𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz எமது நோக்கத்திற்காக வாழ்வோம்: Hemas நிறுவனத்திற்குள் ஆரோக்கிய துவாய் விநியோகத்தின் மூலம் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதார விடயங்களை இயல்பாக்கும் Fems Aya

எமது நோக்கத்திற்காக வாழ்வோம்: Hemas நிறுவனத்திற்குள் ஆரோக்கிய துவாய் விநியோகத்தின் மூலம் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதார விடயங்களை இயல்பாக்கும் Fems Aya

| | 0 Comments |

முன்னணி பெண்கள் சுகாதார வர்த்தக நாமமான Fems, கடந்த 2021 மார்ச் மாதத்தில், மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய நடைமுறைகள் குறித்து பெண்களுக்கு தெளிவுபடுத்தும் மற்றும் மலிவான விலையில் ஆரோக்கிய துவாய்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் ஆகிய இரு தனித்துவமான குறிக்கோள்களுடன் ஒரு புதிய பயணத்தை ஆரம்பித்தது.

அதன் முயற்சிகள் எதிர்பார்த்த முடிவுகளை விட சிறப்பான பெறுபேறுகளை வழங்கியிருந்த நிலையில், ஒரு பெரு நிறுவன முன்னோடி எனும் வகையில் Hemas, நிறுவனம் அதன் நோக்கத்தை நடைமுறைப்படுத்த, Fems Aya ஆரோக்கிய துவாய்களை அதன் முழு ஊழியர்களுக்கும் இலவசமாக விநியோகிக்கும் திட்டத்தை செயல்படுத்தியது. இதில் ஆண்களும் பங்குபெறும் வகையில் அவர்களின் நேரடியான உறவினர்கள் மற்றும் தொழில்முறை ரீதியான தொடர்பாளர்களிடையே விநியோகிக்கும் பொருட்டு அவர்களுக்கும் அதனை வழங்கியிருந்தது. மலிவான மற்றும் உயர்தர மாதவிடாய் சுகாதாரப் பொருட்களுக்கான அணுகலை நோக்காகக் கொண்டு, மாதவிடாய் தொடர்பான தவறான கருத்துகளை நீக்கும் வகையில் இந்நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனை நாடு முழுவதுமுள்ள கணிசமான அளவிலான பெண்களை சென்றடைவதனையும் நோக்கமாகக் கொண்டு MJF Foundation, ARKA Initiative, Sarvodya பெண்கள் அமைப்பு மற்றும் Sarvodaya Fusion போன்ற ஒரே எண்ணம் கொண்ட அமைப்புகளுடன் Fems Aya இம்முயற்சியை முன்னெடுத்தது.

மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய தெளிவூட்டலை ஏற்படுத்தி அது தொடர்பான கட்டுக்கதைகளை தகர்ப்பது காலத்தின் தேவையாக இருந்தது. காரணம், மாதவிடாய் காலத்தில் பெரும்பாலான பெண்கள் ஆரோக்கிய துவாய்களை உபயோகிக்காதவர்களாக இருந்தனர். Fems Aya ஆனது, பருத்தி உணர்வுடனான, விங்ஸ் (wings) அமைப்பைக் கொண்ட ஆரோக்கிய துவாயாகும், இது நாள் முழுவதும் சௌகரியத்தையும் உச்ச பாதுகாப்பையும் வழங்குவதுடன், அதிக விலை கொண்ட ஆரோக்கிய துவாய்களின் அதே தரத்தில், மலிவான விலையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

Fems Aya தற்போது Hemas இணைய வழி சந்தையில் கிடைக்கிறது:

https://hemasestore.com/brand/fems/

அத்துடன், சில்லறை மற்றும் நவீன வர்த்தக நிலையங்களிலும் கொள்வனவு செய்யலாம்.

ஒவ்வொருவரும் மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றி வெளிப்படையாகப் பேச முடியுமென Hemas நம்பும் அதே நேரத்தில், மாதவிடாய் தொடர்பான விழிப்புணர்வு மூலம், அது தொடர்பான களங்கத்தை துடைக்க முடியுமெனவும் அது நம்புகிறது. இக்கருத்தை இயல்பாக்க, ஆண்கள் ஒரு பாரிய பாத்திரத்தை வகிக்க முடியும். இதன் மூலம் இது தொடர்பான கருத்துகளை முழு சமூகமும் ஆதரிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

Hemas Consumer பற்றி

Hemas Consumer ஆனது, வீடு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புத் துறையில் மிகப்பாரிய இலங்கை நிறுவனமாகும். 70 ஆண்டுகளுக்கும் மேலான சிறந்த பாரம்பரியத்துடன், வலுவான நோக்கம் கொண்ட தரக்குறியிடூகள் கொண்ட தயாரிப்புகள் மற்றும் முற்போக்கான நிலைபேறான தன்மை நடைமுறைகள் மூலம், நுகர்வோர் இதயங்களை அது வென்றுள்ளது. இது உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளின் வரிசைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு தீர்வுகளை வழங்கி வருகிறது. வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட  புத்தாக்கம் மிக்க குழுக்கள் மூலம், உள்ளூர் தேவைகளை அறிந்து அதன் மூலம் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவது தொடர்பில் பாராட்டைப் பெற்றுள்ளது.

பல முன்னணி தரக்குறியீடுகளை தன்னகத்தே கொண்டு வலுப்பெற்றுள்ள Hemas Consumer Brands ஆனது, Aya பெண்களின் சுகாதாரம், புற்றுநோயாளிகளுக்கான குமாரிகா சொந்துறு திரியவந்தி போலி சிகை நன்கொடைத் திட்டம், பேபி செரமியின் முற்போக்கான பெற்றோருக்குரிய முன்முயற்சி போன்ற பல சமூக ரீதியான திட்டங்களை முன்னெடுத்து, தனது முயற்சிகளின் மூலம் புதுமைகளை உருவாக்கி மக்கள் வாழ்க்கையில் இடம்பிடித்துள்ளது. Hemas Consumer Brands சிந்தனையின் மூலம் புரட்சிகரமான தயாரிப்புகளான Vivya பாரம்பரிய அரிசி அடிப்படையிலான சருமப் பராமரிப்பு தயாரிப்புகள் மாத்திரமன்றி இயற்கை மீது அக்கறை கொண்டு Dandex Handy, Kumarika Poddi ஷாம்பு வகைகளின் பொதியிடல் மூலம், ஒற்றை உபயோகப் பொதிகளின் பயன்பாட்டை இல்லாதொழித்து, பசுமையான தேசத்திற்கான அதன் அர்ப்பணிப்பை அது காண்பிக்கிறது. அந்த வகையில், அனைத்து இலங்கையர்களுக்கும் மிகவும் நிலைபேறான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கு பங்களிப்பதனை நோக்காகக் கொண்டு, நிறுவனம் பல வழிகளிலும் முற்போக்காக செயற்பட்டு முன்னணியில் திகழ்கிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

දීවා විසින් නවතම “දීවා ෆ්‍රෙෂ් අරලිය” වෙළෙඳපොළට හඳුන්වාදෙයිදීවා විසින් නවතම “දීවා ෆ්‍රෙෂ් අරලිය” වෙළෙඳපොළට හඳුන්වාදෙයි

දීවා, සෑම විටම උත්සාහ කරනුයේ සුවිශේෂී සුවඳකින් යුක්ත, දේශීයත්වය අගයන නිෂ්පාදන වෙළෙඳපොළට හඳුන්වා දීමටයි. දීවා නවතම ප්‍රභේදය වන, දීවා ෆ්‍රෙෂ් අරලිය ඊට කදිම නිදසුනකි. දීවා ෆ්‍රෙෂ් අරලිය ශ්‍රී ලාංකේය අද්විතීය

හච්, Fortumo හා එක්ව බිල්පත් ගෙවීම් තවත් පහසු කරයිහච්, Fortumo හා එක්ව බිල්පත් ගෙවීම් තවත් පහසු කරයි

පාරිභෝගිකයින් වෙත උසස් සේවාවක් සැපයීමේ අරමුණින් ජංගම දුරකථන බ්‍රෝඩ්බෑන්ඩ් සේවාවන් සඳහා ශ්‍රී ලාංකීය පාරිභෝගිකයින් අතර වඩාත් ප්‍රියතම තේරීම වන හච් විසින්, ප්‍රමුඛ තාක්ෂණික සමාගමක් වන Fortumo හා සහයෝගීතාවයකට එළඹ ඇත.  

இலாபத்திற்கானதல்லாத கூட்டமைப்பு சிறுவர்களுக்கான இணையப்பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது LEADS, Save the Children International மற்றும் World Vision Lanka என்பன நிகழ்நிலை வன்முறையை முடிவுறுத்துவதில் தமது வீச்சினையும், விளைவுகளையும் வியாபித்துள்ளனஇலாபத்திற்கானதல்லாத கூட்டமைப்பு சிறுவர்களுக்கான இணையப்பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது LEADS, Save the Children International மற்றும் World Vision Lanka என்பன நிகழ்நிலை வன்முறையை முடிவுறுத்துவதில் தமது வீச்சினையும், விளைவுகளையும் வியாபித்துள்ளன

இலங்கையிலுள்ள பாதிக்கப்படத்தக்க சமூகங்களுடன் பணிபுரியும் இலாப நோக்கற்ற அமைப்புக்களான, LEADS, Save the Children International மற்றும் World Vision Lanka என்பன, இலங்கையிலுள்ள சிறுவர்களுக்கு எதிரான நிகழ்நிலை வன்முறைகள் மற்றும் சுரண்டல்களை முடிவுக்குக் கொண்டுவருவதில் தமது வீச்சு மற்றும் விளைவுகளை