𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz இலங்கையில் மாதவிடாய் ஏழ்மையை எதிர்த்துப் போராட மற்றொரு பாரிய முன்னெடுப்பை மேற்கொள்ளும் Fems

இலங்கையில் மாதவிடாய் ஏழ்மையை எதிர்த்துப் போராட மற்றொரு பாரிய முன்னெடுப்பை மேற்கொள்ளும் Fems

| | 0 Comments |

தற்போதைய சூழலில் பெண்கள் அன்றாட வேலைகள் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் குடும்பப் பொறுப்புகள் உள்ளிட்ட அதிக பொறுப்புகள் காரணமாக, முன்னெப்போதையும் விட மிக வேலைப்பளு கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதில் ஆச்சரியமில்லை. வேலைப்பளுவுக்கு மத்தியிலும் பல பெண்கள் தங்கள் உடல்நலம் மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்குவதில்லை. சுகாதாரத் தேவைகள் மற்றும் அது தொடர்புடைய விடயங்களில் அக்கறையின்மை காரணமாக, பெண்கள் அவர்களின் முழுத் திறனை அடைவதில் தடையேற்படலாம். Kantar LMRB இனால் இல்லங்களில் நடாத்தப்பட்ட ஆய்விற்கமைய, துரதிஷ்டவசமாக, 70% ஆன பெண்கள், ஏதேனுமொரு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய துவாயை தொடர்ந்தும் பயன்படுத்துவதில்லை என கண்டறியப்பட்டுள்ளது. மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த சரியான அறிவு இல்லாமை மற்றும் அவர்களின் தனிப்பட்ட சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்காமை போன்ற பல காரணங்களே இதன் பின்னணியாக காணப்படுன்றன.

இது நாட்டில் ஒரு முக்கிய பிரச்சனைக்கான ஒரு சிவப்பு சமிக்ஞையை எழுப்புகிறது, காரணம், மாதவிடாய் காலத்தில் பெரும்பான்மையான பெண்கள் ஆரோக்கிய துவாய்களை பயன்படுத்த தவறுவதோடு மட்டுமல்லாமல், அது அவர்களின் வாழ்க்கையை எவ்வாறு எதிர்மறையான வகையில் பாதிக்கிறது என்பதையும் அவர்களின் கனவுகளை அவர்கள் எட்டுவதை எவ்வாறு தடுக்கிறது என்பதை பற்றியதாக அமைகின்றது. அது ஒவ்வொரு மாதமும் சில நாட்களுக்கு அவர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது. இளம் பெண்கள் பாடசாலைக்கு செல்வதை தவிர்க்கிறார்கள், இது அவர்களின் கல்வியை பாதிக்கின்றது. பணி புரியும் மற்றும் தங்கள் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் பெண்கள் அத்தகைய நாட்களில் தங்கள் வருமானத்தை இழக்கிறார்கள்.

பெண்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு தரக்குறியீடு எனும் வகையில், Hemas Consumer Brands இனது முன்னணி பெண்கள் தொடர்பான சுகாதாரப் பாதுகாப்பு தரக்குறியீடான Fems, அது அடையாளம் கண்டுள்ள இரண்டு முக்கிய சமூக நோக்கத்தின் அடிப்படையில், மாதவிடாய் ஏழ்மையை நிவர்த்தி செய்ய விரும்புகிறது. முறையான மாதவிடாய் சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு இன்மை, மற்றும் உயர் தரமான ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலான ஆரோக்கிய துவாய் தயாரிப்புகளை பெற முடியாமை ஆகியனவே அவையாகும். விழிப்புணர்வு இன்மையை நிவர்த்தி செய்வதற்காக, இது தொடர்பில் கவனம் செலுத்தும் பங்காளர்களான மெரில் ஜே. பெனாண்டோ அறக்கட்டளை, அர்கா முன்முயற்சி, சர்வோதய பெண்கள் இயக்கம் மற்றும் சர்வோதய இணைவு (Merrill J. Fernando foundation, Arka Initiative, Sarvodaya Women’s movement, Sarvodaya Fusion) ஆகியவற்றுடன் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தில் ‘Fems AYA’ எனும் நாடு தழுவிய விழிப்புணர்வு முயற்சியை Fems மேற்கொண்டிருந்தது. இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், சிறந்த மாதவிடாய் சுகாதாரம் தொடர்பில் காணப்படும் தௌிவின்மை தொடர்பான இடைவெளிகளை நிவர்த்தி செய்வதாகும்.

இப்பிரசாரத்தின் மூலம், கிராமங்கள் முதல் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இளம் யுவதிகள் வரை, அறிவாற்றல் பங்களிப்பு கூட்டாளரான Arka Initiative மூலம் உள்ளூர் சமூகங்களுக்கு Fems தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. MJF அறக்கட்டளையுடனான அதன் கூட்டாண்மை மூலம் Fems தோட்டத் தொழிலாளர்களுக்கு பயிற்சித் திட்டங்களை நடாத்தி வருகின்றது. அடிமட்ட நிலை வரை இந்த முயற்சியை எடுத்துச் செல்லும் வகையில் கிராமப்புறப் பெண்களுக்கு அறிவூட்டுவதற்காக சர்வோதய மகளிர் இயக்கம்  வாய்ப்பளித்தது. இளைஞர்களை குறிவைத்து ஒன்லைன் விழிப்புணர்வு அமர்வை நடாத்துவதில் சர்வோதய ஃப்யூஷன் அமைப்பு தனது பங்களிப்பை வழங்கியது. இதில் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த பெறுமதி மிக்க அறிவு வழங்கப்படுவதோடு, தற்போது இடம்பெற்று வரும் பெண்களுக்கான பயிற்சித் திட்டங்கள் மூலம் பெண்களை தொடர்ந்து வலுவூட்டுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் பெண்கள் வலையமைப்பான சர்வோதயா பெண்கள் இயக்கம், அவர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட ஏனையவர்களுடன் செய்தியை பரிமாறிக் கொள்வதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றது.

கட்டுப்படியாகும் விலை எனும் அடுத்த முக்கிய பிர்ச்சினையை நிவர்த்தி செய்யும் வகையில், Fems அண்மையில் உயர்தர மற்றும் கட்டுப்படியாகும் விலையில் அமைந்த சுகாதார துவாயான ‘Fems AYA’ வினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உயர்தர மென்மையான பருத்தி மேற்பரப்பை கொண்டவாறு, சர்வதேச தரத்திற்கேற்ப தயாரிக்கப்படும் சுகாதாரத் துவாயாகும். இது பெண்களுக்கு வசதியாகவும் நம்பிக்கையுடனும் இருக்க உதவுகிறது. அதன் உற்பத்தியின் போதான செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து மூலப்பொருட்களும் உரிய பாதுகாப்புத் தரங்களை கடைபிடித்தவாறு தயாரிக்கப்படுவதோடு, உச்சபட்ச பாதுகாப்பை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மென்மையான பருத்தி தாள் அமைப்பானது பயனருக்கு சொகுசான வகையிலும், அதன் இறக்கை அமைப்பு மேலதிக பாதுகாப்பையும் வழங்குகிறது. ‘Fems AYA’ ஆனது சுகாதாரத்தில் இலகுவாக அடையக்கூடிய வகையில் கவனம் செலுத்தப்பட்டு, பணத்திற்கான பெறுமதியை வழங்கும் ஒரு தயாரிப்பாகும்.

Hemas Consumer சந்தைப்படுத்தல் பணிப்பாளர் fபியோனா ஜூரியன்ஸ் முனசிங்க, Fems AYA முன்முயற்சி மற்றும் ஆரோக்கிய துவாய் அறிமுகம் தொடர்பில் தெரிவிக்கையில், “இலங்கையில் வேரூன்றிய ஒரு பொறுப்பான உள்ளூர் நிறுவனம் எனும் வகையில், இதுபோன்ற முயற்சிகளை முன்னெடுப்பது எமது பொறுப்பு என உணர்கிறோம். ஒவ்வொரு விழிப்புணர்வு அமர்வுக்கும் கணிசமான எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களைக் காணும்போது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அதிக செயற்திறன் கொண்டவையாக அமைந்துள்ளது என்பதைக் காட்டுகின்றது. இது ஒரு மகிழ்ச்சியளிக்கும் விடயமாகும். கட்டுப்படியாகும் விலையில் அமைந்த உயர்தர ஆரோக்கிய துவாயான ‘Fems AYA’ அறிமுகத்தின் மூலம், பெண்களை நம்பிக்கையுடன் மேலும் உயர அழைத்து செல்வது தொடர்பான எமது பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.

புதிய ‘Fems AYA’ ஆரோக்கிய துவாயின் 10  கொண்ட பொதி மிகவும் மலிவு விலையான ரூ. 99/- இற்கு தற்போது கிடைக்கின்றது.

Fems ஆனது, Hemas Consumer Brands நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் ஒரு முன்னணி சுகாதார பராமரிப்பு தயாரிப்பாகும். Fems ஆனது, மிக உயர்தரமான மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றது. அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் தயாரிக்கப்படும் அதன் அனைத்து பெண்கள் சுகாதாரம் தொடர்பான பராமரிப்பு பொருட்களின் உற்பத்தியிலும் 100% பாதுகாப்பு தரங்கள் பின்பற்றப்படுகிறது. SLS மற்றும் தோல் பரிசோதனை சான்றிதழ் அங்கீகாரம் பெற்ற Fems ஆனது, பல ஆண்டுகளாக இலங்கைப் பெண்களின் இதயங்களை வென்ற தரக்குறியீடாக விளங்குவதோடு, பெண்கள் முன்னோக்கிச் செல்லும் வகையில், அவர்களுக்கு சிறந்த சௌகரியம், பாதுகாப்பு, உள்ளார்ந்த தூய்மை ஆகியவற்றை வழங்குவதில் புகழ் பெற்று விளங்குகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Unilever’s Lever Ayush takes centre stage as a Main Partner of the Inaugural Wedaduru Abhiman Presidential Ayurveda Awards ceremony.Unilever’s Lever Ayush takes centre stage as a Main Partner of the Inaugural Wedaduru Abhiman Presidential Ayurveda Awards ceremony.

Unilever Sri Lanka’s flagship Ayurveda brand, Lever Ayush joined hands with the Department of Ayurveda as a main partner for the recently held “Wedaduru Abhiman, Presidential Ayurveda Award Ceremony” which