𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz தனது புத்தம் புதிய ஆடை விற்பனை நிலையத்தை ஜோசப் பிரேசர் ஞாபகார்த்த மருத்துவமனையில் திறந்துள்ள வெலோனா

தனது புத்தம் புதிய ஆடை விற்பனை நிலையத்தை ஜோசப் பிரேசர் ஞாபகார்த்த மருத்துவமனையில் திறந்துள்ள வெலோனா

| | 0 Comments |

இலங்கையில் பின்னப்பட்ட மற்றும் நெய்யப்பட்ட ஆடைகளின் முன்னோடியான வெலோனா, கொழும்பு 05, ஜோசப் பிரேசர் ஞாபகாரத்த்த வைத்தியசாலையில் அதன் நவீன ஆடையகத்தை அண்மையில் திறந்து வைத்துள்ளது. நாட்டில் கொவிட் தொற்றுநோய் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு உட்பட்டு, குறிப்பிட்ட சில விருந்தினர்களுடன் ஒரு எளிய விழாவாக இத்திறப்பு விழா இடம்பெற்றது. Threadworks PVT LTD நிறுவனத் தலைவரும் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான, கலாநிதி ஜெஹான் டி சொய்ஷா மற்றும் Threadworks PVT LTD நிறுவனத்தின் ஒரு சில அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். அத்துடன், ஜோசப் பிரேசர் ஞாபகார்த்த மருத்துவமனை மற்றும் Melsta Health ஆகியவற்றின் சிரேஷ்ட உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த பிரம்மாண்ட திறப்பு விழா தொடர்பில் Threadworks PVT LTD நிறுவனத் தலைவரும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரியுமான, கலாநிதி ஜெஹான் டி சொய்ஷா கருத்துத் தெரிவிக்கையில், “பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நாம் எப்போதும் வசதியையும், சௌகரியத்தையும் வழங்க முயற்சிக்கிறோம். ஜோசப் பிரேசர் ஞாபகார்த்த வைத்தியசாலையானது, ஒரு பிரத்தியேக மகப்பேற்று மருத்துவமனை என்பதுடன், இது பாதுகாப்பான பிரசவத்தை எளிதாக்குகிறது. எனவே இது எமது புதிய விற்பனை நிலையத்திற்கு சிறந்த இடமாக இருக்குமென நாம் நம்புகிறோம். குறிப்பாக COVID-19 தொற்று தொடர்பான ஆபத்து தொடர்ந்தும் இருக்கும் நிலையில், எமது வாடிக்கையாளர்களுக்கான அணுகல் மற்றும் வசதியை மேம்படுத்துவதே, இவ்விற்பனை நிலையத்தைத் திறப்பதன் முக்கிய நோக்கமாகும். பெற்றோர்கள் பாதுகாப்பான கொள்வனவை விரும்புகின்றனர். எனவே இவ்விற்பனை நிலையம் மூலம், எமது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு எமது விரிவான தயாரிப்பு வகைகளை, பாதுகாப்பாகவும் வசதியான முறையிலும் வழங்க முடியுமென நாம் நம்புகிறோம்.” என்றார்

இந்த புதிய விற்பனை நிலையம் Velona Clothing எனும் வர்த்தக நாமத்தின் கீழ் திறக்கப்படுகின்ற மூன்றாவது விற்பனை நிலையமாகும். Liberty Plaza (கொழும்பு) மற்றும் மொரட்டுவை ஆகிய இடங்களில் ஏனைய இரண்டு விற்பனை நிலையங்களும் அமைந்துள்ளன. பிறந்த குழந்தைகள் முதல் 3 வயது வரையிலான குழந்தைக்குகளுக்கு அவசியமான அனைத்தையும் இவ்விற்பனை நிலையம் வழங்குகிறது. மிக முக்கியமாக, பெற்றோராகவுள்ளவர்களுக்கு மருத்துவமனையினால் பட்டியலிடப்படும் பொருட்களை இங்கு கொள்வனவு செய்யலாம். குழந்தைகளுக்கான கம்பளி, புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான ஆடைகள், நப்கின்கள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், கழிவகற்றல் தொடர்பான பொருட்கள் மற்றும் Velona Cuddles யினது அனைத்து டயபர் தயாரிப்புகளும் இங்கு கிடைக்கின்றது.

பிரத்தியேக உற்பத்தி வகைகளுடன் பெறுமதியான கொள்வனவு அனுபவத்தை வழங்கும் Velona Clothing, எதிர்காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தனது ஆடையகங்களை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

7 தசாப்தங்களுக்கு மேலான வரலாற்றைக் கொண்ட வெலோனாவின் நப்கின்கள், துவாய்கள், உள்ளாடைகள், குழந்தைகள் ரி-சேட்டுகள் உள்ளிட்ட அனைத்து துணிகளும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு வசதியையும், சுகாதாரத்தையும் உறுதிசெய்யும் சேதன பருத்தியால் தயாரிக்கப்படுகின்றன.

Velona Clothing ஆடையகத்தை, அதன் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.buyvelona.com மூலமாகவும் Facebook மற்றும் Instagram உள்ளிட்ட அதன் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ஒன்லைனில் அணுகலாம்.

END

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

බහු- භාෂා අධ්‍යාපනයෙහි 40 වස සමරන, ප්‍රංශ ජාත්‍යන්තර පාසලට නවක සිසුන් බඳවා ගැනේබහු- භාෂා අධ්‍යාපනයෙහි 40 වස සමරන, ප්‍රංශ ජාත්‍යන්තර පාසලට නවක සිසුන් බඳවා ගැනේ

ශ්‍රී ලංකාව තුළ විශිෂ්ටතම බහු-භාෂා අධ්‍යාපාන අවස්ථාවන් පිරිනමන අධ්‍යාපන ආයතන අතර ප්‍රමුඛතම ආයතනයක් වන ප්‍රංශ ජාත්‍යන්තර පාසල ලෙසින් ප්‍රකට, École Française Internationale De Colombo (EFIC), පසුගියදා සිය 40 වැනි සංවත්සරය

පැල්වත්ත කිරි සමාගම කාන්තාවන් සවිබල ගන්වමින් සැමට සමාන අවස්ථා ලබා දීමට කැපවී සිටී.පැල්වත්ත කිරි සමාගම කාන්තාවන් සවිබල ගන්වමින් සැමට සමාන අවස්ථා ලබා දීමට කැපවී සිටී.

පැල්වත්ත කිරි සමාගම කාන්තා නායකත්වයෙන් යුතු පවුල් 100කට අධික සංඛ්‍යවක් සහ 1200කට අධික කිරි කර්මාන්තයේ නියුතු කාන්තාවන් පිරිසක් සවිබල ගන්වමින් කාලෝචිත සමාජ  ප්‍රයත්නයක් සඳහා කැපවී සිටී. ඒ අනුව පැල්වත්ත සමාගම විවිධත්වය පිළිගැනීම