𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz SINGER – SIGNATURE பிரத்தியேக Concept Center கொழும்பில் திறப்பு

SINGER – SIGNATURE பிரத்தியேக Concept Center கொழும்பில் திறப்பு

| | 0 Comments |

இலங்கையின் சில்லறை விற்பனை நிறுவனமான சிங்கர், மலேசியாவின் Signature குழுமத்துடன் கடந்த வருடம் கூட்டிணைந்ததன் மூலம், உலகின் முன்னணி சமையலறை தொகுதிகள் மற்றும் அலுமாரிகள், TV டிஸ்ப்ளேகள், workstations போன்ற வீட்டு உபகரணங்களை இலங்கையர்கள் அனுபவிக்க வாய்ப்பளித்துள்ளது. ஐரோப்பிய தன்மை, நேர்த்தி, பாணி, உயர்தரம் மற்றும் நீடித்து நிலைக்கும் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட மூலப்பொருட்களாலான உற்பத்திகளை, இலங்கையர்களும் அனுபவிப்பதற்கான வாய்ப்பு இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்க்கை முறைக்கான தீர்வுகளின் வலையமைப்பை உருவாக்கவும், சிங்கர் குழுவின் தொலைநோக்கு கொண்ட பார்வையானது, இலங்கையில் முதலாவது, Signature எண்ணக்கருவிலான Concept Center (அங்காடித் தொகுதி) இனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பிரத்தியேக Concept Center ஆனது நவீன வசதிகளுடனான, வர்த்தகத்திலிருந்து வர்த்தக (business-to-business: B2B) எண்ணக்கரு கொண்டதாகும். இது வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறைக்கு அவசியமான அதிகரித்து வரும் தேவையை, தீர்வுகளின் மூலம் பூர்த்தி செய்கிறது. சமையலறை தொகுதிகள் முதல் அலுமாரி, தொலைக்காட்சிகள், workstations உள்ளிட்ட Signature தயாரிப்புகளின் முழு அளவிலான தயாரிப்புகளை இந்த Concept Center காட்சிப்படுத்துகிறது.

கொழும்பின், டுப்ளிகேசன் வீதியில் அமைந்துள்ள இந்த Concept Center ஆனது, பொருட்களின் நிறுவலை காண்பிக்கும் நேரடியான வீடியோக்களை வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர் அனுபவத்தை மீள்வரையறை செய்கிறது. அத்துடன் சமையலறை உற்பத்திகளின் குறுக்குமுக தோற்றத்தை விரிவாக அறியக்கூடிய வகையில் அமைக்கப்பட்ட தெளிவுபடுத்தல் வலையத்தையும் கொண்டுள்ளது. அனைத்து தீர்வுகளையும் ஒரே இடத்தில் வழங்கும் இந்த Concept Center இல், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு அவசியமான பொருட்களை ஆராயவும், அவற்றை ஒப்பிடவும் முடியும் என்பதுடன், அங்குள்ள அர்ப்பணிப்புள்ள குழுவினரின் ஆலோசனை மற்றும் பரிந்துரைகளுக்கு அமைய, வாடிக்கையாளர்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப தயாரிப்புகளை அவற்றை தனிப்பயனாக்கவும் முடியும்.

சிங்கர் நிறுவனமானது, இதற்கு முன்னர் Signature வாழ்க்கை முறை தீர்வுகளை தயாரிப்பதற்காக பிலியந்தலையில் உள்ள அதன் உள்நாட்டு உற்பத்தி தொழிற்சாலையை விரிவுபடுத்தியிருந்தது. இந்நவீன தொழிற்சாலை, மலேசியாவின் Signature குழுமத்தின் கீழ் நன்கு பயிற்சி பெற்ற மற்றும் தகுதி வாய்ந்த குழுவின் மூலம் தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறது. உள்நாட்டில் Signature தரக்குறியீட்டு பொருட்களை தயாரிப்பதற்கான சிங்கரின் முடிவானது, இலங்கையின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்குவிப்பை வழங்குவதுடன், சர்வதேச தர தயாரிப்புகளை மலிவு விலையில் வழங்கவும் உதவுகிறது. அது மாத்திரமன்றி, தயாரிப்புகளை நிறுவுவதற்காக எடுக்கும் நேரம் ஒப்பீட்டளவில் குறைவு என்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புகளை, ஒரு சில நாட்களுக்குள்ளேயே, விற்பனைக்குப் பின்னரான மிக நம்பகமான சேவைகளுடன் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த Concept Center குறித்து, சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி நிறுவனத்தின் குழும பிரதான நிறைவேற்று அதிகாரி மஹேஷ் விஜேவர்தன கருத்து தெரிவிக்கையில், “Signature தயாரிப்புகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட எமது புதிய Concept Center மூலம் சர்வதேச அளவிலான அனுபவத்தை எமது வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விசாலமான தரிப்பிட வசதிகளுடன், பல்வேறு தயாரிப்புகள், சிறந்த அனுபவம் வாய்ந்த குழு ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த தனித்துவமான அங்காடித் தொகுதிக்கு செல்வதன் மூலம், அவை அனைத்தையும் அனுபவிக்க முடியும். Signature தரக்குறியீட்டின் தலைசிறந்த படைப்புகளானவை, துறைசார்ந்தவர்களின் தெரிவு என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. சில்லறை வர்த்தகர்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், B2B, கட்டுமானம், திட்டங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், இப்புதிய Concept Center இற்கு சென்று அதனை ஆராய்ந்து, உங்கள் கனவு வாழ்க்கைத் தீர்வுகளை வடிவமைக்குமாறு நாம் அழைப்பு விடுக்கிறோம்.” என்றார்.

உலகெங்கிலும் மிகவும் புகழ்பெற்ற தரக்குறியீடான Signature, புதுமை, உயர்தர வடிவமைப்பு, அது கொண்டுள்ள செயற்பாடுகளின் அடிப்படையில் அதன் அனைத்து பொருட்களும் உயர் தரமான மூலப்பொருட்களால் தயாரிக்கப்பட்டு நீடித்திருக்கும் வகையில் உறுதியளிக்கப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவம் மற்றும் 15 நாடுகளில் முன்னிலையிலும் உள்ள Signature ஆனது, வாழ்க்கைமுறை தீர்வுகளில் புதுமையான மற்றும் சமகால ஐரோப்பிய வடிவமைப்பிற்கு இணையான புகழைப் பெற்று விளங்குகின்றது.

இப்புதிய Concept Center இனைப் பார்வையிடுவதற்காக, திருமதி பியூஷாவை, 0763816654 எனும் இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு முற்பதிவு செய்ய முடியும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

இலங்கையரின் சருமத்திற்காக வடிவமைக்கப்பட்ட Velvet Body Lotion பாதுகாப்பான மூல்பொருட்களுடன் சிறந்த ஈரப்பதனை வழங்குகின்றதுஇலங்கையரின் சருமத்திற்காக வடிவமைக்கப்பட்ட Velvet Body Lotion பாதுகாப்பான மூல்பொருட்களுடன் சிறந்த ஈரப்பதனை வழங்குகின்றது

உங்கள் சருமத்திற்குப் பொருந்தாத சில தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். இலங்கையின் வெப்ப வலய காலநிலை காரணமாக, சருமத்தில் வறட்சி, பொலிவிழப்பு, எரிவு போன்ற தன்மைகள் ஏற்படுகிறது. வாடிக்கையாளர்கள் தாம் கொள்வனவு செய்யும் சருமமப் பராமரிப்புப் பொருட்கள்