𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz SLIM DIGIS 2.0 விருதினை வென்ற ஒரேயொரு தொலைத்தொடர்பு வர்த்தகநாமம் என்ற கௌரவத்தை பெற்றுக்கொண்ட Hutch

SLIM DIGIS 2.0 விருதினை வென்ற ஒரேயொரு தொலைத்தொடர்பு வர்த்தகநாமம் என்ற கௌரவத்தை பெற்றுக்கொண்ட Hutch

| | 0 Comments |

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, தொலைத்தொடர்பு துறையில் அதன் நன்மதிப்பை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற புதுமையான 360 பாகை டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரசாரங்களுக்காக SLIM DIGIS 2.0 வருடாந்த விருது வழங்கும் விழாவில் விருதொன்றை தனதாக்கிக் கொண்டது. கடுமையாக அமைந்த போட்டியையும் மீறி “Digital Campaigns Excellence 2019” பிரிவில் வெண்கல விருதினை Hutch வெற்றி கொண்டதுடன், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் வெற்றியை தனதாக்கிக் கொண்ட ஒரேயொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் இதுவாகும்.

இந்த விருது தொடர்பில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட Hutch இன் பிரதான நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா அவர்கள், “SLIM DIGIS 2.0 விருதுகள் நிகழ்வில் வெற்றியை தனதாக்கிக் கொண்ட நிறுவனங்களில் ஒரேயொரு தொலைத்தொடர்பு நிறுவனமாக நாங்கள் தெரிவாகியுள்ளமை தொடர்பில் உண்மையிலேயே பெருமைப்படுகிறோம். இலங்கைக்குள் Hutch வர்த்தகநாமத்தின் இருப்பை உயர்த்திய எங்கள் டிஜிட்டல் பிரசாரங்களின் சிறந்த தரத்தை வரையறுக்கும் ஒரு சாதனை இதுவாகும். எங்கள் டிஜிட்டல் ஏஜென்சி பங்காளனரான Digi brush உடன் எங்கள் அர்ப்பணிப்புள்ள Hutch குழு பணியாற்றாமல் இந்த சாதனை சாத்தியமில்லை என்பதுடன், மைல்கல்லாக அமைந்த இந்த வெற்றிக்கு நான் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்,” என்றார்.

இந்த விருது வாடிக்கையாளர் தொடர்பாடல்களில் Hutch இன் புத்தாக்கத்துக்கான சான்றே இந்த விருதாகும். Etisalat – Hutch உடன் இணைந்ததன் பின்னர் நாடு முழுவதுமான 4G விரிவாக்கத்திற்கு இணையாக வெற்றிகரமான டிஜிட்டல் சந்தைப்படுத்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அதன் செய்தி பெருமளவிலான பார்வையாளர்களை சென்றடைவதை உறுதிசெய்ய டிஜிட்டல் சந்தைப்படுத்தல் முயற்சிகளை விரிவாகப் பயன்படுத்தியதுடன்,  பின்னர் நவீன டிஜிட்டல் உட்கட்டமைப்பை செயல்படுத்துவதன் மூலம் இணைப்பைத் தொடர்ந்தது.

Digi Brush இன் ஸ்தாபகரும், பிரதான நிறைவேற்று அதிகாரியுமான இஷாம் மொஹமட், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,”டிஜிட்டலே பிரதானம் எனக் கருதும் வாடிக்கையாளர்களுடன் பணியாற்றுவது என்றும் மகிழ்ச்சிகரமானதாகும். செயற்திறன் மிகுந்த டிஜிட்டல் தொடர்பாடல் மூலம் வருமான வளர்ச்சியை ஆதரிக்கும் மற்றும் எங்கள் டிஜிட்டல் சேனல்கள் மூலம் நிகழ்நேர வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நேர்மறையான வணிக செயல்விளைவுகளை உருவாக்க டிஜிட்டலைப் பயன்படுத்துவதில் Hutch மற்றும் Digibrush குழு தீவிர கவனம் செலுத்தியதன் விளைவாக இந்த விருதும் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளது.”

இலங்கையில் சந்தைப்படுத்தலுக்கான தேசிய அமைப்பான Sri Lanka Institute of Marketing (SLIM) வழங்கும் SLIM DIGIS 2.0 என்பது டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் புதுமைகளை கொண்டாடும், மாற்றங்களை ஏற்படுத்தும் டிஜிட்டல் தீர்வுகளை அடையாளம் காணும் மற்றும் சந்தைப்படுத்தல் தொழிற்துறையை மேம்படுத்தும் மிகவும் பாராட்டப்படும் விருது வழங்கும் நிகழ்வாகும். வங்கி மற்றும் நிதி, காப்புறுதி, தொலைத்தொடர்பு / தகவல் தொழில்நுட்பம் / இணையம், ஓய்வு / விருந்தோம்பல் / பயணம் மற்றும் சுற்றுலா போன்ற பல துறைகளிலிருந்து சிறந்த டிஜிட்டல் பிரசாரங்களை SLIM DIGIS கௌரவிக்கின்றது.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட CK Hutchison Holdings Limited இன் இந்த உள்நாட்டு துணை நிறுவனமான Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, இலங்கையில் உள்ள மொபைல் வலையமைப்பு சேவை வழங்குநர்களிடையே முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிரூபித்தது. 2019 ஆம் ஆண்டு Etisalat நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர் HUTCH மொபைல் வலையமைப்பு வேகமாக வளர்ச்சியடைந்ததுடன், தற்போது 078 மற்றும் 072 ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் சேவை வழங்குகின்றது. HUTCH இன் புரட்சிகரமான 4G விரிவாக்கமான ஒரு திருப்பு முனையாக அமைந்ததுடன், 4G வலையமைப்பு மையமாக அதனை முன்னிலைப்படுத்தியது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ශ්‍රී ලංකාවේ ප්‍රථම කෝපි උළෙල තුලින් “දේශීය කෝපි” ප්‍රවර්ධනයට පියවරශ්‍රී ලංකාවේ ප්‍රථම කෝපි උළෙල තුලින් “දේශීය කෝපි” ප්‍රවර්ධනයට පියවර

ඕස්ට්‍රේලියානු රජයේ ප්‍රමුඛතම පුද්ගලික අංශයේ සංවර්ධන වැඩසටහන වන වෙළඳපල සංවර්ධන පහසුකම (MDF), ශ්‍රී ලංකාවේ කෝපි කර්මාන්තය සමඟ සහයෝගීව කටයුතු කරන අතර , ශ්‍රී ලංකාවේ කෝපි අංශයේ නියෝජිතයින් 100 කට අධික

සිංගර් ෆයිනෑන්ස්, කේ සීඩ්ස් ඉන්වෙස්ට්මන්ට්ස් ශ්‍රේණිගත කිරීමෙන් දෙවැනි පෙළ සමාගම් අතර පෙරමුණේසිංගර් ෆයිනෑන්ස්, කේ සීඩ්ස් ඉන්වෙස්ට්මන්ට්ස් ශ්‍රේණිගත කිරීමෙන් දෙවැනි පෙළ සමාගම් අතර පෙරමුණේ

කේ සීඩ්ස් ඉන්වෙස්ට්මන්ට්ස් (පුද්) සමාගම විසින් ඉදිරිපත් කරන ලද ‘ශ්‍රී ලංකාවේ ලැයිස්තුගත මූල්‍ය සමාගම්’ වාර්තාවට අනුව, නවතම ජාතික ශ්‍රේණිගත කිරීම්වල පෙරමුණ ගැනීමට සිංගර් ෆයිනෑන්ස් (ලංකා) සමාගම සමත් වී තිබේ. ශ්‍රී