𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz ஒன்லைனில் 1000 க்கும் மேற்பட்ட கேம்ஸ்களுக்கு எல்லையற்ற அணுகலை வழங்கும் HUTCHGoPlay

ஒன்லைனில் 1000 க்கும் மேற்பட்ட கேம்ஸ்களுக்கு எல்லையற்ற அணுகலை வழங்கும் HUTCHGoPlay

| | 0 Comments |

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் தெரிவான HUTCH, கேம்ஸ்களை தரவிறக்க வேண்டிய தேவையற்ற, மொபைல் பிரவுசர் அடிப்படையிலான விளையாட்டுகளுக்கான இலங்கையின் மிகப்பெரிய தளமான HUTCHGoPlay இனை அறிமுகப்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களின் கேமிங் எதிர்பார்ப்புகளை புதுமையாக நிறைவேற்றியுள்ளது.

மொபைல் கட்டணம் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கங்களை பணமாக்குவதில் நிபுணத்துவமிக்க Digital Virgo நிறுவனத்துடன் இணைந்து HUTCH பாவனையாளர்களுக்கான பிரத்தியேக கேமிங் தளமாக அறிமுகப்படுத்தப்பட்ட HutchGoPlay,  Tom & Jerry, Sonic, Smurfs, Garfield, Subway Surfers, Ludo, Fruit Slicer, Chess, Snakes and Ladders போன்ற மிகவும் பிரபலமான கேம்ஸ்களுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் அனைவரின் கேமிங் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றது. எந்தவொரு மொபைல் வெப் பிரவுசர் வழியாகவும் எளிதாக அணுகக்கூடிய HUTCHGoPlay, பல்வேறு வகையான 1000 க்கும் மேற்பட்ட கேம்ஸ்களை பாவனையாளர்கள் தமது விருப்பத்திற்கேற்ப தெரிவு செய்யும் வகையில் கொண்டுள்ளது.

HUTCHGoPlay கேமர்களுக்கு முற்றிலும் விளம்பரங்கள் இல்லாத இடைமுகத்தை வழங்குகின்றது. இது அதன் பிரிவில் குறிப்பிடத்தக்க அம்சமென்பதுடன், தரவிறக்கம் செய்யாமல் எல்லையற்ற கேம்ஸ்களை விளையாடும் வசதியையும் வழங்குகிறது.

இந்த கேமிங் மையமானது HUTCH பாவனையாளர்களுக்கு குறைந்தபட்ச தரவு நுகர்வுடன் கட்டுப்படியாகும் கட்டணத்தில் கேமிங் தீர்வுகளை வழங்கும் அதேவேளை அனைத்து Hutch சந்தாதாரர்களுக்கும் நேரடி கெரியர் பில்லிங் ஊடாக நாளொன்றுக்கு ரூபா 5 + வரிகள் என்ற கட்டணத்தில் கிடைக்கின்றது.

எந்தவொரு HUTCH  பாவனையாளரும் HUTCHGoPlay என்ற  இணையத்தளத்துக்கு விஜயம் செய்து தமது மொபைல் இலக்கத்தினை வழங்குவதன் மூலம், OTP இனை பெற்றுக்கொண்டு அதனை உள்ளிடுவதன் மூலம் இந்த சேவையை subscribe செய்துகொள்ளலாம்.

HUTCHGoPlay  கேமிங் தளம் தொடர்பில் HUTCHஇன் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர்கள் ஹம்தி ஹசன், கருத்து தெரிவிக்கையில்,” மொபைல் கேம்ஸ்கள் இப்போது முக்கிய பொழுதுபோக்குகளில்  ஒன்றாகும், ஆனால் பெரும்பாலான கேம்ஸ்களை அதிக தரவு பயன்பாடு மற்றும் சேமிப்பக கட்டுப்பாடுகளை மீறி தரவிறக்கம் செய்ய வேண்டும். இதனால் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான கேம்ஸ்களுக்கான அணுகல் மாத்திரமே கிடைக்கின்றது. தேவைக்கேற்ப ஏராளமான விளையாட்டுகளுக்கு அணுகலை வழங்குவதன் மூலம் புரட்சிகர கேமிங் அனுபவத்தை HUTCHGoPlay  வழங்குகின்றது. இந்த புதிய கேமிங் தளத்தை அனுபவித்து மகிழ நாம் அனைவரையும் அழைக்கிறோம், அங்கு ஒரு பரபரப்பான அனுபவம் அவர்களுக்கு காத்திருக்கிறது,” என்றார்.

“நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த பங்குடமையானது இலங்கையின் கேமிங் சந்தையின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய உயர் பெறுமதி சேர்ந்த தயாரிப்புகளை வழங்க அனுமதிக்கிறது. ஆசியாவில் எங்கள் தடத்தை தொடர்ந்து விரிவடையச் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், எங்கள் பிரீமியம் உள்ளடக்கம் மற்றும் பில்லிங் சேவைகளை பிராந்தியமெங்கும் Hutch இற்கு கொண்டு வர எதிர்பார்க்கின்றோம்,” என Digital Virgo இன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் வின்சென்ட் தராடெல் தெரிவிக்கின்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post