𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz புதிய தயாரிப்புகள் மற்றும் விசேட கழிவுகளுடன் புத்தாண்டை வண்ணமயமாக்கும் Pelwatte

புதிய தயாரிப்புகள் மற்றும் விசேட கழிவுகளுடன் புத்தாண்டை வண்ணமயமாக்கும் Pelwatte

| | 0 Comments |

பாலுற்பத்தியில் முன்னணியில் திகழும் உள்நாட்டு நிறுவனமான Pelwatte Dairy, நாடு பூராகவும் உள்ள கீல்ஸ் சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட விற்பனையகங்களில் எதிர்வரும் 2021 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை Pelwatte பட்டர் மற்றும் Pelwatte நெய் ஆகியவற்றுக்கு விசேட தள்ளுபடியை வழங்குகிறது. இதன் மூலம் இலங்கையர்கள் தமக்கு விருப்பமான இனிப்புகள் மற்றும் தீன்பண்டங்களுடன் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை கொண்டாட வழி செய்கின்றது.

இந்த புத்தாண்டு பருவகாலத்தில், இலங்கையர்கள் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பருவத்தை தங்கள் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் கொண்டாடுவதால், Pelwatte அதன் அனைத்து நெய் மற்றும் பட்டர் தயாரிப்புகளுக்கு 10% தள்ளுபடியை தெரிந்தெடுக்கப்பட்ட சூப்பர் மார்க்கெட் சங்கிலிகள் மற்றும் விற்பனையாளர்கள் மூலம் வழங்குகின்றது. இவற்றின் உற்பத்தியின் போது மிகவும் கடுமையான தர நியமங்கள் பின்பற்றப்படும் அதேநேரத்தில் செயற்கை காப்புப்பொருள்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை. எனவே, Pelwatte அனைத்து வயதிற்குரிய நுகர்வோருக்கும் ஆரோக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த, நவீன வர்த்தக முகாமையாளர், சமிந்த பத்திரன, “இந்த புதுவருட பருவத்தில் அதிகம் கேள்வியுடைய எங்கள் தயாரிப்புகளுக்கு பிரத்தியேக சலுகைகளை வழங்குவதில் நாங்கள் மிகவும்  மகிழ்ச்சியடைகின்றோம். ஒப்பிடமுடியாத தரம் மற்றும் விலை நிச்சயமாக எங்கள் நுகர்வோருக்கு உதவும் என்று நாங்கள் நம்புவதோடு, எங்கள் நுகர்வோர் மற்றும் பாற்பண்ணையாளர் சமூகத்திற்கு எங்கள் ஆதரவை மேலும் உறுதி செய்கின்றோம்,” என்றார்.

Pelwatte பட்டர் உள்நாட்டில் கிடைக்கும் பாலில் இருந்து பெறப்படும் கொழுப்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதுடன், இது அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. புதிய பாலில் உள்ள கொழுப்பிலிருந்து, காப்புப்பொருள்கள் எதுவும் பயன்படுத்தப்படாமல் தயாரிக்கப்படுகின்றது. புதிய பாலில் சுமார் 4 – 5 % கொழுப்பு உள்ளது, மேலும் பட்டர் உற்பத்தி செயல்முறை கொழுப்பு சதவீதத்தை அதிகரிக்கச் செய்கிறது. எனினும் Pelwatte இல் கொழுப்பு சதவீதத்தைக் கட்டுப்படுத்த ஒரு தரப்படுத்தல் செயல்முறை பயன்படுத்தப்படுகின்றமையானது Pelwatte பட்டர் முழுவதும் இயற்கையானது என்று கருதப்படுவதற்கான மற்றொரு காரணமாகும்.

Pelwatte இன் விரிவான தயாரிப்பு வரிசையானது பல முன்னணி நட்சத்திர ஹோட்டல்களின் சமையலறைகளில் பயன்படுத்தப்படுகிறது. விருந்தோம்பல் துறையில் வழங்கப்படும் தயாரிப்பு வரிசைகளில், Pelwatte நெய்யானது தாய், இந்திய, இந்தோனேசிய, மத்திய கிழக்கு மற்றும் மலேசிய உணவு வகைகளின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது.

Pelwatte பல வகையான ஐஸ் கிரீம் தயாரிப்புகளைக் கொண்டுள்ளதுடன், முதற்தர மற்றும் பொருளாதார வரிசையின் கீழ் முற்றிலும் புதிய இரண்டு தயாரிப்பு வரிசைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது Vanilla, Chocolate, Fruit & Nut, Banana, Mango, Strawberry, Coconut with Cardamom Ice cream, Coffee with Cardamom, Blueberry, Faluda, Ginger biscuit  மற்றும் Butterscotch ஆகிய சுவைகளில் ஐஸ் கிரீம்கள் கிடைக்கின்றன.

உள்ளூர் பால் விவசாயிகளின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்தும் அதே வேளையில் நாட்டின் உள்நாட்டு பால் தேவையை பூர்த்தி செய்வதில் Pelwatte Dairy எப்போதும் தீவிரமாக கவனம் செலுத்துகிறது. பால் உற்பத்தியில் நாட்டின் தன்னிறைவு முதன்மையான நோக்கமாக இருக்கும்போது, ​​ Pelwatte Dairy பண்ணையாளர்கள், அவர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் குடும்பங்களை எண்ணற்ற வழிகளில் ஆதரிக்கிறது – அவர்களை வலுவூட்டி, அவர்களின் வளர்ச்சியையும் தேசத்தின் வளர்ச்சியையும் வழிநடத்துகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

තවදුරටත් උසස් කළ HUTCH Self Care App සමග හච් අත්දැකීම දැන් ඔබේ ඇඟිලි තුඩටතවදුරටත් උසස් කළ HUTCH Self Care App සමග හච් අත්දැකීම දැන් ඔබේ ඇඟිලි තුඩට

ජංගම දුරකතන සන්නිවේදන සේවා සඳහා ශ්‍රී ලංකාවේ වඩාත් ප්‍රියතම තේරීම වන හච්, ස්වකීය පාරිභෝගිකයින් හට වැඩි දියුණු කළ වඩාත් උසස් යෙදවුම් අත්දැකීමක් පිරි නැමීම සඳහා, ජනප්‍රිය HUTCH Self Care යෙදවුමෙහි

ප්‍රොපර්ටි ගුරු, ආසියා- පැසිෆික් සම්මාන උළෙලේ දී දේපොළ හා ඉදිකිරීම් ක්ෂේත්‍රයෙහි කැපී පෙනෙන කලාපීය සමාගම් රැසක් සම්මානයෙන් පිදුම් ලබයිප්‍රොපර්ටි ගුරු, ආසියා- පැසිෆික් සම්මාන උළෙලේ දී දේපොළ හා ඉදිකිරීම් ක්ෂේත්‍රයෙහි කැපී පෙනෙන කලාපීය සමාගම් රැසක් සම්මානයෙන් පිදුම් ලබයි

අග්නිදිග ආසියාවේ ප්‍රමුඛතම දේපළ වෙළෙඳාම් සමාගමක් වන ප්‍රොපර්ටි ගුරු විසින් 15 වැනි වරට පවත්වන ලද ප්‍රොපර්ටි ගුරු ඒෂියා ප්‍රොපර්ටි සම්මාන උළෙල පසුගියදා කලාපයේ ප්‍රමුඛතම සමාගම් රැසක් සහභාගි කර ගනිමින්, පසුගියදා