𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz மே மாதம் 26, 27, 28 ஆம் திகதிகளில் எல்லையற்ற டேட்டா, எஸ்.எம்.எஸ் மற்றும் குரல் சலுகைகளை வழங்கும் HUTCH டிஜிட்டல் வெசாக் தானசாலை

மே மாதம் 26, 27, 28 ஆம் திகதிகளில் எல்லையற்ற டேட்டா, எஸ்.எம்.எஸ் மற்றும் குரல் சலுகைகளை வழங்கும் HUTCH டிஜிட்டல் வெசாக் தானசாலை

| | 0 Comments |

இலங்கையின் விருப்பமான மொபைல் புரோட்பேண்ட் சேவைத் தெரிவான HUTCH, வெசாக் உணர்வை பகிர்ந்து கொள்ளும் முகமாக, அதன் டிஜிட்டல் வெசாக் தானசாலையை 2021  மே 26 முதல் மே 28 வரை தொடர்ந்து 7 வது ஆண்டாகவும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சவாலான காலகட்டத்தில் தாராள மனப்பான்மையையும் இரக்க உணர்வையும் வளர்த்துக் கொள்ளும் விதமாக HUTCH, அதன் அனைத்து Hutch சந்தாதாரர்களையும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வெசாக் பண்டிகையை கொண்டாட அழைப்பு விடுப்பதுடன், சிறப்பு FOC எல்லையற்ற சலுகைகள் மூலம் தமது டேட்டா, எஸ்.எம்.எஸ் மற்றும் குரல் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

மே மாதம் 26, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்திற்கு எல்லையற்ற டேட்டா,  H-H அழைப்புகள் அல்லது H-H எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை இலவசமாக HUTCH வழங்குகின்றது. அனைத்து 072/078 வாடிக்கையாளர்களும் *311# ஐ டயல் செய்வதன் மூலமோ அல்லது HUTCH Self Care செயலி மூலமாகவோ இந்த சலுகைகளைப் பெறலாம். வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் அதை செயல்படுத்துவதன் மூலம் மூன்று நாட்களிலும் இந்த சலுகையை அனுபவித்து மகிழ முடியும்.

இந்த புதுமையான முயற்சி தொடர்பில் HUTCH இன் சந்தைப்படுத்தலுக்கான சிரேஷ்ட முகாமையாளர் இரங்க அமந்தகோன் கருத்து தெரிவிக்கையில்,” ஒரு “தானசாலை” என்பது எங்கள் வெசாக் கொண்டாட்டங்களின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும். மேலும், கொடுத்தலை தொடரும் முகமாக  எல்லையற்ற டிஜிட்டல் வெசாக் தானசாலையை  இந்த ஆண்டும் ஆரம்பிக்கின்றோம். இலங்கையர்களாகிய நாங்கள் கோவிட் தொற்றுநோயால்  இரண்டாவது ஆண்டாக வெசாக் பண்டிகையை உள்ளிருந்தவாறே கொண்டாடுவதோடு, இந்த நல்லெண்ண வெளிப்பாடானது  எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும், அவர்களின் அன்புக்குரியவர்களுடன் வெசாக்கினை கொண்டாடவும் உதவும் என்று நம்புகிறோம்,” என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

4ஆவது PropertyGuru Asia Property Awards (இலங்கை) நாட்டின் முதன்மையான ரியல் எஸ்டேட் மேம்பாட்டளார்கள், திட்டங்களின் தேடல்4ஆவது PropertyGuru Asia Property Awards (இலங்கை) நாட்டின் முதன்மையான ரியல் எஸ்டேட் மேம்பாட்டளார்கள், திட்டங்களின் தேடல்

இலங்கையின் மிகவும் ஈர்க்கக்கூடிய சொகுசான மற்றும் வாழ்க்கை முறை மேம்பாட்டாளர்களுக்கான கௌரவத்துடன் முன்னணி ரியல் எஸ்டேட் விருதுகள் திட்டம் மீண்டும் ஆரம்பம் சிறந்த மேம்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையின் சிறந்த விருதுகள் உள்ளிட்ட ஏழு விருதுகளுடன் Home Lands Skyline (Pvt) Ltd

கேரகல ரஜ மஹா விகாரையை தொடர்ச்சியாக 7ஆவது ஆண்டாகவும் ஒளியூட்டும் சுவதேசி கொஹம்பகேரகல ரஜ மஹா விகாரையை தொடர்ச்சியாக 7ஆவது ஆண்டாகவும் ஒளியூட்டும் சுவதேசி கொஹம்ப

இலங்கையின்  மூலிகை பராமரிப்பு தயாரிப்புகளுக்கான சந்தையில் முன்னோடியும், முன்னணி நிறுவனமுமான சுவதேசி இன்டஸ்ரியல் வேர்க்ஸ் பிஎல்சி, தனது சமூக ஆதரவு முயற்சியின் ஓர் அங்கமாக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேரகல ரஜ மஹா விகாரையின் “ஆலோக பூஜை” இற்கு அண்மையில் அனுசரணை