𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz HUTCH புரட்சிகரமான எந்தவொரு வலையமைப்பிற்கும் 1,000 நிமிட அழைப்பு பெக்கேஜை ரூ. 345 இற்கு வழங்குகிறது!

HUTCH புரட்சிகரமான எந்தவொரு வலையமைப்பிற்கும் 1,000 நிமிட அழைப்பு பெக்கேஜை ரூ. 345 இற்கு வழங்குகிறது!

| | 0 Comments |

கையடக்கத் தொடர்பாடல் சேவைகளுக்கான இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, மற்றுமொரு வாடிக்கையாளர் சார்ந்த முதன் முதலான முயற்சியாக, இலங்கையில் உள்ள கையடக்கத் தொலைபேசி சந்தாதாரர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான ‘Hari Katha’ எனும் அழைப்பு பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பெக்கேஜ், வழக்கமான ஒரே வலையமைப்பில் அழைப்பதற்கு மாத்திரமான பெக்கேஜை தாண்டி, எந்தவொரு வலையமைப்பிற்கும் (ANY NETWORK) அழைக்க 1,000 நிமிடங்களை வழங்குகிறது. தற்போது வேறு வலையமைப்பிலுள்ள தங்களது நண்பர்கள், குடும்பத்தினர், வணிக கூட்டாளர்களை அழைப்பதற்கு கையடக்கத் தொலைபேசி வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக கட்டணம் அறவிடப்படுகிறது.

கட்டுப்படியாகும் விலையில் அமைந்த பெக்கேஜ்கள், டேட்டா மற்றும் குரல் அழைப்பு தேவைகளுக்கான உயர்தர வலையமைப்பு அனுபவத்தை வழங்கும் கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநரான HUTCH, தனது வாடிக்கையாளர்களின் கஷ்டமான நிலைமைகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்து வருகிறது.

Hutch இன் இந்த புரட்சிகரமான Any Network அழைப்பு பொதியானது, மாதத்திற்கு ரூ. 345 எனும் மிகவும் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கிறது. இதில், எந்தவொரு வலையமைப்பில் உள்ளவர்களையும் அழைக்க 1,000 நிமிடங்கள் வழங்கப்படுவதோடு, Hutch வலையமைப்பிற்குள் அழைக்க 500 போனஸ் நிமிடங்கள் வழங்கப்படுகின்றது. அது மாத்திரமன்றி 2GB Anytime Data, எந்தவொரு வலையமைப்பிற்கும் 1,000 SMS போன்ற மேலதிக சலுகைகளையும் இது கொண்டுள்ளது.

தற்போது மக்கள் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் இவ்வேளையில் இப்பொதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, செலவு குறைந்த தீர்வுகளை வழங்குவதை எப்போதும் Hutch தனது இலக்காக கொண்டுள்ளது. Hutch இன் இந்த புதிய பெக்கேஜின் மூலம், ஒரு கையடக்கத்தொலைபேசி பயனர் தனது முழுமையான கையடக்கத் தொலைபேசி அழைப்புத் தேவைகளையும் வெறும் 345 ரூபாவில் சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

Hutch வாடிக்கையாளர்கள், *145# ஐ டயல் செய்வதன் மூலம் அல்லது HUTCH App மூலம் இந்த தனித்துவமான பெக்கேஜை செயற்படுத்தலாம். அத்துடன், நாடு முழுவதுமுள்ள 8,000 இற்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் புதிய Hutch இணைப்புகளைப் பெறலாம் என்பதுடன், ஒன்லைன் ஊடாக கோரிக்கை செய்வதன் ஊடாக தங்களது வீட்டு வாசலிலேயே புதிய இணைப்பை பெற்றுக் கொள்ளவும் முடியும்

HUTCH பற்றி

Hutchison Telecommunications Lanka (Pvt) Limited ஆனது, இலங்கையின் முன்னணி 4G மொபைல் புரோட்பேண்ட் தொலைத்தொடர்பு சேவை வழங்குனராக, 1997 ஆம் ஆண்டு முதல் ‘HUTCH’ எனும் வர்த்தக நாமத்தின் கீழ் இயங்கி வருகிறது. Etisalat Lanka Pvt Ltd யினை கையகப்படுத்தியமை மற்றும் பாரிய வலையமைப்பு நவீனமயமாக்கலுக்குப் பின்னர், Hutch ஆனது தற்போது நாட்டின் மிகப் பெரும் 2G, 3G, 4G வலையமைப்பாக, சிறந்த புரோட்பேண்ட் மற்றும் கையடக்கத்தொலைபேசி அழைப்பு அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்தி வருகின்றது. வாடிக்கையாளர்களுக்குச் சரியான தயாரிப்பு மற்றும் சேவை அனுபவங்களை வழங்குவதில் நிறுவனத்தின் கொள்கைகள் முழுமையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதுடன், ‘Hutch ஒரு சரியான வலையமைப்பு’ எனும் பிரசாரக் கருப்பொருளுக்கு அமைய இயங்கி வருகின்றது.

HUTCH ஆனது, ஹொங்கொங்கை தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டு நிறுவனமான CK Hutchison Holdings Limited (CK Hutchison) இன் பெரும் பங்கைக் கொண்ட துணை நிறுவனமாகும். 50 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வரும் இது, 300,000 பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றது, CK Hutchison ஹொங்கொங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப் பெரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வதோடு, மதிப்புமிக்க Fortune Global 500 நிறுவனங்களின் பட்டியல்களிலும் அது இடம்பிடித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

One Galle Face இல் புதிய Premier Center இனைத் திறந்த HutchOne Galle Face இல் புதிய Premier Center இனைத் திறந்த Hutch

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, தனது புதிய Premier Center இனை கொழும்பின் மிகவும் மதிப்புமிக்க விற்பனை முகவரிகளில் ஒன்றான One Galle Face Mall  இல் ஆரம்பித்துள்ளது. Hutch Premier Center, முக்கிய அடையாளமாக

ශ්‍රී ලංකා ප්ලාස්ටික් හා රබර් ආයතනය, EDB සහ Smart Expos සමඟ එක්ව දැවැන්ත ඔන්ලයින් ප්‍රදර්ශනයක් සංවිධානය කරයිශ්‍රී ලංකා ප්ලාස්ටික් හා රබර් ආයතනය, EDB සහ Smart Expos සමඟ එක්ව දැවැන්ත ඔන්ලයින් ප්‍රදර්ශනයක් සංවිධානය කරයි

ශ්‍රී ලංකා ප්ලාස්ටික් හා රබර් ආයතනය (PRISL), ඉන්දියානු සමාගමක් වන Smart Expos & Fairs ප්‍රයිවට් ලිමිටඩ් හා එක්ව, අපනයන සංවර්ධන මණ්ඩලයේ (EDB) හවුල්කාරීත්වයද ඇතුව ප්ලාස්ටික් හා රබර් කර්මාන්තයේ ඔන්ලයින් ප්‍රදර්ශනයක්