𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz கொவிட்-19 உள்ளிட்ட ஏனைய அவசர நிலைமைகளில் தேவையுடையவர்களுக்கு உதவ தயார் நிலையில் ஹேமாஸ்

கொவிட்-19 உள்ளிட்ட ஏனைய அவசர நிலைமைகளில் தேவையுடையவர்களுக்கு உதவ தயார் நிலையில் ஹேமாஸ்

| | 0 Comments |

– திஸ்ஸமஹாராம, சூரியவெவ, ரம்புக்கணை, வெலிக்கந்த, அரலகங்வில, கந்தக்காடு, களுத்துறை பிரதேசங்களில் 1,200 இற்கும் மேற்பட்டோருக்கு வசதிகளை ஏற்படுத்தி வலுவூட்டுகிறது

2020ஆம் ஆண்டு ஆரம்பத்துடன், COVID-19 இலங்கை சமூகங்களை கடுமையான விளைவுகளுடன் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்தது. நாட்டின் சமூகங்கள் மற்றும் அரச நிறுவனங்களால் தனியாக நின்று இத்தொற்றுநோயின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாது என்பதும், சவாலை சமாளிக்க திறமையான உதவியாளர்களின் ஆதரவு தேவை என்பதும் இதன்போது தெளிவாகத் தெரிந்தது. இந்த உணர்தலின் மூலம், இலங்கையின் FMCG துறையில் முன்னணியில் உள்ள Hemas Consumer Brands, தனது தலையீடுகளை மேற்கொண்டு கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி அதற்கு எதிராக எழுந்து நின்ற முதலாவது அமைப்பாக இருந்தது.

கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் நாட்டின் சுகாதாரப் பாதுகாப்பு உட்கட்டமைப்புக்கும் நிறுவனம் வழங்கிய உதவிகள் உடனடியானதும் அவசியமானதுமாக அமைந்தன. அத்தியாவசிய பொருட்கள், தனிநபர் பராமரிப்பு பொருட்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு மிக அவசியமான, முக்கியமான மருத்துவ உபகரணங்களின் நன்கொடைகள் இதில் அடங்கும். தொற்றுநோய் காலம் முழுவதும் சமூகப் பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு, நிறுவனம் சமூக உதவிகளை தொடர்ந்தும் வழங்கி வந்ததுடன், அண்மையில் திஸ்ஸமஹாராம மற்றும் சூரியவெவ பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட 200 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியதன் மூலம், நிறுவனம் அதன் சமூக முயற்சிகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

கொவிட் மாத்திரமன்றி, இலங்கையிலுள்ள சில பகுதிகள் இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட வேளையில், காலத்தின் தேவை கருதி எழுந்து நிற்கும் ஹேமாஸ், ரம்புக்கணையில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 240 வீடுகளுக்கு உதவியளித்ததுடன், ரம்புக்கணையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுகள் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கி அவர்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்தது.

Hemas Consumer Brands இன் வர்த்தக அபிவிருத்தி மற்றும் புத்தாக்கப் பணிப்பாளர் சப்ரினா யூசுபலி இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “தற்போதைய சூழலில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக சவால்களை எதிர்கொள்ள இலங்கையர்கள் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் உதவ முன்வர வேண்டும். இவ்வாறான சவால்கள் குடும்ப நலனில் கணிசமான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. ஹேமாஸ் ஆகிய எமக்கு, எமது சமூகங்களின் நல்வாழ்வு மிக முக்கியமானது என்பதுடன், பாதிக்கப்படும் குடும்பங்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் நாம் அதிக முக்கியத்துவம் வழங்குகிறோம். கொவிட் தொற்றுநோய் ஆரம்பித்ததில் இருந்து, முழு Hemas Consumer Brands குழுவும், தேவைப்படுபவர்களுக்கு உதவ அதன் தளங்களைப் பயன்படுத்தியதுடன், வரும் காலங்களிலும் நாம் தொடர்ந்தும் அதனை மேற்கொள்வோம் என்பதை தெரிவிக் விரும்புகிறேன்.” என்றார்.

களுத்துறை, அரபலகந்தவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் வீடுகளுக்கு அத்தியாவசியப் பொருட்கள், உணவுப் பொருட்களை நிறுவனம் வழங்கியதுடன், இது தொடர்பில் அக்கறை கொண்ட தன்னார்வ நிறுவனங்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய Hemas Consumer Brands நன்கொடைகளையும் வழங்கியிருந்தது. வெலிக்கந்த, அரலகங்வில, கந்தக்காடு பகுதிகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களுக்கு தனிநபர் பராமரிப்பு பொருட்கள், குழந்தை பராமரிப்புப் பொருட்கள், உலர் உணவுப் பொருட்களை நிறுவனம் வழங்கியது. இவ்வாறான பரோபகார முயற்சியைத் தொடர்ந்து நிறுவனம், கண்டியில் உள்ள Government Midwifery Service Association (அரசாங்க மருத்துவிச்சி சேவை சங்கத்திற்கு) இரண்டு இரத்த தான நிகழ்வுகளுடன் இணைந்தவாறான, மற்றுமொரு நன்கொடை முயற்சியை மேற்கொண்டது.

இவ்வாறான கடினமான காலங்களில், Hemas Consumer Brands ஆனது, இலங்கை சமூகத்திற்கு தனது உதவிக்கரங்களை நீட்டுவதில் எப்போதும் உறுதியாக நிற்கிறது.

Hemas Consumer பற்றி

வீடுகள் மற்றும் தனிநபர் பராமரிப்புத் துறையில் இலங்கையின் முன்னணி உற்பத்தியாளரான Hemas Consumer ஆனது, Hemas Holdings PLC இன் துணை நிறுவனமாகும். 1948 இல் நிறுவப்பட்ட ஹேமாஸ், குடும்பங்கள் ஆரோக்கியமாக வாழ உதவுதல் எனும் ஒரு எளிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. இன்று, 4,500 இற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட இம்முன்னணி மக்கள் மைய நிறுவனம், நுகர்வோர், சுகாதார மற்றும் பல்துறை அம்சங்களில், உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தனித்துவ துறை மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வழங்கி வருகிறது. Hemas நிறுவனம், அதன் தொடர்ச்சியான பயணத்தில், தொடர்ந்தும் மாறுபட்ட மற்றும் முக்கிய விடயங்களில் முதலீடு செய்வதோடு, அர்த்தமுள்ள வரப்பிரசாதங்களை உருவாக்கி, நம்பகமான கூட்டாண்மைகளை வளர்த்து வருவதோடு, அதன் மூலம் இவ்வனைத்தையும் உள்ளடக்கிய உலகத்தை வெற்றி கொள்கிறது.

Photo Captions

திஸ்ஸமஹாராமவில் உள்ள குடும்பங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்ட போது…

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

මෙඩිහෙල්ප් හොරණ රෝහලෙන් දැන් නවීනතම වෛද්‍ය රසායනාගාර පහසුකම්.මෙඩිහෙල්ප් හොරණ රෝහලෙන් දැන් නවීනතම වෛද්‍ය රසායනාගාර පහසුකම්.

1985 වසරේ දී හොරණ කේන්ද්‍ර කර ගනිමින් එක් වෛද්‍ය රසායනගාරයකින් ආරම්භ කෙරුණු මේඩිහෙල්ප් රෝහල් ජාලය වසර 36ක දීර්ඝ සේවා කාලයක් තුළ මුළු රටේම ඉහළ පෙළේ සෞඛ්‍ය සේවා සපයන්නෙකු ලෙස සාර්ථක දියුණුවක් අත්

Pelwatte தயாரிப்புகள் தற்போது இலங்கையின் முன்னணி சுப்பர்மார்க்கெட்டுக்களிலும் கிடைக்கின்றனPelwatte தயாரிப்புகள் தற்போது இலங்கையின் முன்னணி சுப்பர்மார்க்கெட்டுக்களிலும் கிடைக்கின்றன

இலங்கையின் உயர் தர பாலுற்பத்தியாளரான Pelwatte Dairy Industries, தனது தயாரிப்புகள் பலவற்றை தற்போது நாட்டின் முன்னணி சுப்பர்மார்க்கெட்டுகளுக்கு கொண்டு வந்துள்ளது.  பால், யோகர்ட், ஐஸ் கிறீம் உட்பட தனது ஆரோக்கியமான, புதிய தயாரிப்பு வரிசைகளுக்கு நன்கறியப்பட்ட இந் நிறுவனம் தனது