𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz இலங்கையில் அதிவேக 5G அனுபவத்தை நிரூபித்த HUTCH

இலங்கையில் அதிவேக 5G அனுபவத்தை நிரூபித்த HUTCH

| | 0 Comments |

இலங்கையை புதிய 5G சகாப்தத்திற்கு அழைத்துச் செல்லும் HUTCH  நிறுவனம், அண்மையில் HUTCH One Galle Face  ப்ரீமியர் எக்பீரியன்ஸ் சென்டரில் இடம்பெற்ற அதன் ஆரம்ப 5G பரீட்சார்த்த நிகழ்வில், இலங்கை தொலைத்தொடர்பாடல் வழங்குனரொருவர் எட்டிய உச்சபட்ச 5G வேகத்தை எட்டியது.

பல்வேறு செயல் விளக்கங்கள் மற்றும் பயன்பாட்டு நிகழ்வுகளை உள்ளடக்கியிருந்த இந்த புரட்சிகர 5G பரீட்சார்த்த முயற்சியின் பொருட்டு HUTCH, தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ZTE உடன் கைகோர்த்தது.

இந்த 5G  சோதனைகள் பிரதம விருந்தினரான,  இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், ஓசத சேனாநாயக்க, HUTCH நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா மற்றும் HUTCH முகாமைத்துவத்தினரின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த 5G பரீட்சார்த்த நடவடிக்கையானது பல செயல்முறை விளக்கங்களைக் கொண்டிருந்ததுடன்,  Ookla global broadband speed test இனையும் உள்ளடக்கியிருந்தது. இதில் இலங்கையில் இதுவரை பதிவான அதி கூடிய 5G வேகமான 1.8Gbps இனை HUTCH எட்டியிருந்ததுடன், மிகக் குறைந்த low latency (Ping) வீதத்தை அடைந்தது. கேமிங், ரிமோட் மீட்டிங் மற்றும் 5G இனைப் பயன்படுத்தி high definition வீடியோ பிளேபேக் உள்ளிட்ட 5G பயன்பாட்டு நிகழ்வுகளின் மூலம் HUTCH இதனை நிரூபித்ததுடன், பங்கேற்பாளர்களுக்கு 5G இன் செயல்திறனை 4G மற்றும் 3G உடனான ஒப்பீட்டின் மூலம் வேறுபடுத்திக் காட்டியிருந்ததுடன், இது எதிர்காலத்திற்கு 5G கொண்டுள்ள நன்மைகளையும் வெளிப்படுத்தியிருந்தது.

இந்த புதிய மைல்கல் தொடர்பில் கருத்து தெரிவித்த HUTCH இன் பிரதம நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா, “இது உண்மையில் HUTCH இல் உள்ள நம் அனைவருக்கும் ஒரு சிறப்பான தருணமாகும். எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு அதிகமாக வழங்கும் முற்படும் ஒரு நிறுவனம் என்ற வகையில், புதிய HUTCH வலையமைப்பானது 5G தயார் நிலையில் உள்ளதுடன், இது தொழில்நுட்ப மாற்றத்தின் புதிய சகாப்தத்தை உருவாக்குகின்றது. HUTCH இல், நாங்கள் எப்போதும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்கங்களை நம்புகிறோம். மேலும், இலங்கைக்கு அண்மைய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை வழங்கும் வகையில், நவீனமாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்,” என்றார்.

அதி நம்பகமான low latency, பாரிய இயந்திர வகை தகவல்தொடர்புகள் மற்றும் மேம்பட்ட மொபைல் புரோட்பேண்ட் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் கிட்டத்தட்ட ஒவ்வொரு தொழிற்துறையும் மின்னல் வேகமான தரவிறக்க வேகத்தை வழங்குவதற்கும், மக்கள், வணிகங்கள் மற்றும் சமூகத்தின் மேம்பாட்டுக்காக  நிகழ்நேர தரவு அடிப்படையிலான நுண்ணறிவுகளுக்கான அணுகலையும் வழங்கவும் 5G ஆனது செல்வாக்குச் செலுத்தும் ஆற்றல் மிக்கதாகக் கருதப்படுகின்றது. ஸ்மார்ட் நகரங்கள், தன்னியக்க வாகனங்கள், Augmented Reality (AR)/Virtual Reality (VR), தொழிற்துறை ஒட்டோமேஷன் மற்றும் பல பயன்பாடுகளுக்கு 5G வலையமைப்புகள் தேவைப்படும். மேலும், 5G வலையமைப்புகள் கிடைத்தவுடன் இன்னும் பல புத்தாக்கங்கள் தொடர்ந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய Fortune 500 conglomerate இன் ஒரு பகுதியாக இருக்கும் வலிமையுடன், உலகளாவிய ரீதியில் 5G வலையமைப்பை அறிமுகப்படுத்தியவொரு தொலைத்தொடர்பு வழங்குனர்களில் ஒருவரும், தாய் நிறுவனமுமான CK Hutchison Holdings இன் நிபுணத்துவத்தை HUTCH பயன்படுத்துகின்றது. ஒரு முன்னணி தொலைதொடர்பாடல் சேவை வழங்குனராக இருப்பதால், CK Hutchison மொபைல் புரேட்பேண்ட் மற்றும் வணிக நோக்கங்களுக்காக உலகளாவிய 5G இயக்கத்தில் ஒரு முக்கிய நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், ஏற்கனவே ஆஸ்திரியா, டென்மார்க், ஹொங்கொங், அயர்லாந்து, இத்தாலி, ஸ்வீடன் மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான தனது உறுதிப்பாட்டை தெளிவாக நிரூபித்துள்ளது.

நாடுமுழுவதுமான பரந்த 4G விரிவாக்கத்துடன் கடந்த ஆண்டு எடிசலாட் இணைப்பை நிறைவு செய்ததன் பின் 5G பரீட்சார்த்த நடவடிக்கைகளை Hutch மேற்கொண்டது. இது இலங்கையில் ஹட்சின் நீண்டகால நேசத்துக்குரிய பயணத்தில் ஒரு முக்கிய தருணம் என்பதை நிரூபித்தது. 3G இலிருந்து தொடங்கி 4G ஐ நோக்கி நகர்ந்து எதிர்கால 5G என அனைத்து வாடிக்கையாளர் பிரிவுகளும் சிறந்த தரவு அனுபவத்தை வழங்கும் நிலையான உயர் திறன் கொண்ட புரேட்பேண்ட் வலையமைப்பினை அணுகுவதை HUTCH உறுதி செய்யும்.

HUTCH தொடர்பில்

Hutchison Telecommunications Lanka (Pvt) Limited, இலங்கையில் உள்ள முன்னணி 4G புரேட்பேண்ட் தொலைத்தொடர்பாடல் சேவை வழங்குனரென்பதுடன், 1997 ஆம் ஆண்டு முதல் HUTCH என்ற வர்த்தகநாமத்தின் கீழ் இயங்கி வருகின்றது. இது தற்போது நாடு தழுவிய 2G,3G மற்றும் 4G வலையமைப்புகளை சிறந்த தரவு அனுவத்தை வழங்கும் பொருட்டு இயக்கி வருகின்றது. மொபைல் சந்தாதாரர்களின் முக்கிய தேவைகளை நிவர்த்தி செய்யும் புதுமையான மற்றும் கட்டுப்படியாகும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் ஸ்மார்ட் தொலைத்தொடர்பு வர்த்தகநாமகாக இந் நிறுவனம் ஒரு பயணத்தை மேற்கொண்டுள்ளது.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட பாரிய நிறுவனமான CK Hutchison Holdings Limited (CK Hutchison) இற்கு பெரும்பான்மையாகச் சொந்தமான துணை நிறுவனமே HUTCH ஆகும். உலகளவில் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குவதுடன், 300,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை இது கொண்டுள்ளது. CK Hutchison ஹொங்கொங் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும், இது டிசம்பர் 31, 2019 அன்று முடிவடைந்த ஆண்டில் சுமார் 56 பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது.

Hutchison Asia Telecom மற்றும் CK Hutchison Holdings Limited தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.ckh.com.hk/en/global/home.php மற்றும் www.hutch.lk.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

කලා පොළ 2020 සාර්ථකව පැවැත්වෙයිකලා පොළ 2020 සාර්ථකව පැවැත්වෙයි

ජෝන් කීල්ස් සමූහය හා ජෝර්ජ් කීට් පදනම එක්ව පවත්වනු ලැබූ කලා පොළ, 2020 පෙබරවාරි 23 වැනිදා, කොළඹ 07 ආනන්ද කුමාරස්වාමි මාවතේදී පැවැත්විණි.  27 වැනි වරටත් පැවැත්වුණු ශ්‍රී ලංකාවේ විශාලතම එළිමහන්