) கதிர்கள், ஈரப்பதன் மற்றும் இலங்கையர்களின் தனித்துவமான தோலின் நிறங்கள் போன்ற, இலங்கையின் காலநிலை நிலைமைகளும் கருத்தில் கொண்டு இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

இம்மூன்று Velvet Body Lotion வகைகளும் தனித்துவமான நன்மைகளை வழங்குவதுடன், இலங்கையரின் தனித்துவமான அழகை மேலும் மெருகூட்டும் அடிப்படை நன்மைகளையும் கொண்டுள்ளன. Glow Perfect ஆனது, குங்குமப்பூ மற்றும் Curcumin (இஞ்சி இன தாவர) சாற்றைக் கொண்டுள்ளது. இது வெளிப்படையாகத் தெரியும் வகையிலான தங்க நிறத்திலான பிரகாசமளிக்கும் சருமத்தின் நன்மையை பெண்களுக்கு அளிக்கிறது. இத்தாயரிப்பானது, 360 பாகை கோணத்தில் புற ஊதா (UV) கதிர்களிலிருந்தான பாதுகாப்பு, 360 பாகை கோண ஒளி எதிர்ப்பு தொழில்நுட்பம் மற்றும் BB கிறீம் விளைவு ஆகியவற்றை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது. All-Day Fresh ஆனது, முக்கிய மூலப்பொருளான செர்ரி மலர் (cherry blossom) சாறை கொண்டுள்ளது. இம்மூலப்பொருளானது, நீடித்த நறுமணம் மற்றும் உடனடி குளிர்ச்சியின் மூலமான புத்துணர்ச்சியை வழங்கும் வகையில், நறுமணத்தை சிறைப்பிடிக்கும் தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.  இத்தயாரிப்பின் மேலதிக நன்மைகளாக, பிரகாசமளிக்கும் விற்றமின்கள், சில நொடிகளில் சருமம் உறிஞ்சிக் கொள்ளும் வகையிலான பிரத்தியேகமான மிக மெல்லிய கலவையினால் தயாரிக்கப்பட்டுள்ளமை ஆகியவற்றை குறிப்பிடலாம். இதன் மூன்றாவது தயாரிப்பான Intense Nourish ஆனது, ஆனைக்கொய்யா, ஒலிவ், விற்றமின் E துகள்கள் ஆகியவற்றைக் கொண்ட கலவையினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இது வறண்ட சருமத்திற்கு, அதிக ஈரப்பதன் மற்றும் போசாக்கை வழங்கும் திறன்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் உங்கள் சருமத்தில் ஈரப்பதனை மீள் புதுப்பிக்கச் செய்வதுடன், உலர்ச்சியால் ஏற்படும் கருமையான பகுதிகளை பிரகாசிக்கச் செய்கிறது.

உங்கள் விலைமதிப்பற்ற சருமத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள் கொண்டுள்ள பாதுகாப்பான தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், நீங்கள் ஒரு தயாரிப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் அத்தயாரிப்பில் அச்சிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் விபரங்களை முழுமையாக ஆராய்ந்து பார்க்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது. பெரும்பாலான தயாரிப்புகளில் அதன் மூலப்பொருட்கள் பற்றிய விரிவான விளக்கம் மற்றும் அது தொடர்பான சான்றிதழ்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருக்கும். தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) மற்றும் சர்வதேச தரநிர்ணய நிறுவன (ISO) சான்றிதழ்கள், பாதுகாப்பான வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதற்கான IFRA சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களைக் கொண்டிருப்பதன் மூலம் சிறந்த தரமான சருமப் பராமரிப்புத் தயாரிப்புகளை அடையாளம் காணலாம். Velvet, வறண்ட சருமம், வியர்வை, உடல் துர்நாற்றம் போன்றவற்றிற்கு எதிரான சிறந்த தீர்வுகளை, அதன் தயாரிப்புகளைப் பயன்படுத்தும் மதிப்புக்குரிய பாவனையாளர்களுக்கு உறுதியளிப்பதுடன், போசாக்குடனான மற்றும் பளபளப்பான சருமத்தையும் வழங்குகிறது. அதன் சக்தி வாய்ந்த ஈரப்பதனூட்டும் பண்புகள், இலங்கையர்களின் சருமத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பான மற்றும் இயற்கையான மூலப்பொருட்களை கொண்டிருப்பதனால், ஈரப்பதன் மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கான சிறந்த ஊட்டச்சத்தையும் வழங்குகிறது.

Velvet தயாரிப்புகளில் உள்ள தனித்துவமான Hydrosoft  தொழில்நுட்பமானது, ஒவ்வொரு பெண்ணும் விரும்பும் மென்மையான சருமத்தை வழங்கும் வகையில் ஈரப்பதனை தக்கவைக்கின்றது.

Velvet சருமப் பராமரிப்பு தயாரிப்புகள், NMRA, GMP, ISO சான்றிதழ்களைக் கொண்டுள்ளன. அத்துடன், அதன் தயாரிப்புகள் மெல்லிய வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதன் காரணமாக, அது IFRA சான்றிதழைப் பெறுவதற்கு காரணமாக அமைகின்றது.

Velvet ஆனது, இலங்கைப் பெண்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் பெண்கள் சார்ந்த முன்னணி வர்த்தக நாமமாகும். அது இலங்கையர்களின் வெவ்வேறு தோல் வகைகள் மற்றும் தோலின் நிறங்கள் குறித்து கவனம் செலுத்துமாறு பெண்களை ஊக்குவிக்கிறது. வெல்வெட் வர்த்தகநாமத்தின் வாக்குறுதியின் பிரதான இடத்தில் நுகர்வோரின் பாதுகாப்பு உள்ளது. இதன் காரணமாக, அது அதிக ஈரப்பதன் கொண்ட சருமத்திற்கு ஏற்ற தயாரிப்புகளை வெளியிடுகிறது. Velvet Soap, Body Wash, Hand Wash, Body Lotion உள்ளிட்ட Velvet வர்த்தக நாமத்தின் அனைத்து தயாரிப்பு வகைகளும், உரிய அவசியமான, அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளுடனும் மிக உயர்ந்த தரத்தில் தயாரிக்கப்படுகின்றன.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

கொவிட்-19 உள்ளிட்ட ஏனைய அவசர நிலைமைகளில் தேவையுடையவர்களுக்கு உதவ தயார் நிலையில் ஹேமாஸ்கொவிட்-19 உள்ளிட்ட ஏனைய அவசர நிலைமைகளில் தேவையுடையவர்களுக்கு உதவ தயார் நிலையில் ஹேமாஸ்

– திஸ்ஸமஹாராம, சூரியவெவ, ரம்புக்கணை, வெலிக்கந்த, அரலகங்வில, கந்தக்காடு, களுத்துறை பிரதேசங்களில் 1,200 இற்கும் மேற்பட்டோருக்கு வசதிகளை ஏற்படுத்தி வலுவூட்டுகிறது 2020ஆம் ஆண்டு ஆரம்பத்துடன், COVID-19 இலங்கை சமூகங்களை கடுமையான விளைவுகளுடன் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. நாட்டின் சமூகங்கள் மற்றும் அரச