𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் பழச்சாறு வகைகைளை அறிமுகப்படுத்தும் Global Solutions

ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் பழச்சாறு வகைகைளை அறிமுகப்படுத்தும் Global Solutions

| | 0 Comments |

இன்றைய நவீன உலகத்தில் வேலைப்பளுக்களுக்கு மத்தியில் வாழும் மனிதர்கள், தங்களது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கான ஒரு நிறுவனமே குளோபல் சொல்யூஷன்ஸ் (Global Solutions) ஆகும். தனது சிறு வயது கனவை நனவாக்கியுள்ள அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹமட் தில்ஷானின் சொந்த முயற்சியே இந்நிறுவனமாகும்.

குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான முஹமட் தில்ஷான், முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு என்றே கூற வேண்டும். இந்த பல நாள் கனவினை எட்டும் முயற்சியாக, பல தொழில் முயற்சியாளர்களுடைய புத்தகங்களையும் வரலாறுகளையும் படிக்கும் பழக்கத்தை பாடசாலை காலத்தில் கொண்டிருந்ததாக தெரிவிக்கிறார்.

இலங்கையிலுள்ள UNDP உடன் இணைந்து உள்நாட்டிலுள்ள வணிக தொடக்கங்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஒரு ஆரம்பத்தை வழங்கும் வகையிலான கல்வி, தொழில்நுட்பம் ஆகியவற்றை வழங்கும் ஆலோசனை நிறுவனமான Curve Up (Pvt) Ltd நிறுவனத்தின் உந்துதல் மூலம் குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

“உயர் கல்வியை பூர்த்தி செய்த பின் நிறுவனமொன்றில் சந்தைப்படுத்தல் அதிகாரியாக இணைந்த போதிலும் எனது கனவை நோக்கி பயணிப்பதிலேயே அவரது கவனம் இருந்துள்ளதோடு, அதற்கான ஒரு புள்ளியை சமூகத்தில் உள்ள பிரச்சினை ஒன்றின் மூலம் இனம் கண்டு கொண்டேன். அந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக எனது வணிகத்தை உருவாக்க வேண்டும் என்று சிந்தித்தேன். அதுதான் எனது வணிகத்தின் ஆரம்பம்.” என்கிறார் தில்ஷான்.

ஒரு நிகழ்வின் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்து விதமான சேவைகளையும் ஒரு கூரையின் கீழ் கொண்டு வந்து இப்பிரதேசத்திலுள்ள மக்களுக்கு தங்களது நிகழ்வுகளையும் சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம், தங்கள் நிகழ்வு சிறப்பாக முடிந்தது எனும் வாடிக்கையாளரின் திருப்தியோடு, செய்யும் தொழிலை செவ்வனே முடித்த திருப்தியும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியைத் தரும் ஒரு புள்ளியின் அடிப்படையில் இது அமைகின்றது.

வர்த்தக நிர்வாகம் தொடர்பில் எனது பட்டபடிப்பானது, இத்தொழிற்துறையில் மேலோங்க பெரிதும் உதவியதாக தில்ஷான் குறிப்பிடுகிறார்.

“தாங்கள் ஒழுங்கு செய்யும் நிகழ்வுகளில் வழங்கப்படும் சிற்றுண்டிகள், பானங்கள் உள்ளிட்டவையும் சிறந்த முறையில் அமைய வேண்டுமென வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதை அவதானித்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு அவசியமான சுகாதார முறையில் தயாரிக்கப்பட்ட சிற்றுண்டிகளையும் நாமே வழங்க ஆரம்பித்தோம். அதன் அடுத்த கட்டமாக, Dlight எனும் குளிர்பானத் தயாரிப்பையும் நாம் அறிமுகம் செய்தோம் என்பது எமது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை காட்டுகிறது.” என்கிறார்.

எமது நிறுவனத்தை ஆரம்பிக்கும் போது பல சவால்களை நாங்கள் எதிர்கொண்டோம். நாம் சந்தைப்படுத்த எண்ணியிருந்த ஒவ்வொரு உற்பத்தியினையும் பதிவு செய்யவும் அதற்கான தரச்சான்றிதழ் பெறவும் வேண்டியிருந்தது.

ஆனால் எமது புதிய எண்ணக்கருவை சாத்தியமாக்க தேவையான முழு ஆலோசனைகளையும் CurveUP நிறுவனமும் தேவையான நிதியுதவிகளை UNDP நிறுவனமும் வழங்கியிருந்தது.

Curve Up (Pvt) Ltd நிறுவனத்தின் செயற்திட்ட முகாமையாளர் நுஹா கலீல்  இது தொடர்பில் தெரிவிக்கையில், இவ்வாறான முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு இலங்கையிலுள்ள UNDP உடன் இணைந்து அவர்களுக்கு அவசியமான ஆரம்ப கட்ட வசதிகளை வழங்கி, கைகொடுத்து அவர்களது தொழில் முயற்சிகளை ஊக்குவிக்க தாங்கள் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த தில்ஷான், Dlight எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரானமானதும் சுவையானதுமான உணவு மற்றும் பானங்களை வழங்குவதை பிரதான நோக்கமாக கொண்டிருந்தது. Dlight நிறுவனம் முதன் முதலாக மாம்பழம் மற்றும் பழக்கலவை நெக்டா (Mango Nectar & Mixed Fruit Nectar) இனை சந்தைக்கு அறிமுகம் செய்தது.

ஏனைய போட்டி நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் நியாயமான விலையிலே, அதிக பழச்செறிவு கொண்ட நெக்டாவினை Dlight நிறுவனம் வழங்குவதை மக்கள் பெரிதும் விரும்பினர். இதனால் குறுகிய காலத்திலே Dlight தனது வாடிக்கையாளர்களை தன்வசமாக்கியது.

கோடைகாலங்களில் சுட்டெரிக்கும் வெயிலின் போது மக்கள் அதிகம் விரும்பும் மாம்பழம் மற்றும் பழக்கலவை நெக்டா இனை 200ml, 500ml மற்றும் 1 Liter அளவுகளில் இன்று கிழக்கு மாகாணம் மற்றும் மேல் மாகாணம் மற்றும் வட மாகாணங்களில் விநியோகம் செய்யப்படுகிறது.

எதிர்வரும் நாட்களில் இரசாயன கலவைகள் அற்ற, கொடித்தோடை  சாறு (Passion Fruit Juice), விளாம்பழ சாறு (Wood Apple Juice), மாம்பழ  சாறு (Mango Juice), கற்றாழை சாறு (Alove Vera Juice) ஆகிய புதிய குளிர்பானங்களும் சந்தைக்கு வர இருக்கின்றது. இரசாயன கலவைகள் அற்ற உற்பத்திகளை சந்தைக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கோடு Dlight  நிறுவனம் தொடர்ந்தும் பயணிக்கின்றது.

மேலும் எமது நிறுவனத்தின் மூலம் எதிர்காலத்தில் Dlight Juice, Dlight Jam, Dlight Cordial, Dlight Iced coffee, Dlight Organic Drink போன்ற புதிய உற்பத்திகளையும் சந்தைக்கு வழங்க திட்டமிட்டிருக்கிறோம்.

Dlight நிறுவனத்தின் இந்த முயற்சியால் பலர் உள்ளூர் உற்பத்தியை ஆதரிக்க முன்வந்திருப்பதோடு பலருக்கு தொழில்வாய்ப்பும் வழங்க முடிந்திருக்கிறது.

மேலும் சுயமாக ஒரு தொழில் செய்து முன்னேற விரும்பும் இளைஞர் யுவதிகள் குறைந்த முதலீட்டுடன் எமது நிறுவனத்தின் ஒரு விநியோகஸ்தராக இணையலாம். அதற்கான ஆலோசனை மற்றும் பயிற்சிகளை எமது நிறுவனம் வழங்க தயாராக உள்ளது.

உங்கள் நிகழ்வுகளை எம்முடன் இணைந்து மறக்க முடியாத நிகழ்வாக மாற்றிக் கொள்ளுங்கள் (‘Make your Event Something Memorable with us’) என்பதே குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தாரக மந்திரமாகும்.

குளோபல் சொல்யூஷன்ஸ் ஆனது, அனைத்து சேவைகளையும் உள்ளடக்கிய சேவை எனும் வகையில் பல்வேறு சிறு வணிகர்கள் எமது நிறுவனம் மூலம் நன்மையடைந்து வருகின்றனர். புகைப்படபிடிப்பாளர் முதல் ஹோட்டல் துறை, ஒலி, ஒளி சேவையாளர் என பல்வேறு சேவை வழங்குனர்கள் எமது சேவையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.

நாம் தற்போது முழு முயற்சியுடன் மேற்கொண்டு வரும் இத்துறையுடன் இணைந்தவாறு, எதிர்காலத்தில் நாடு பூராகவும் எமது சொந்த தயாரிப்பு குளிர்பானங்களை விநியோகம் செய்வதற்கு எண்ணியுள்ளோம். குறைந்த முதலீட்டுடன் ஒரு சுயதொழிலை ஆரம்பிக்க விரும்புவோர் எமது நிறுவனத்தோடு இணைந்து எமது குளிர்பான விநியோகத்தராக ஒரு தொழில் முயற்சியாளராக தங்களது பயணத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பையும் உருவாக்கியுள்ளதாக, தில்ஷான் குறிப்பிடுகிறார்.

எந்தவொரு வணிகமும் காலத்திற்கு ஏற்ப விரிவாக்கத்தை சந்திக்க வேண்டும், அந்த வகையில் இதற்காக நிதி பற்றாக்குறை, அர்ப்பணிப்புள்ள ஊழியர்களை இனம் காண்பதிலான சிக்கல்கள் உள்ளிட்ட பல சவால்களை தனது பயணத்தில் எதிர்கொண்டதாக அவர் தெரிவிக்கிறார்.

அது மாத்திரமன்றி கொவிட்-19 தொற்று என்பது அனைத்து வணிகங்கள் மீதும் செல்வாக்குச் செலுத்திய ஒரு விடயமாகும். அந்த வகையில் தில்ஷானின் நிறுவன செயற்பாடுகளுக்கும் அது பாரிய சவாலை முன்வைத்தது. “கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நிகழ்வுகளை நடாத்த முடியாமல் முடங்க வேண்டிய நிலைக்கு நிறுவனம் தள்ளப்பட்டது. இதனால் தற்போது பலரும் வேலை இழந்து நிற்கின்ற ஒரு சூழல் உருவாகி உள்ளது. பொருட்களின் விலைகளில் திடீர் அதிகரிப்பு, அதன் காரணமான சேவைக்கான கட்டண அதிகரிப்பு போன்றவற்றால் சிறிய அளவிலேனும் எமது செயற்பாட்டை மேற்கொள்வதற்கு பெரும் தடையை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களின் திருப்தியை பெற, உயர் தர சேவைகளை வழங்கி, பிராந்தியத்தில் சிறந்த நிகழ்ச்சி முகாமைத்துவ நிறுவனமாக மாறுவதே எமது இலக்கு என்கிறார் தில்ஷான்.

“தொற்று நோய்க்குப் பின்னரான சவால்கள் உள்ள போதிலும் குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் நிகழ்வு முகாமைத்துவ தொழிற்துறையில் நீள்மீட்சித் தன்மையுடன் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்திக்கொண்டு, கண்டிப்பான சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, அவர்களது சேவைகளை வழங்கி வருகின்றனர். குளோபல் சொல்யூஷன்ஸ் குழு அதன் வர்த்தகத்தை பல்வகைப்படுத்தவும், சொந்த வர்த்தக நாமத்தைக் கொண்டுவந்து, வணிகத்திற்கு மதிப்பு சேர்த்துக்கொள்ளவும் இலங்கையில் உள்ள UNDP, அதன் HackaDev திட்டத்தின் மூலம் ஒத்துழைத்ததில் மகிழ்ச்சியடைகிறது.

குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, சமூக நிறுவனங்களின் மூலம் நிலைபேரான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு உழைக்கும் இளம் தொழில்முனைவோர்களுக்கு ஆதரவளிக்க UNDP இன் HackaDev குழுவைச்  சேர்ந்த நாம் காத்திருக்கிறோம்.” – திரு. கௌஷல அமரகோன், கற்றல் மற்றும் புத்தாக்க உதவியாளர், கொள்கைகள் மற்றும் ஊடாடல் குழு,

UNDP இலங்கை

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

பாற்பண்ணையாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் Pelwatte Dairy சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் கோருகின்றதுபாற்பண்ணையாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் Pelwatte Dairy சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் கோருகின்றது

தேசத்தின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries, பாற்பண்ணைச் சமூகத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படும் மஹா ஓய நிலப்பிரச்சினையில் பாற்பண்ணையாளர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதனோடு தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களின் ஒத்துழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் ஒரு பேண்தகு மூலோபாயத்தை உருவாக்கவும்,