𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz “SHAKO” தலைக்கவசங்கள் தற்போது இலங்கையில் கிடைக்கின்றன

“SHAKO” தலைக்கவசங்கள் தற்போது இலங்கையில் கிடைக்கின்றன

| | 0 Comments |

SLS சான்றளிக்கப்பட்ட SHAKO தலைக்கவசங்கள், 100% ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டு உலகளாவிய தரத்தின்படி தயாரிக்கப்படுகின்றன. குறைந்த எடை, வலுவான தன்மை, நீடித்த பாவனையுடனான SHAKO தலைக்கவசமானது, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பிற்காக அதிக அடர்த்தி கொண்ட தடிப்பத்திலான EPS படையைக் கொண்டுள்ளது. கீறல் எதிர்ப்பு தொழில்நுட்பம் கொண்ட முன்புற visor பகுதி மூலம் தெளிவாக பார்ப்பதற்கு வசதியளிக்கப்படுகிறது. SHAKO வின் உயர்தர உட்புறமான துணி மற்றும் பஞ்சுத் தன்மை அமைப்பு காரணமாக, பயணம் செய்பவர் உச்ச சொகுசை அனுபவிக்க முடியும் என்பதுடன் நீண்ட நேரத்திற்கு அணியும்போதும் எவ்வித எரிச்சலையும் ஏற்படுத்தாது. பயணம் செய்பவரின் தலையில் சிறந்த பிடிமானத்தை வழங்குவதற்காக, SHAKO விலுள்ள சக்திவாய்ந்த பட்டி மற்றும் உறுதி மிக்க பாதுகாப்பு கொக்கி ஆகியன உதவுகின்றன. இந்த பட்டியானது குறிப்பாக உயர் வலிமையை கொண்டிருப்பதனை உறுதி செய்யும் வகையில், மோட்டார் வாகன இருக்கைகளின் பட்டிகளை தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களால் அது உருவாக்கப்பட்டுள்ளது. தலைக்கவசத்தின் நீடித்த பயன்பாட்டை கருத்தில் கொண்டு, தலைக்கவசத்தின் மேற்புற பூச்சு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இவை தவிர, உச்ச தாக்கத்தின் போது பாதுகாப்பை வழங்குவதற்காக அதன் ஓடானது மிக வலுவான பிளாஸ்திக் மூலப் பொருளான virgin ABS கலவை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இது இலங்கையின் பாதுகாப்பான தலைக்கவசமாக “SHAKO” இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.

Stafford குழுமத்தின் அங்கத்தவரான Spectrum Trading Company மூலம் SHAKO தலைக்கவசங்கள் சந்தைப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. முன்னணி வாகன உதிரிப்பாக ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி (R&D) நிறுவனமும் Stafford குழுமத்தின் மற்றொரு அங்கத்தவருமான Inventive Polymers Lanka (Pvt) Ltd இனால் SHAKO தலைக்கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. அண்மையில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட SHAKO தலைக்கவசங்கள், தற்போது நாடளாவிய ரீதியில் கிடைக்கின்றன. Stafford குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், Dr. KALINGA KALUPERUMA இது தொடர்பில் தெரிவிக்கையில், “SHAKO” தலைக்கவசம், பயணம் செய்பவரின் தலையை மறைக்கும் ஒரு பொருள் என்பதற்கு அப்பாற்பட்டதாகும். SHAKO தலைக்கவசம் Inventive Polymers Lanka (Pvt) Ltd இன் ஆய்வகங்களில் முழுமையாக ஆராய்ச்சி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக கூறுவதாயின், SHAKO இலங்கையிலுள்ள மோட்டார் சைக்கிள் பயணிகளுக்கான தலைக்கவசங்களில் ஒரு முக்கிய இடத்தில் விளங்குகின்றது.

IPL என அழைக்கப்படும் Inventive Polymers Lanka (Pvt) Ltd ஆனது 2019 இல் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தின் பிரதான நோக்கமானது, மீள்சுழற்சி செய்யக்கூடிய பொலிமர் தயாரிப்புகளை கருத்தியலாக்குவதும், அதனை மேம்படுத்துவதுமாகும். இந்நிறுவனம் அதிநவீன பிளாஸ்டிக்குகளை injection molding (உருக்கி உட்செலுத்துதல்) மற்றும் சோதனை செய்தல் இயந்திரங்கள் மூலம் மிக உயர் தரமான தயாரிப்புகளை உற்பத்தி செய்வதில் முதலீடு செய்கின்றது. தற்போது, ​​நிறுவனம் மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் (SHAKO), முகக் கவசங்கள், வாகன இலக்கத்  தகடுகளுக்கான அழகுபடுத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைத் தயாரித்து வருகிறது. நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் வலுவான கவனம் செலுத்துவதுடன், அதன் பல்வேறு தயாரிப்புகள் தற்போது வடிவமைத்தல் கட்டத்தில் உள்ளன.

#ENDS#

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ශ්‍රී ලාංකේය සමට ගැලපෙන ඉහළ මොයිස්චරයිසින් ගුණයෙන් යුත් Velvet Body Lotion දැන් වෙළෙඳපොලේශ්‍රී ලාංකේය සමට ගැලපෙන ඉහළ මොයිස්චරයිසින් ගුණයෙන් යුත් Velvet Body Lotion දැන් වෙළෙඳපොලේ

ශ්‍රී ලංකාවේ නිවර්තන දේශගුණික තත්වය හමුවේ   සමෙහි වියළි බව ඇති වීම සහ  අඳුරු බව ඇති වීම සුලභව දක්නට ලැබෙන දෙයකි.මෙම ගැටළු වලට පිළියම් ලෙස භාවිතා කරන  ඇතැම් Body Lotion  නිෂ්පාදන 

ස්වදේශී කොහොඹ 08වන වරටත් කෑරගල රජමහා විහාරය ආලෝකමත් කරයි.ස්වදේශී කොහොඹ 08වන වරටත් කෑරගල රජමහා විහාරය ආලෝකමත් කරයි.

ශාකසාර සත්කාර නිෂ්පාදනයේ පුරෝගාමියා සහ වෙළෙඳ පොළ ප්‍රමුඛයා වන කදානේ ස්වදේශී කර්මාන්තායතනය සිය සමාජ සත්කාර වැඩසටහනක් ලෙසින් ඓතිහාසික කෑරගල රජමහා විහාරයේ ‘ආලෝක පූජාව’ වෙනුවෙන් අනුග්‍රාහක දායකත්වය සපයන ලදි. ස්වදේශී සමාගමේ

පැල්වත්ත කිරි සමාගමට කුඩාපරිමාණ කෘෂි ව්‍යාපාර සහභාගීත්ව වැඩසටහනින් කිරි කර්මාන්තය නගා සිටුවීමට මිලියන 463ක පහසුකම්පැල්වත්ත කිරි සමාගමට කුඩාපරිමාණ කෘෂි ව්‍යාපාර සහභාගීත්ව වැඩසටහනින් කිරි කර්මාන්තය නගා සිටුවීමට මිලියන 463ක පහසුකම්

මෙරට ප්‍රමුඛතම පුද්ගලික කිරි නිෂ්පාදකයා වන පැල්වත්ත සමාගමට කුඩාපරිමාණ කෘෂි ව්‍යාපාර සහභාගීත්ව වැඩසටහන යටතේ රුපියල් මිලියන 463ක ව්‍යපෘති පහසුකම් සලසා තිබේ. ඒ අනුව පළමු අදියර ලෙස ඉදිරි මාස 6 තුළ