𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz Sri Lanka Brand Leadership Awards 2020 நிகழ்வில் விருது வென்ற ஒரேயொரு தொலைத்தொடர்பாடல் நிறுவனமான HUTCH

Sri Lanka Brand Leadership Awards 2020 நிகழ்வில் விருது வென்ற ஒரேயொரு தொலைத்தொடர்பாடல் நிறுவனமான HUTCH

| | 0 Comments |

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனராகத் திகழும் HUTCH, அண்மையில் நிறைவடைந்த Sri Lanka Brand Leadership Awards 2020 நிகழ்வில் விருதுகளைப் பெற்ற ஒரே தொலைத்தொடர்பாடல் வர்த்தகநாமம் என்ற அரிய அங்கீகாரத்தைப் பெற்றது.

ஏனைய பல முன்னணி வர்த்தகநாமங்களும் விருதுகளை வென்ற இந்த நிகழ்வில், ஒரு விருதல்ல, இரு விருதுகளை HUTCH தனதாக்கியது. ‘வருடத்துக்கான சிறந்த சந்தைப்படுத்தல் பிரசாரம்’ (Best Marketing Campaign of the Year) மற்றும் வருடத்தின் வளர்ந்து வரும் வர்த்தகநாமம் (Emerging Brand of the Year) ஆகிய இரட்டை விருதுகளை Hutch இந்த நிகழ்வில் வென்றது.

HUTCH நிறுவனத்தின் “Be Any-where” – 4G வலையமைப்பு பிரசாரத்திற்கான அங்கீகாரமாக ‘வருடத்திற்கான சிறந்த சந்தைப்படுத்தல் பிரசாரம்’ என்ற விருதும், 2020 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வர்த்தகநாமத்தின் செயல்திறனுக்கான அங்கீகாரமாக ‘வருடத்தின் வளர்ந்து வரும் வர்த்தகநாமம்’ என்ற விருதும் வழங்கப்பட்டிருந்தன.

HUTCH இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி, ரம்ஸீனா மொர்செத் லாய், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “உலகின் மிகவும் விரும்பப்படும் விருது நிகழ்வொன்றிலிருந்து இரண்டு பாரிய விருதுகளைப் பெற்றதில் நாங்கள் உண்மையிலேயே கௌரவமடைவதுடன், பெருமைப்படுகின்றோம். எங்கள் முழு அணியின் அர்ப்பணிப்பும் இந்த விருதுகளை எங்களுக்கு பெற்றுத் தந்துள்ளன. இந்த விருதுகள் முன்னோக்கிச் செல்லவும், கட்டுப்படியாகும் மற்றும் தனித்துவமான மொபைல் தீர்வுகளுடன் தேசத்துக்கு சேவை செய்யவும் எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன,” என்றார்.

“Sri Lanka Brand Leadership” என்பது சந்தைப்படுத்தல் துறையினரின் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் முதற்தர தளமான CMO Asiaவினால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வாகும். இந்த ஆண்டு மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்ற Sri Lanka Brand Leadership Awards 2020  சிறந்த நிறுவனங்கள், வர்த்தகநாமங்கள் மற்றும் தனிநபர்களை அவர்களின் பிராண்டிங், நுகர்வோர் ஈடுபாடு மற்றும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பங்களிப்புகள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்புக்காக அங்கீகரித்தது,” என மேலும் குறிப்பிட்டார்.

CMO Asiaவின் நிறைவேற்று பணிப்பாளர், Dr. ஆலொக் பண்டிட் கருத்து தெரிவிக்கையில்: “இலங்கையின் சிறந்த நிறுவனங்கள் மற்றும் வர்த்தகநாமங்களில் சிறந்ததை கௌரவிக்கும் மற்றொரு வெற்றிகரமான Leadership Awards நிகழ்வினை நாங்கள் நடாத்தி முடித்துள்ளோம். இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில், இந்த ஆண்டு விருதுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு தொலைத்தொடர்பு சேவைகள் வழங்குநராக HUTCH உருவெடுத்துள்ளதுடன், இது இந்த தொலைத்தொடர்பு வர்த்தகநாமத்துக்கான மிகவும் பெருமையான தருணமாக இருக்க வேண்டும். விருது வென்ற அனைவருக்கும் அவர்களின் பாரிய வெற்றிக்கும், சந்தைப்படுத்தல் துறையினரின் பங்களிப்புக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்,” என்றார்.

இந்த விருதுகள் தொடர்பில் பாராட்டு மழை பொழிந்த,  HUTCH  இணைந்து பணியாற்றும் கிரியேட்டிவ் ஏஜென்சியான Wunderman Thompson இன் பிரதான நிறைவேற்று அதிகாரி அலைனா ஹஜி ஒமர், கருத்து தெரிவிக்கையில், “இந்த அற்புதமான பங்குடமை குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்! இந்த விருதுகளுடன் நாம் கொண்டாடும் வெற்றியானது வளர்ச்சி, புத்தாக்கம், துணிச்சலான ஆக்கபூர்வம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் உற்சாகமான மற்றும் லட்சியபூர்வமான கலாசாரத்தின் விளைவென்பதுடன், இது HUTCH இல் மிகவும் பிரகாசமாக மிளிர்கின்றது,” என்றார்.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட CK Hutchison Holdings Limited இன் இந்த உள்நாட்டு துணை நிறுவனமான Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, இலங்கையில் உள்ள மொபைல் வலையமைப்பு சேவை வழங்குநர்களிடையே முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக  தன்னை நிரூபித்தது. 2019 ஆம் ஆண்டு Etisalat நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர் HUTCH மொபைல் வலையமைப்பு வேகமாக வளர்ச்சியடைந்ததுடன்,  தற்போது 078 மற்றும் 072 ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் சேவை வழங்குகின்றது. HUTCH இன் புரட்சிகரமான 4G விரிவாக்கமான ஒரு திருப்பு முனையாக அமைந்ததுடன், 4G வலையமைப்பு மையமாக அதனை முன்னிலைப்படுத்தியது.இந்த விரிவாக்கமானது HUTCH, “Bigger and Better”  சேவை வழங்க உதவியது.  HUTCH தற்போது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களின் வலையமைப்பு தேவைகளுக்கும் தனது சேவையை வழங்கி பூர்த்தி செய்து வருகின்றது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

British Council සිය අධ්‍යාපනික මධ්‍යස්ථාන නැවත විවෘත කිරීමට සැරසෙයිBritish Council සිය අධ්‍යාපනික මධ්‍යස්ථාන නැවත විවෘත කිරීමට සැරසෙයි

British Council ආයතනයේ කොළඹ, මහනුවර, යාපනය සහ මාතර යන ප්‍රදේශවල පිහිටා ඇති සිය අධ්‍යාපනික මධ්‍යස්ථාන, 2022 ජනවාරි 07  දින සිට නැවත විවෘත කරන බව එම ආයතනය නිවේදනය කරයි. Covid 19