𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz பண்டைய ‘அங்கம்பொர’ கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில் சித்தரித்த DIMO

பண்டைய ‘அங்கம்பொர’ கலையை தனது 2021 ஆண்டுக்கான நாட்காட்டியில் சித்தரித்த DIMO

| | 0 Comments |

இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, “அங்கம்பொர” என்று அழைக்கப்படும் இலங்கையின் நீண்டகால போர்வீரர் பாரம்பரியத்தை சித்தரித்து தனது 2021 ஆம் ஆண்டுக்கான நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. சுதேச தற்காப்பு கலையான இது, 16 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் தழைத்தோங்கியதுடன், இந்த புகழ்பெற்ற கலையை ஆங்கிலேயர்கள் அடக்குமுறைக்குட்படுத்துவதற்கு முன்பு பங்களிப்புச் செய்த போர்வீரர்களை தனது நாட்காட்டியின் ஊடாக கௌரவித்துள்ளது.  இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று பதிவுகளைக் கொண்ட DIMO தயாரித்த 10 வது நாட்காட்டி இதுவாகும்.

இலங்கையின் வளமான பாரம்பரியங்கள் மற்றும் 2,500 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் உணர்வுபூர்வமான வரலாறு ஆகியவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்துவதில் DIMO நன்கறியப்பட்டது. இலங்கையின் வரலாற்றில் முடியுமான ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கவனத்தை ஈர்க்கச் செய்து , இதன் மூலம் அவை தொடர்பில் சமூகத்தில் ஆர்வத்தை உருவாக்கி அது தொடர்பில் கற்பித்து அத்தகைய அறிவு மற்றும் மரபுகளை அடுத்த தலைமுறைக்கு அனுப்புவதன் மூலம் அவற்றைப் பாதுகாக்க ஊக்குவித்தலே நிறுவனத்தின் அணுகுமுறையாகும்.

இந்த நாட்காட்டியை பார்வையிடும் ஒருவர் இலங்கையின் சுவாரஸ்யமான வரலாற்றுப் பயணத்தினுள் அழைத்துச் செல்லப்படும் அனுபவத்தைப் பெறுவார். கிளடியேட்டர் போட்டிகள், இலங்கை போர் வீரர்களின் கவசத்திற்கான உதாரணங்கள், அனுராதபுர இராச்சியத்தின் ஆரம்பகால இலங்கை போர் வீரர்கள், தியானத்தின் மூலம் போர் வீரரின் ஆன்மீக பயிற்சி மற்றும் ஸ்ரீ மேகா ரத்னபாலி என்ற ராணியின் கதையை கண்டு மகிழ முடியும். ‘நில சாத்திரம்’ என்ற மிகவும் வளர்ச்சியடைந்த விஞ்ஞானத்துடன் ‘அங்கம்’ கலையானது எவ்வாறு நெருக்கமாக தொடர்புபட்டுள்ளதுள்ளது என்பதனை இந்த நாட்காட்டி காட்டுகின்றது. ‘இல்லங்கம்’ சண்டையில் பயிற்சியளிக்கப்பட்ட வாள் வீசுபவரின் திறமைக்கான ஒரு உதாரணம், , அட்டப்படுவ (அரச மெய்க்காப்பாளர்) போன்ற  உயர்ந்த அங்கம் பிரிவுகளால் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் பற்றிய தகவல்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. போர்வீரர்கள் மற்றும் தற்காப்புக் கலைஞர்களின் பயிற்சி மேற்கொள்ளப்பட்ட  ‘இல்லங்கமா’, ‘அங்கம்’ மற்றும் கிளடியேட்டர் விளையாட்டுக்கள் எவ்வாறு சமய ரீதியிலான அமைப்புகளில் நிகழ்த்தப்பட்டன, மாயா அங்கும் அல்லது போரில் மாயாஜாலம் போன்றவற்றின் உபயோகத்துடன் அவை போரில் வெற்றியை உறுதி செய்வதற்காக எவ்வாறு பயன்படுத்தப்பட்டன?  போன்றவையும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

இந்த நாட்காட்டி தொடர்பில் தனது கருத்தை தெரிவித்த தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் ரஞ்சித் பண்டிதகே, “அடுத்த தலைமுறையினருக்கான இலங்கையின் வளமான பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் செல்வாக்குமிக்க நிறுவனமாக இருப்பதில் DIMO எப்போதும் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளது.  அங்கம்பொர, மதிநுட்பமான பண்டைய பயிற்சியானது இலங்கையின் நீண்ட கால ஒரு போர்வீரர் பாரம்பரியமென்பதுடன், காலங்காலமாக பயணிக்கின்றது. தற்போது, ​​அங்கம்பொர ஒரு ஆன்மீக போர் நுட்பமாக புத்துயிர் பெறுகிறது. இந்த பழம்பெரும் கலை தலைமுறைகளாக தொடர்வதாக உறுதிசெய்யும் அதேவேளையில், இந்த சுதேச தத்துவத்தைப் பற்றி சமூகங்களுக்கு கற்றுக் கொடுப்பதற்காக சிறந்த தளமாக எங்கள் சுவர் நாட்காட்டி இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,” என்றார்.

இந்த நாட்காட்டியில் உள்ள தனிச்சிறப்பான விளக்கப்படங்கள் இலங்கை வரலாறு மற்றும் பண்டைய வாழ்க்கை முறைகளை புனரமைப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னணி கலைஞர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்ட பிரசன்ன வீரக்கொடியால் உருவாக்கப்பட்டுள்ளன. இலங்கை வரலாற்றின் தீவிர மாணவராக நன்கு அறியப்பட்ட அவரது பணியானது ஆரம்பகால இலங்கை வாழ்க்கை முறைகளின் மிகத் துல்லியமான சித்தரிப்புகளாக  பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆரம்பகால இலங்கை வீரர்கள், சண்டைக் கலைகள் மற்றும் போர் முறைகள் ஆகியவற்றை மீளுருவாக்கம் செய்தலில் அவர் கொண்டிருந்த சிறப்பு ஆர்வம் அவரது படைப்புகளில் ஒரு முக்கிய கருப்பொருள் ஆகும். அவை உடைகள், ஆயுதங்கள் மற்றும் கவசங்கள் ஆகியவற்றின் பல நூற்றாண்டுகளாக பரிணாம வளர்ச்சியை தெளிவாக சித்தரிக்கிறன.

DIMO நாட்காட்டியின் படைப்பு எண்ணக்கருவானது Sarva Integrated நிறுவனத்தால் முன்வைக்கப்பட்டதுடன், Neptune Printers இனால் அச்சிடும் பணி மேற்கொள்ளப்பட்டது. Sarva Integratedஇன் படைப்பாக்கத்திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவை அணிகளானது நாட்காட்டியின் ஒவ்வொரு மாதத்துக்குமான விவரணத்தை உயிர்ப்பிக்கும் உயர்தர விளக்கப்படங்களைப் பயன்படுத்தும் கருத்துருவாக்கத்தை மேற்கொண்டன. பல்வேறு பிரிவுகளில் நிபுணத்துவத்தைக் கொண்ட நபர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகள் நாட்காட்டியை மேம்படுத்த  உதவியதுடன், இது அறிவை மேம்படுத்தும் படைப்பாக அமைந்ததுடன், இது பொதுமக்களினாலும் நன்கு ஏற்றுக்கொள்ளப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக, இந்த நாட்காட்டியானது சூழல் நட்பு ரீதியிலான அச்சிடுதல் மற்றும் விளக்கக்காட்சி வடிவத்தில் மற்றொரு தனித்துவமான அம்சத்தையும் முன்வைத்துள்ளது. ஈயம், காட்மியம், பாதரசம் மற்றும் குரோமியம் போன்ற நச்சுத் தன்மை கொண்ட கனரக உலோகங்கள் இல்லாத சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான மூலப்பொருட்களுடன் தயாரிக்கப்படும் மை மற்றும் நீர் சார்ந்த பூச்சுகளைப் பயன்படுத்தி FSC சான்றளிக்கப்பட்ட art board / காகிதத்தில் இந்த நாட்காட்டியானது தயாரிக்கப்படுகிறது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

මුළුතැන්ගෙයි උපකරණ භාවිතය පිළිබඳ දැනුවත් කිරීමකට සිංගර් සමඟින් Anoma’s Kitchen අත්වැල් බැඳ ගනියිමුළුතැන්ගෙයි උපකරණ භාවිතය පිළිබඳ දැනුවත් කිරීමකට සිංගර් සමඟින් Anoma’s Kitchen අත්වැල් බැඳ ගනියි

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම පාරිභෝගික භාණ්ඩ සැපයුම්කරුවා වන සිංගර් විසින් ජනප්‍රිය ඉවුම් පිහුම් හා සම්බන්ධ YouTube නාලිකාවක් වන Anoma’s Kitchen හි නිර්මාතෘ වන අනෝමා විජේතුංග මහත්මිය සමඟ සුවිශේෂී හවුල්කාරීත්වයකට පැමිණ ඇත.

ශ්‍රී ලංකාවේ අංක. 01 හෙයාර් ඔයිල් සන්නාමය කුමාරිකා වෙතින් කාර්යබහුල කාන්තා ඔබ වෙනුවෙන්ම හඳුන්වා දෙන නව තෙරපි රේන්ජ් සත්කාරයශ්‍රී ලංකාවේ අංක. 01 හෙයාර් ඔයිල් සන්නාමය කුමාරිකා වෙතින් කාර්යබහුල කාන්තා ඔබ වෙනුවෙන්ම හඳුන්වා දෙන නව තෙරපි රේන්ජ් සත්කාරය

කාන්තාවකගේ වරලස ඇයගේ පෞර්ෂත්වයත්, අභිමානයත්, රූ සපුවත් කෙරෙහි සෘජුවම බලපෑම් කරන බව නොරහසකි. මේ නිසාම කෙස් කළඹේ නිරෝගී බව රැක ගැනීම ඉතාම වැදගත්. වර්තමාන කාර්යබහුල ජීවන රටාව තුළ අන් කවරදාටත්