𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz இளம் மாணவர்களுக்காக கற்பித்தல் மையங்களை மீண்டும் திறக்க British Council திட்டமிட்டுள்ளது

இளம் மாணவர்களுக்காக கற்பித்தல் மையங்களை மீண்டும் திறக்க British Council திட்டமிட்டுள்ளது

| | 0 Comments |

இலங்கை பிரிட்டிஷ் கவுன்சிலாகிய (British Council) நாம், எதிர்வரும் 2022 ஜனவரி 07ஆம் திகதி முதல், கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மாத்தறை ஆகிய இடங்களில், நேருக்கு நேர் கற்பிக்கும் வகுப்புகளை நடாத்துவதற்காக, எமது கற்பித்தல் மையங்களை மீண்டும் திறக்கத் தயாராகி வருவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். கொவிட் தொற்றுநோய் காரணமாக குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்பட்டிருந்த நிலையில், எமது மாணவர்களும் ஆசிரியர்களும் நேருக்கு நேர் கற்றலை மீண்டும் ஆரம்பிப்பதற்காக, வகுப்பறைகளுக்குத் திரும்ப ஆர்வமாக உள்ளனர்.

கொவிட் தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து, எமது மாணவர்கள் அவர்களது ஆங்கிலக் கற்றல் பயணத்தைத் தவறவிடக் கூடாது என்பதற்காக, எமது வகுப்புகள் அனைத்தும் ஒன்லைனில் இடம்பெற்றன. அவர்கள் Keep Fit and Fun, பேக்கிங், கைவினைப்பொருட்கள், கதை சொல்லல், வினாடி வினா நிகழ்வுகள், யோகா, கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு செயல்பாடுகளுடன் எமது ஆசிரியர்களுடன் ஒன்லைன் அமர்வுகளில் பங்கேற்று வருகின்றனர். பிரதான பாடசாலைகள் மூடப்பட்டதன் காரணமாக, புதிய திறன்களை முயற்சிப்பதற்கான வாய்ப்புகளுடன், தங்களது சகபாடிகளுடனான இந்த தொடர்பு, எமது இளம் மாணவர்களின் நல்வாழ்வுக்கு முக்கியமானதாக அமைந்தது.

இவ்வருடம் நாம் இணையத்தை நோக்கிச் சென்றதன் பயனாக, இலங்கையில் உள்ள எமது இளம் மாணவர்கள், பிரிட்டிஷ் கவுன்சிலின் சர்வதேச பேச்சுப் போட்டி மற்றும் உலகளாவிய கலைப் போட்டி ஆகியவற்றில் உலகளாவிய ரீதியில் வெற்றியாளர்களாக தங்களது வெற்றியைக் கொண்டாடினர். அத்துடன் அவர்களின் ஒன்லைன் வகுப்பறை மூலம், உலகளாவிய ரீதியில் உள்ள ஏனைய பிரிட்டிஷ் கவுன்சில் மாணவர்களுடன் நேரலையில் இணையும் உற்சாகமான வாய்ப்புகளும் அவர்களுக்கு கிடைத்தன. இதன்போது, ஸ்பெயின், தாய்வான், கொரியாவில் உள்ள மாணவர்களுடன் புதிய நட்பைத் தொடங்குவதற்கும் அவர்களின் கலாசாரங்கள் மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்து கொள்வதற்குமான வாய்ப்பை மாணவர்கள் பெற்றனர்.

இலங்கை பிரிட்டிஷ் கவுன்சில், பிரதிப் பணிப்பாளரும் கற்பித்தல் மையத்தின் முகாமையாளருமான Helen Sykes இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “எமது மாணவர்கள் அனைவரும், வகுப்பறைகளில் இருப்பதைப் போன்று மிகவும் வேடிக்கையாக கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் எமது மாணவர்களில் பலர் முகத்தை பார்த்து கற்றலை மேற்கொள்வது தொடர்பில் ஏக்கமுற்றிருந்ததை நாம் அறிவோம். குறிப்பிட்ட சில மாணவர்கள் நாம் நேருக்கு நேர் கற்பித்தலை ஆரம்பிக்கும் வரும் வரை அவர்களது கற்றலை இடைநிறுத்தினர். நேருக்கு நேர் தொடர்பு கொள்வது என்பதன் அடிப்படையில் அதற்கு மாற்று வழி எதுவும் கிடையாது என்பதுடன், மொழி கற்றலில் நம்பிக்கை மற்றும் பேச்சு திறன்களை வளர்ப்பதில் இது பாரிய பங்களிப்பைச் செய்கிறது. அத்துடன் மாணவர்கள் மீண்டும் வகுப்பறைகளுக்குத் திரும்பத் தயாராக இருப்பதோடு, அதில் மாணவர்களும் பெற்றோர்களும் உறுதியாக உணர்வதனை, எமக்குக் கிடைத்த பின்னூட்டங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. எனவே, அரசாங்கத்தின் அனைத்து பாதுகாப்பு வழிகாட்டல்களையும் பேணி, ஏற்கனவே எம்முடன் இணைந்துள்ள மாணவர்களையும், புதிய மாணவர்களையும் வரவேற்பதற்காக நாம் மிகவும் உற்சாகமாக காத்திருக்கிறோம். இதற்காக நாடு முழுவதுமுள்ள நான்கு பிரிட்டிஷ் கவுன்சில் கற்பித்தல் மையங்களையும் மிக விரைவில் திறக்கவுள்ளோம்.” என்றார்.

ஒவ்வொரு ஆண்டும், உலகளாவிய ரீதியில் 100 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு, 100 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பிரிட்டிஷ் கவுன்சில் கற்பித்தலை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இலங்கையில் 3 வயது முதல் 18 வயது வரையிலான அனைத்து மட்டத்திலுள்ளவர்களுக்கும் நாம் கற்பித்தலை மேற்கொள்கிறோம். 2022 ஆம் ஆண்டில் வயது வந்தோருக்காக நேருக்கு நேரான கற்பித்தலை மீண்டும் தொடங்குவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். எம்மிடம் பதிவு செய்வது, மிக விரைவானதும் எளிதானதுமாகும். அந்த வகையில் பதிவு செய்ய முன்னர், நாங்கள் உங்களை சரியான வகுப்பில் வைத்துள்ளோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, ஒன்லைன் மூலம் நேரத்தை ஒதுக்கி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

நிபுணத்துவம் வாய்ந்த எமது சர்வதேச குழுக்களால் உருவாக்கப்பட்டு, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் எமது பாடநெறிகள், தனியே மொழித் திறனில் மாத்திரம் கவனம் செலுத்தாது, விசேட முறைமையின் (Methodology) மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. தலைமைத்துவம் மற்றும் ஒத்துழைக்கும் திறன்கள், விமர்சன ரீதியான சிந்தனை திறன்கள், டிஜிட்டல் கல்வியறிவு, தன்னார்வ கற்றல் ஆகியவற்றின் வளர்ச்சியில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இங்கு எமது மாணவர்கள் தாங்கள் தாங்களாகவே இருக்க முடியும் என்பதுடன் ஒரு குதூகலமான கற்றல் அனுபவத்தையும் பெற முடியும். பிரிட்டிஷ் கவுன்சிலில் இணையும் மாணவர்கள், உலகெங்கிலும் உள்ள ஆங்கிலம் கற்பவர்களின் உலகளாவிய வலையமைப்பின் ஒரு அங்கமாக மாறுகிறார்கள். இதன் மூலம் எமது பாடத்திட்டத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள வகையில், உலகெங்கிலும் உள்ள வகுப்பறைகளில் இருந்து தங்கள் சகாக்களுடன் தொடர்பை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் அவர்களுக்கு கிடைக்கின்றன. இளம் மாணவர்களுக்கான எமது பாடநெறிகளுக்கு மேலதிகமாக, நாம் எமது நூலகத்தில் பல்வேறு நிகழ்வுகள், உலகளாவிய போட்டிகள் மற்றும் நிபுணத்துவம் கொண்ட எமது ஆசிரியர்களுடன் ஆங்கிலம் மூலம் குதூகலமாக இருக்க பல்வேறு ஒன்லைன் மூலமான வேடிக்கை மற்றும் சுதந்திரமான செயல்பாடுகளை நடத்துகிறோம். எமது வளாகம் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஒரு இடமாகும். தங்களது சகபாடிகளுடன் பாதுகாப்பாகச் சந்திக்கவும் தொடர்பு கொள்வதையும் உள்ளடக்கிய, மாறுபட்ட மற்றும் குதூகலமான கற்றல் சூழலில் தன்னம்பிக்கையை வளர்க்கும் இடமாக அது விளங்குகின்றது.

பெற்றோர் ஒருவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், “பிரிட்டிஷ் கவுன்சிலில் எனது மகனின் அனுபவம் ஆச்சரியமாக உள்ளது. பேசுவது மற்றும் எழுதுவது ஆகிய இரண்டிலும் அவரது ஆங்கிலத்தில் ஒரு பெரிய மற்றும் அதிவேக வளர்ச்சியை நான் கண்டது மட்டுமல்லாமல், மொழியைப் பயன்படுத்துவதில் அவரது நம்பிக்கையும் சரளமும் வளர்ச்சியடைந்ததையும் நான் கண்டேன். இவ்வாறான ஒரு வகுப்பறையையே எனது மகன் உண்மையில் எதிர்பார்த்தார். இங்குள்ள நிதானமான, வேடிக்கையான மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய சூழலின் மூலம் பிரிட்டிஷ் கவுன்சில் அவருக்குள் ஏற்படுத்திய ஆங்கிலம் கற்கும் ஆர்வமே அவரது முன்னேற்றத்திற்குக் காரணமென நான் நம்புகிறேன்.” என்றார்.

Academy Award® விருது பெற்ற Aardman animation studios உடன் இணைந்து உருவாக்கப்பட்ட ‘Learning Time with Timmy’ எனும் முன்பள்ளி தொடர்பான பாடநெறியானது, குழந்தைகள் மற்றும் பெற்றோர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு பாடநெறியாகும். வேடிக்கை மற்றும் ஒருவரிடம் ஒருவர் கலந்துரையாடல்களைக் கொண்ட, மூன்று, நான்கு மற்றும் ஐந்து வயது குழந்தைகளுக்கான வாராந்த வகுப்புகளும்  இடம்பெறுகின்றன.

6 முதல் 11 வயது வரையினருக்கான எமது ‘Primary Plus’ பாடநெறியானது, உங்கள் பிள்ளையின் ஆங்கில மொழித் திறமைக்கும் அப்பால், தன்னம்பிக்கையுடன் தங்களை வெளிப்படுத்தும் வகையில் அவர்களின் படைப்பாற்றலை வளர்ப்பதில் கவனம் செலுத்துகின்றது. 12 முதல் 17 வயது வரையிலான எமது ‘Secondary Plus’ பாடநெறியானது, தன்னம்பிக்கையை வளர்ப்பதற்கும், உங்கள் பிள்ளை இளம் வயதினராக அவர்களின் எதிர்கால வாழ்வில் முழுத் திறனை அடைய உதவுவது தொடர்பான பல்வேறு உள்ளடக்கங்களையும் திறன்களையும் கொண்டுள்ளது.

ஜனவரியில் ஆரம்பமாகும் புதிய கல்வியாண்டிற்கு, இளம் மாணவர்களுக்கான பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது இணையத்தளமான www.britishcouncil.lk இல் உங்கள் மட்டம் தொடர்பான பரீட்சையை ஒன்லைனில் பதிவு செய்யலாம் அல்லது மேலதிக தகவலுக்கு 0707521521 எனும் இலக்கத்துடன் எம்மை அழைக்கவும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

මොරටුවෙන් කටුගස්තොට ට හා පුස්සැල්ලාවට අලුත් අවුරුදු තෑගිමොරටුවෙන් කටුගස්තොට ට හා පුස්සැල්ලාවට අලුත් අවුරුදු තෑගි

මොරටුව ලියෝ සමාජය විසින් සංවිධානය කරන ලද ව්‍යාපෘතියකට අනුව පුස්සැල්ලාව සිරි ඥානාවාස විද්‍යාලයට හා කටුගස්තොට ධර්ම විජය විද්‍යාලයට නව පාසල් වාරයට අවශ්‍ය පාසල් උපකරණ, පොත් පත් විශාල ප්‍රමාණයක් බෙදා දෙනු