𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz இயற்கை புத்துணர்ச்சி மற்றும் பற் குழியிலிருந்து பாதுகாப்பளிக்கும் Clogard Fresh

இயற்கை புத்துணர்ச்சி மற்றும் பற் குழியிலிருந்து பாதுகாப்பளிக்கும் Clogard Fresh

| | 0 Comments |

சிறந்த பழக்க வழக்கங்கள் என்பது ஒருவரை அடையாளப்படுத்துவதும் அவரை சித்தரிக்கும் அவரை பிரதிபலிக்கும் விடயமாகும். அந்த வகையில் வாய்ச் சுகாதார பராமரிப்பானது உங்கள் தினசரி பழக்க வழக்கங்களின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதுடன் உங்கள் உடலின் ஏனைய பகுதிகளுக்கு வழங்கும் முன்னுரிமை போன்று அதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயமாகும். மோசமான வாய்ச் சுகாதார பராமரிப்பு மற்றும் தூய்மையற்ற தன்மை ஆகியன தன்னம்பிக்கை மற்றும் சமூக ரீதியான பங்கேற்பை மோசமாக சித்தரிக்கக் கூடியன.

Clogard Fresh இன் கீழ், 4 வகைகளில் புத்துணர்ச்சிக்கான வாக்குறுதியை புதிய Clogard Fresh Blast வழங்குகிறது. இயற்கையான பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட, Clogard Fresh Gel பற்பசையானது 99% கிருமிகளை எதிர்த்துப் போராடி, உறுதியான புத்துணர்ச்சியையும், பற் குழியிலிருந்து பாதுகாப்பையும் வழங்கி, உலகை வெல்வதற்கான நம்பிக்கையை உங்களுக்கு வழங்குகிறது.

மீள் புதிக்கப்பட்ட Clogard Fresh வர்த்தக நாமம் ஆனது, ஆர்வத்தை ஏற்படுத்தும் புதிய பொதியில் வருவதுடன், புதினா, கிராம்பு, கறுவப்பட்டை, எலுமிச்சை புல், (Lemongrass) போன்ற பல்வேறு இயற்கை மூலப்பொருட்களை கொண்டுள்ளதன் மூலம் கவனத்தை ஈர்க்கிறது. ஒவ்வொரு தயாரிப்பும் தனித்துவமானதும் இலங்கையின் பல்வேறு சுவைகளுக்கு ஏற்றவாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. குளிர்ச்சியைக் கொண்ட புதினா, இனிமையான செழுமையை வழங்கும் எலுமிச்சைபுல், காரத்தை கொண்ட கிராம்பு மற்றும் மருத்துவ குணம் கொண்ட கறுவாப்பட்டை ஆகியவற்றை இது கொண்டுள்ளது. Clogard Fresh இன் ஒவ்வொரு வகை பற்பசையும், 100% இயற்கையான மூலப்பொருட்களினால் ஆக்கப்பட்டுள்ளதுடன், அவை தலைமுறை தலைமுறைகளாக இலங்கையில் பயன்படுத்தப்பட்டும் வருகின்றன.

நாளின் உடனடி பயன்பாட்டிற்காக, வாய்ச் சுகாதார பாதுகாப்புடன் விரைவானதும் வசதியான புத்துணர்ச்சிக்காக Mouthwash இனையும் Clogard Fresh வழங்குகிறது. குளிர்ச்சியான புத்துணர்ச்சிக்காக Icy Mint மற்றும் வாசனைக் கலவைகளுடனான Original Clove ஆகிய இரண்டு சுவைகளில் இந்த Mouthwash வருகிறது.

வீடுகளில் பொதுவாகக் காணப்படும் இயற்கையான மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஜெல் பற்பசையானது தற்போது சந்தையில் கிடைக்கின்ற ஆரோக்கியமானதும் பயனுள்ளதுமான தெரிவாகும்.

Clogard Fresh Gel Toothpaste ஆனது, இலங்கை பல் மருத்துவ சங்கத்தால் (SLDA) அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் (SLSI) சான்றளிக்கப்பட்டதுமாகும். Clogard Fresh Gel பற்பசை தற்போது Hemas E-store களில் https://hemasestore.com/brand/clogard/ ஊடாக கிடைக்கிறது. மேலும் மருந்தகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்களிலும் அதனைக் கொள்வனவு செய்யலாம்.

Hemas Consumer Brands பற்றி

Hemas Consumer Brands ஆனது, வீடு மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் மிகப் பெரும் இலங்கை நிறுவனமாகும். 70 ஆண்டுகளுக்கும் மேலான உயர்ந்த பாரம்பரியத்துடன், வலுவான நோக்கம் கொண்ட தரக்குறியீடுகள் கொண்ட தயாரிப்புகள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மையான நடைமுறைகள் மூலம், நுகர்வோர் இதயங்களை அது வென்றுள்ளது. அது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட  புத்தாக்கம் மிக்க குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பில் அது பாராட்டைப் பெற்றுள்ளது.

பல முன்னணி தரக்குறியீடுகளை தன்னகத்தே கொண்டு வலுப்பெற்றுள்ள Hemas Consumer Brands ஆனது, Aya பெண்களின் சுகாதாரம், புற்றுநோயாளிகளுக்கான குமாரிகா சொந்துறு திரியவந்தி போலி சிகை நன்கொடைத் திட்டம், பேபி செரமியின் முற்போக்கான பெற்றோருக்குரிய முன்முயற்சி போன்ற பல சமூக ரீதியான திட்டங்களை முன்னெடுத்து, தனது முயற்சிகளின் மூலம் புதுமைகளை உருவாக்கி மக்கள் வாழ்க்கையில் இடம்பிடித்துள்ளது. Hemas Consumer Brands சிந்தனையின் மூலம் புரட்சிகரமான தயாரிப்புகளான Vivya பாரம்பரிய அரிசி அடிப்படையிலான சருமப் பராமரிப்பு தயாரிப்புகள் மாத்திரமன்றி இயற்கை மீது அக்கறை கொண்டு Dandex Handy, Kumarika Poddi ஷாம்பு வகைகளின் பொதியிடல் மூலம், ஒற்றை பயன்பாட்டுப் பொதிகளின் பயன்பாட்டை இல்லாதொழித்து, பசுமையான தேசத்திற்கான அதன் அர்ப்பணிப்பை அது காண்பிக்கிறது. அந்த வகையில், அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் நிலைபேறான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கு பங்களிப்பதனை நோக்காகக் கொண்டு, நிறுவனம் பல வழிகளிலும் முற்போக்காக செயற்பட்டு முன்னணியில் திகழ்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

“හච් දැනුමයි මිලියනයයි” 26 වන ප්‍රශ්න විචාරක වැඩසටහනේ ජයග්‍රාහකයින් හට වටිනා මුදල් ත්‍යාග ප්‍රදානය කෙරේ.“හච් දැනුමයි මිලියනයයි” 26 වන ප්‍රශ්න විචාරක වැඩසටහනේ ජයග්‍රාහකයින් හට වටිනා මුදල් ත්‍යාග ප්‍රදානය කෙරේ.

ශ්‍රී ලංකාවේ ජංගම දුරකතන සන්නිවේදන සේවා සම්බන්ධයෙන් පාරිභෝගිකයින්ගේ ප්‍රියතම තේරීම වන හච්, ස්වකීය පාරිභෝගිකයින්ගේ දැනුම උරගාමින් පැවැත්වූ 26 වන ” හච් දැනුමයි මිලියනයයි” ප්‍රශ්න විචාරාත්මක වැඩසටහනේ ජයග්‍රාහකයින් හට මුදල් ත්‍යාග