மொபைல் புரேட்பேண்ட் சேவைகளுக்கான இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, புவியியல் சவால்களை மீறி முழு நாட்டிற்கும் புரோட்பேண்ட் கவரேஜை வழங்கும் நோக்கத்துடன் இலங்கை தொலைத்தொடர்பாடல் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) ஆரம்பித்த ‘கமட்ட சன்னிவேதனய’ திட்டத்துடன் கைகோர்த்துள்ளது. TRCSL இன் வழிகாட்டல் மற்றும் ஆதரவுடன், வெனிவெல் ஆர கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கும் மக்களுக்கும் அத்தியாவசிய இணைய இணைப்பை வழங்குவதற்கான முக்கிய நோக்கத்துடன் வெனிவெல் ஆர கோபுரத்தை HUTCH அறிமுகப்படுத்தியது.
வெனிவெல் ஆர, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள பின் தங்கிய கிராமமென்பதுடன், இங்கு 600 குடும்பங்களைச் சேர்ந்த 2200 பேரைக் கொண்ட மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. தற்போது கிராமத்தைச் சேர்ந்த 1,100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்லைன் கல்வி வசதிகளைப் பெறவேண்டிய தேவையைக் கொண்டுள்ளனர். இந்த மாணவர்கள் வெனிவெல் ஆர கிராமத்திற்கு அருகாமையில் உள்ள விஹாரகல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்தவர்கள். கிராமத்தின் முக்கிய சமூக மையமாக விளங்கும் வெனிவெல் ஆர புராண விகாரை, மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிறந்த ஞாயிறு பாடசாலையாக தெரிவாகியதுடன், இதுவும் முதல் முறையாக சரியான இணைய கவரேஜின் மூலம் பயனடையவுள்ளது.
இந்த திட்டம் குறித்து HUTCH இன் பிரதான நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா கருத்து தெரிவிக்கையில், “வெனிவெல் ஆர கிராமம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அவர்களின் இணைய தேவைகளை பூர்த்தி செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இது இந்த நேரத்தில் ஒரு முக்கியமான தேவையாகும். தற்போது ஒன்லைன் கல்வி என்பது கல்விக்கான அணுகலுக்கான ஒரே வழிமுறையாக மாறியுள்ளதுடம், இந்த பின் தங்கிய கிராமங்களை இணைய வசதிகளுடன் வலுவூட்டுவதும், அனைத்து மாணவர்களும் தங்கள் படிப்பைத் தொடர சம வாய்ப்புகளை வழங்குவதும் அவசியமாகும். இந்த முக்கியமான தேசிய முயற்சியை மேற்கொண்டு, பிரதிபலன்களை வழங்க தொழில்துறையுடன் இணைந்து பணியாற்றிய TRCSL இன் பணிப்பாளர் நாயகத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்,” என்றார்.
TRCSL இன் பணிப்பாளர் நாயகம், ஓஷத சேனாநாயக்க, ஹட்சின் இந்த முயற்சி தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “நாட்டின் டிஜிட்டல் உள்ளடக்க முயற்சிகளில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த நாடு தழுவிய முயற்சிக்கு ஹட்ச் தனது ஆதரவை வழங்குவது தொடர்பில் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். இந்த திட்டம் முக்கியமாக மக்கள் பெரும்பாலும் இணைப்பு சிக்கல்களை எதிர்கொள்ளும் பின் தங்கிய சமூகங்களை இலக்காகக் கொண்டுள்ளது. இப்போதைக்கு, ஒன்லைன் கற்றல் என்பது நம் வாழ்வின் ஒரு பகுதியாகும், எனவே கமட்ட சன்னிவேதனய திட்டம் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர வலுவூட்டுவதுடன், பல துறைகளில் தொழில்நுட்ப மாற்றத்தை அதிகரிக்கும். இந்த நாடளாவிய திட்டமானது, அனைவரும் தமது பிராந்தியம் எதுவாகினும் வலையமைப்பு தீர்வுகளை அணுகுவதை உறுதி செய்யும்,” என்றார்.
தொற்றுநோய் காலத்தில் மாணவர்களின் கல்வியின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்கான வழிமுறையாக ஒன்லைன் ஊடாக கற்றலுக்குக்கான மாற்றத்தைத் தூண்டியுள்ளது. பின் தங்கிய பிரதேசங்களில் சரியான இணைய இணைப்பு இல்லாதது பல மாணவர்களை சிரமங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. அரசாங்கத்தின் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுடன் கூடிய TRCSL இன் இந்த சரியான நேரத்திலான முயற்சி, நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு ஒன்லைன் கல்விக்கு சமமான அணுகலை வழக்க உதவும்.
அனைத்து இலங்கையர்களுக்கும் நம்பகமான இணைய இணைப்பை வழங்குவதற்கான முயற்சிகளிலும், செயற்படுத்தப்பட்டு வரும் கமட்ட சன்னிவேதன திட்டத்திற்கு ஆதரவளிப்பதிலும் HUTCH, தொடர்ந்து வலையமைப்பு இணைப்பை தொடர்ந்தும் கிராமப்புறங்களில் விரிவுபடுத்தும், அதே நேரத்தில் அனைவருக்கும் தொடர்ச்சியான இணைய அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.