𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz ஸ்மார்ட் தயாரிப்பு வரிசையின் அங்கமாக நீண்ட காலம் செல்லுபடியாகும் டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தும் HUTCH

ஸ்மார்ட் தயாரிப்பு வரிசையின் அங்கமாக நீண்ட காலம் செல்லுபடியாகும் டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தும் HUTCH

| | 0 Comments |

பெக்கேஜ் காலாவதியாவதால் பயன்படுத்தப்படாத டேட்டா ஒதுக்கீட்டை இழக்க நேரிடும் என்ற வாடிக்கையாளரின் கவலையை தீர்ப்பதற்கான மற்றுமொரு முன்னோடி தீர்வாக HUTCH, 60  நாட்கள் வரையிலான நீட்டிக்கப்பட்ட செல்லுபடியை வழங்கும் நீண்ட காலம் செல்லுபடியாகும் டேட்டா திட்டங்களை (Longer Validity Anytime data plans) அண்மையில் அறிமுகப்படுத்தியது.

நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம், பயன்படுத்தப்படாத தரவு ஒதுக்கீட்டை இழப்பது குறித்து அதன் வாடிக்கையாளர்கள் இப்போது கவலைப்படத் தேவையில்லை என்பதை HUTCH உறுதி செய்துள்ளது.

HUTCH நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டங்களின் மூலம், வாடிக்கையாளர்கள் தாங்கள் செலுத்திய பணத்துக்கான அனைத்து தரவு ஒதுக்கீட்டையும் பயன்படுத்தக்கூடிய சுதந்திரம் இப்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படாத தரவு முன்கூட்டியே இழக்கப்படலாம் என்று கவலைப்பட்ட குறைந்தளவு தரவினை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு நீண்ட கால செல்லுபடியாகும் திட்டங்கள் ஒரு சிறந்த மாற்றாகும். மேலும் என்னவென்றால், இந்த நீட்டிக்கப்பட்ட செல்லுபடியாகும் திட்டங்கள் 100% anytime டேட்டா திட்டங்களை மட்டுமே வழங்குகின்றன.

அனைத்து வாழ்க்கைப் பிரிவுகளின் தரவுத் தேவைகளுக்கும் ஏற்ப மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டங்கள் வெறும் ரூ. 59 இலிருந்து பல வகையான டேட்டா தீர்வுகளை வழங்குகின்றன.

Data, VAS மற்றும் Digital இற்கான பிரதி பொது முகாமையாளர், யார்தவ் மதியாபரணம் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “இன்றைய தொலைத்தொடர்பு பாவனையாளர்களின் முக்கிய கவலைகளை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் பல புதுமையான தீர்வுகளை வழங்குவதில் நாங்கள் முன்னோடியாக உள்ளோம். பிரபலமான 100% டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியது Hutch ஆகும். இப்போது நீண்ட காலம் செல்லுபடியாகும் Anytime திட்டங்களுடனும், தரவை அதிகம் பயன்படுத்தாத, பெக்கேஜின் செல்லுபடித்தன்மை காலாவதியாகும் போது தமது பயன்படுத்தாத டேட்டா ஒதுக்கீட்டை இழக்கும் பாவனையாளர்களின் மற்றொரு முக்கிய கவலையை நாங்கள் தற்போது நிவர்த்தி செய்கிறோம். இந்த நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டங்களுடன், பாவனையாளர்கள் 15 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ. 59 பெறுமதியான Anytime  திட்டம் முதல் 60 நாட்கள் வரை செல்லுபடியாகும் பெரிய பொதிகள் வரை தெரிவு செய்யலாம். இத்துறையில் Hutch இன் மேலுமொரு அறிமுகப்படுத்தல் இதுவென்பதுடன்,  நீண்ட கால வாடிக்கையாளர்களின் சிக்கல்களை நிவர்த்தி செய்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்,” என்றார்.

சௌகரியமான HUTCH App, * 131 # ஐ டயல் செய்தல், சரியான பெறுமதியை ரீலோட் செய்தல் அல்லது எஸ்.எம்.எஸ் வழியாகவும் வாடிக்கையாளர் விருப்பங்களுக்கு ஏற்ற அனைத்து நீண்ட காலம் செல்லுபடியாகும் திட்டங்களையும் செயல்படுத்திக்கொள்ள முடியும். மேலும், பாவனையாளர்களுக்கு அவர்களின் தரவு ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மையை வழங்க, மீதமுள்ள செல்லுபடியாகும் விபரங்கள் எப்போதும் HUTCH Selfcare App வழியாக காட்சிப்படுத்தப்படுகின்றன. Hutch Selfcare App இனை Google Play, Apple App Store  மற்றும்  Huawei App Gallery ஆகியவற்றிலிருந்து எளிதாக தரவிறக்கம் செய்யலாம்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ශ්‍රී ලංකාව තුළින් ඔසප් දරිද්‍රතාවය තුරන් කිරීම උදෙසා “Fems” වෙතින් තවත් පියවරක්ශ්‍රී ලංකාව තුළින් ඔසප් දරිද්‍රතාවය තුරන් කිරීම උදෙසා “Fems” වෙතින් තවත් පියවරක්

වර්තමානය වන විට කාන්තාවන්, එදිනෙදා ගෙදර දොර සහ රැකියාව ආශ්‍රිත වගකීම් හේතුවෙන් ඉහළ කාර්යබහුලත්වයකට  පත්වී සිටී. මෙම කාර්යබහුලත්වය හේතුවෙන් කාන්තාවන් සැළකිය යුතු ප්‍රමාණයක් සිය සෞඛ්‍යය හා සනීපාරක්‍ෂාව කෙරෙහි  ප්‍රමුඛතාවක් නොදක්වයි.