𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz பேபி செரமியின் புதிய மூலிகை சவர்க்காரம் உங்கள் குழந்தையின் சருமத்தை மென்மையாக்கும்

பேபி செரமியின் புதிய மூலிகை சவர்க்காரம் உங்கள் குழந்தையின் சருமத்தை மென்மையாக்கும்

| | 0 Comments |

செம்பருத்தி , சந்தனம், வேப்பிலை மற்றும் வெனிவெல், மல்லிகை மற்றும் மஞ்சள் ஆகியவற்றின் இரட்டை-நன்மை சேர்க்கைகளுடன்

ஒரு குழந்தை கருத்தரித்த தருணத்திலிருந்து, பெற்றோர்கள் தங்களின் விலைமதிப்பற்ற மகிழ்ச்சிக்கு எல்லாவற்றையும் சிறந்ததாக வழங்க விரும்புகிறார்கள். குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளைத்  தேர்ந்தெடுக்கும் போது, குழந்தைக்கு சிறந்ததைத் தவிர வேறெதனையும்  வழங்கக்கூடாது  என்பதை உறுதிப்படுத்த, தரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் சரியான முக்கியத்துவம் எப்போதும் முன்னிலைப்படுத்தப்படுகின்றது.

பேபி செரமி, உண்மையிலேயே இலங்கை குழந்தை பராமரிப்பு விற்பனை நாமமாகும். ஒரு குழந்தையின் மென்மையான சருமத்திற்கு ஏற்ற உயர்தர மற்றும் பாதுகாப்பு தரத்துடன் கூடிய தயாரிப்புகளை வழங்க எப்போதும் உழைத்து வருகின்றது. ஏறக்குறைய 6 தசாப்தங்களாக இலங்கை பெற்றோரின் தலைமுறையினரால் நம்பப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பேபி செரமி சந்தையில் மிகவும் விரும்பப்படும் குழந்தை பராமரிப்பு நாமங்களில் ஒன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் தேவைகளை மேம்படுத்துவதில், எப்போதும் இணைந்திருக்கவும், அதன் நுகர்வோருடன் நெருக்கமான  பிணைப்பை பேணவும் முயற்சிக்கும் ஒரு வர்த்தகநாமமாக பேபி செரமி, குழந்தையின் மென்மையான சருமத்திற்கு இயற்கையின் நன்மைகளை அள்ளித் தந்து பராமரிக்கும் பொருட்டு இயற்கை சாற்றை உள்ளடக்கிய புத்தம் புதிய மூலிகை சவர்க்கார வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. தங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான மற்றும் சிறந்த தரமான தயாரிப்புகளுக்கான தேடலில், பெற்றோர்கள் அதிகளவில் அவர்கள் வாங்கும் பொருட்களில் அதிக இயற்கை நன்மைகள் பொருந்திய பொருட்களையே தற்போது தேடுகின்றனர்.

இயற்கை மூலிகைகள் மற்றும் பொருட்களின் பயன்பாடு தலைமுறை தலைமுறையாக குழந்தை நீராடும் முக்கிய செயற்பாட்டின் ஒரு பகுதியாகும். முந்தைய தலைமுறையினர் செம்பருத்தி , மல்லிகை, வெனிவெல் ஆகியவை குழந்தையின் தோல் மற்றும் நல்வாழ்வுக்கு அதன் இயற்கையான குணப்படுத்தும் நன்மையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நீராட்டும் நீரில் கலந்த சில முக்கிய இயற்கை மூலிகைகளாகும்.

இருப்பினும், தற்போதைய வேகமான வாழ்க்கை முறைகளுடன், வேகமாக நகரும் நவீனகால பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இது போன்ற நீராடல் அனுபவங்களை வழங்க முடிவதில்லை. அத்தோடு இதுபோன்ற இயற்கையான பொருட்களை தேடிப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் குறைவாகவே இருக்கின்றது.

பேபி செரமியின் புதிய மூலிகை சவர்க்காரம் 100% உள்நாட்டு மூலப்பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. பேபி செரமி மூலிகை சவர்க்காரம் ஒரு குழந்தையின் மிருதுவான சருமத்திற்கு ஏற்றவாறு சருமவியல் ரீதியாக சோதிக்கப்படுகிறது மற்றும் பேபி செரமி சவர்க்காரர்களில் பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்கள் International Fragrance Association தரங்களுக்கு இணங்குகின்றன. பேபி செரமி மூலிகை சவர்க்காரம் குழந்தையின் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் பெற்றோலிய எண்ணெய் சேர்க்கை  இல்லாமல் தயாரிக்கப்படுகின்றது.

செம்பருத்தி மற்றும் சந்தன மூலிகை சவர்க்கார வகையானது குழந்தைகளின் மென்மையான  சருமத்தை மிருதுவாக சுத்தமாக்கி ஈரப்பதத்தை தக்கவைத்து, சருமத்தை மென்மையாக வைத்திருக்க உதவும் இயற்கை சாற்றின் இரட்டை நன்மைகளுடன் வருகின்றது. வேப்பிலை மற்றும் வெனிவெல் வகையானது குழந்தையின் சருமத்தை  கிருமிகளிலிருந்து பாதுகாப்பதுடன், மென்மையாகவும் ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகின்றது. மல்லிகை மற்றும் பச்சை மஞ்சல் வகையானது சுத்திகரிப்பு, ஈரப்பதமாக்குதல் மற்றும் பாதுகாப்பு தன்மைகளுடன் வருகின்றது. அதே நேரத்தில் குழந்தையின் சருமத்தை கிருமிகளிலிருந்து பாதுகாக்கிறது. மூலிகை சவர்க்காரம் இயற்கையின் சிறந்த மூலிகை பராமரிப்பால் ஈர்க்கப்பட்ட இனிமையான நறுமணங்களுடன் வருகிறது.

பேபி செரமி இலங்கையில் ஒரு முன்னணி குழந்தை பராமரிப்பு வர்த்தகநாமமாகும், இது பல தலைமுறைகளாக, கிட்டத்தட்ட 6 தசாப்தங்களாக பெற்றோரின் இதயங்களையும் நம்பிக்கையையும் வென்றது. பேபி செரமி அனைத்து குழந்தை பராமரிப்பு தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் மிக உயர்ந்த தரம் மற்றும் பாதுகாப்பு தரங்களுக்கமைய  தயாரிக்கப்பட்ட ஒரு முழுமையான தயாரிப்பு வரிசையை வழங்குகிறது. இது பேபி சவர்க்காரம், பேபி கொலன், கிறீம் மற்றும் லோஷன், சலவைத்தூள் மற்றும் திரவம், போத்தல் வோஷ், கொட்டன் பட்ஷ், அணையாடைகள், ஈரமான துடைப்பான்கள், நேப்பி ரேஷ் கிறீம் மற்றும் பலவற்றையும் உள்ளடக்கியது. இவை அனைத்தும் குழந்தைகளின் பாதுகாப்பையும் சருமத்தின் ஊட்டத்தையும் உறுதி செய்கின்றன.மேலதிக தகவல்களை, www.babycheramy.lk/ இல் உள்ள பேபி செரமி இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

නිවසේ සිට ආරක්ෂිතව ඉගෙනුම් කටයුතු වල නිරත වීමට සිංගර් ෆැෂන් ඇකඩමිය විසින් E-learning පහසුකම් හඳුන්වා දෙයිනිවසේ සිට ආරක්ෂිතව ඉගෙනුම් කටයුතු වල නිරත වීමට සිංගර් ෆැෂන් ඇකඩමිය විසින් E-learning පහසුකම් හඳුන්වා දෙයි

දේශීය විලාසිතා නිර්මාණකරණ ක්ෂේත්‍රය තුළ වූ කුසලතා වර්ධනය කිරීම උදෙසා කැපවෙමින් ක්‍රියා කරන සිංගර් හි අනුබද්ධිත ආයතනයක් වන සිංගර් ෆැෂන්  ඇකඩමිය වසර 60 කට අධික ප්‍රෞඪ ඉතිහාසයකට උරුමකම් කියන කීර්තිමත්

Pyramid Wilmar (Private) Limited இன் அறிக்கைPyramid Wilmar (Private) Limited இன் அறிக்கை

அஃப்லடோக்ஸின் (Aflatoxin) அதிகளவில் கலந்திருக்கும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் குறித்த அண்மைய ஊடக சமூக அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் Pyramid Wilmar (Private) Limited (“Pyramid Wilmar”)  இன் முகாமைத்துவம் பின்வருவனவற்றை குறிப்பிட விரும்புகின்றது.  Pyramid Wilmar என்பது நல்லாளுகை