𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz FACETS Sri Lanka கண்காட்சி 2024: இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களின் 30 வருட சிறப்பைக் கொண்டாடுகிறது

FACETS Sri Lanka கண்காட்சி 2024: இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களின் 30 வருட சிறப்பைக் கொண்டாடுகிறது

| | 0 Comments |

– இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை (NGJA) மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) ஆகியவற்றுடன் இணைந்து, ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka நிகழ்வை, எதிர்வரும் 2024 ஜனவரி 06 முதல் 08 வரை சினமன் கிராண்ட் ஏட்ரியம் லொபியில் நடாத்தவுள்ளதாக, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) அறிவித்துள்ளது. 2002 இல் உருவாக்கப்பட்ட SLGJA, இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் உயர் அமைப்பாகும் என்பதோடு, இது இத்துறையில் உள்ள அனைத்து துணைத் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பல ஆண்டுகளாக சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்துறை நாட்காட்டியில், FACETS Sri Lanka கண்காட்சி ஒரு முக்கிய நிகழ்வாக இடம்பிடித்துள்ளது. அந்த வகையில் இந்த வருடமும், உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் சந்திப்பு மையமாக அது அமையவுள்ளதோடு, உலகம் முழுவதிலுமிருந்து மொத்த விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், பட்டைதீட்டுவோர், சில்லறை விற்பனையாளர்கள், சேகரிப்பாளர்கள், முக்கியமான வர்த்தகர்களுக்கு இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களை ஈர்க்கும் வகையில் செயற்படும்.

உலகின் மிகச் சிறந்த, குறிப்பிட்ட மாதிரிகளை உற்பத்தி செய்வதில் புகழ்பெற்ற, இரத்தினக் கற்களின் உண்மையான புதையல் எனும் உலகளாவிய அங்கீகாரத்தை இலங்கை பெற்றுள்ளது. வண்ண மயமான இரத்தினக் கற்களுக்கு புகழ் பெற்ற மிகப் பழமையான நாடாக விளங்கும் இலங்கையானது, தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான இரத்தினக்கற்களைக் கொண்டுள்ளது. இது உள்ளூர் கலாச்சாரத்தின் அம்சங்களுடன் உலகளாவிய போக்குகளை ஒன்றிணைக்கும், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நகைகளை உற்பத்தி செய்து காட்சிப்படுத்துகிறது.

எதிர்வரும் நிகழ்வுகள் மற்றும் FACETS Sri Lanka 2024 கண்காட்சியின் புதிய அம்சங்கள் பற்றி FACETS Sri Lanka அமைப்பின் தலைவர் அல்தாப் இக்பால் கருத்து வெளியிடுகையில், “FACETS Sri Lanka கண்காட்சியின் 30ஆவது பதிப்பு 2024 ஜனவரியில் இடம்பெறவுள்ளதை அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இக்கண்காட்சியில் Sustainable Pavilion மற்றும் Sapphire Masterpiece Pavilion ஆகியன புதிய சேர்க்கைகளாக மேற்கொள்ளப்படவுள்ளன. இவை முன்னரைப்போன்று அதிசயிக்கத்தக்க வகையிலான பரந்துபட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்களின் காட்சிப்படுத்தலை கொண்டிருக்கும்.” என தெரிவித்தார்.

FACETS Sri Lanka 2024 இல் Premier Gem Pavilion, Premier Jewellery Pavilion, Sustainable Pavilion, Sapphire Masterpiece Pavilion, Rough Stone Pavilion, Gem Lab Pavilion, NGJA SME Pavilion, SLGJA Gem and Jewellery Pavilion உள்ளிட்ட பல காட்சிமேடைகள் காட்சிப்படுத்தப்படும். இந்நிகழ்வில் ‘Reminisce of the Past’ (கடந்த காலத்தை நினைவுகூருதல்) எனும் விசேட நிகழ்வும் இடம்பெறவுள்ளது. Premier Gem Pavilion ஆனது, FACETS Sri Lanka கண்காட்சி ஆரம்பித்தது முதல் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. நீண்ட காலமாக FACETS Sri Lanka வின் ஒரு அங்கமாக இருந்து வரும் இலங்கையின் முன்னணி இரத்தினக்கற்கள் விற்பனையாளர்களை இது உள்ளடக்கியிருக்கும். Premier Jewellery Pavilion ஆனது, முக்கிய உள்ளூர் நகைக் கடைகளை கொண்டிருக்கும் என்பதோடு, அவர்களது இரத்தினக்கற்கள் மற்றும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட நகைகளை அது காட்சிப்படுத்தும்.

FACETS Sri Lanka கண்காட்சியில் இம்முறை முதன்முறையாக இடம்பெறும் Sustainable Pavilion ஆனது, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் வரலாற்றுப் பரிணாமத்தையும், அதன் நிலைபேறானதன்மை தொடர்பான முறைகள் மற்றும் அணுகுமுறைகளையும் காண்பிக்கும். இது சுரங்கம் முதல் சந்தை வரை, இலங்கையின் இரத்தினக்கல் வர்த்தகத்தின் 2,300 வருட வரலாற்றை காண்பிக்கும். இலங்கையில் முதல் தடவையாக இடம்பெறும் மற்றுமொரு அம்சமாக Sapphire Masterpiece Pavilion அமையும். இது மிகப் பாரிய, விலையுயர்ந்த இரத்தினக்கற்களைக் காட்சிப்படுத்தும். அத்துடன் நிகழ்ச்சியின் இறுதி நாளில் அவை விற்பனைக்கு வரும். Rough Stone Pavilion ஆனது, உலகின் அனைத்து இரத்தினக்கல் நாடுகளின் கரடுமுரடான கற்களை காட்சிப்படுத்தும்.

Premier Gem Lab Pavilion ஆனது, முன்னணி உள்ளூர் மற்றும் சர்வதேச இரத்தினக்கல் ஆய்வுகூடங்களை ஒரே கூரையின் கீழ் கொண்டுவரும். NGJA SME Pavilion ஆனது, நாடு முழுவதிலும் உள்ள தெரிவு செய்யப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு தங்களுடைய இரத்தினங்கள் மற்றும் நகைகளைக் காட்சிப்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கும். SLGJA Gem and Jewellery Pavilion ஆனது, சங்க உறுப்பினர்களின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கூடங்களைக் கொண்டிருக்கும்.

‘கடந்த காலத்தை நினைவுகூருதல்’ நிகழ்வில் சிரேஷ்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு பேச்சாளர்கள் கலந்துகொள்வார்கள். அவர்கள் கடந்த காலத்தில் இவ்வணிகம் எவ்வாறு இடம்பெற்றது, எளிமையான ஆரம்பத்தில் இருந்து இன்று வரை இத்தொழில்துறை எவ்வாறு வளர்ச்சியடைந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அவர்கள் பேசுவார்கள்.

FACETS Sri Lanka முதன் முறையாக 1991 இல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று  30 வருடங்களைக் கடந்துள்ளதோடு, விலைமதிப்பற்ற இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணங்களுக்கான முதன்மையான இடமாக உலக அரங்கில் இலங்கையின் நற்பெயரை உறுதிப்படுத்தி வருகிறது. இக்கண்காட்சியானது, தொடர்ச்சியாக பல சர்வதேச கண்காட்சியாளர்கள் மற்றும் கொள்வனவாளர்களை ஈர்த்து வருவதோடு, இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலில் உள்ள எந்தவொருவருக்கும் மிகவும் பரிந்துரைக்கப்படும் இடமாக காணப்படுகிறது. FACETS Sri Lanka 2024 ஆனது, வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் உணர்ச்சிகரமான அலையையும் வரலாறு முழுவதும் அவற்றின் பரிணாம வளர்ச்சியிலும் கவனம் செலுத்தும். அத்துடன், தொழில்துறையின் எதிர்கால வளர்ச்சிப் பாதை, நகை வடிவமைப்பில் வளர்ந்து வரும் போக்குகள் மற்றும் எதிர்வரும் வருடங்களில் உலகளாவிய பார்வையாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் விடயங்கள் பற்றிய நுண்ணறிவுகளையும் அது வழங்கும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

කොවිඩ් ව්‍යාප්තිය වැළැක්වීමේ, හච් #BondWithHutch, TikTok අභියෝගයට දින 7 ක් තුළ නැරඹුම් වාර මිලියන 3 ක්කොවිඩ් ව්‍යාප්තිය වැළැක්වීමේ, හච් #BondWithHutch, TikTok අභියෝගයට දින 7 ක් තුළ නැරඹුම් වාර මිලියන 3 ක්

ශ්‍රී ලාංකීය පාරිභෝගිකයින්ගේ ප්‍රියතම ජංගම දුරකතන බ්‍රෝඩ්බෑන්ඩ් සේවාව වන හච් වෙතින්, පසුගියදා හඳුන්වා දෙනු ලැබූ TikTok අභියෝගය, දින 7 ක් තුළ මිලියන 3 ක නැරඹුම් වාර ප්‍රමාණයක් අත්පත් කර ගනිමින්,