𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz இலங்கையின் டெலிமெடிசின் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் HUTCH – oDoc இடையிலான பங்குடமை

இலங்கையின் டெலிமெடிசின் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் HUTCH – oDoc இடையிலான பங்குடமை

| | 0 Comments |

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch ,  முன்னணி டெலிமெடிசின் சேவை வழங்குனரான oDoc  உடன் கைகோர்த்துள்ளதன் மூலம் 24/7 ஒன்லைன் வீடியோ ஆலோசனை சேவைகளை ஒவ்வொரு Hutch சந்தாதாரர்களின் மொபைலுக்கும் முன்பதிவு செய்து வெறும் 3 நிமிடங்களுக்குள் நேரடியாக கொண்டு வருகின்றது. oDoc நிகழ்நேர மெய்நிகர் ஆலோசனை சேவையானது மருத்துவ ஆலோசனையைப் பெற மருத்துவமனைகள் / கிளினிக்குகளில் உடல் ரீதியாக பிரசன்னமாக வேண்டியதன் அவசியத்தை குறைப்பதனால் கொவிட் தொற்று அபாயத்தையும் குறைப்பதுடன், இதன் மூலம் நாட்டின் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் உதவுகின்றன.

Hutch-oDoc சேவையின் ஊடாக, மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் செலவழிக்கும் நேரத்தைக் குறைப்பதன் மூலம் தொற்றுநோய் காலப்பகுதியின் போது வாடிக்கையாளர்கள் தேவையற்ற நோய்த் தொற்றுகளிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள். குறிப்பாக நோயாளிகள் அல்லது பாதிக்கப்படக்கூடிய மக்களில் அடங்கும் நோயாளிகளின் பராமரிப்பாளர்கள், சிரேஷ்ட மற்றும் வைத்தியசாலைகள்/ கிளினிக்குகளுக்கு விஜயம் செய்வதை சௌகரியமாக உணராத நோயெதிர்ப்பு குறைபாடு கொண்டவர்களுக்கு இன்றியமையாததாகும்.

மருத்துவ ஆலோசனைக்காக வாடிக்கையாளர்கள் இனி பயணத்துக்காகவும், காத்திருப்பு அறைகளுக்குள்ளும் நேரத்தை வீணடிக்க வேண்டிய அவசியமில்லை. மேலும், சிறு நோய்களுக்கும் அவர்கள் குழந்தைகளுடன் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய தேவையில்லை. தூரப் பிரதேசங்களில் வசிக்கும் மருத்துவ சேவைகளுக்கு  மட்டுப்படுத்தப்பட்ட அணுகலைக் கொண்ட வாடிக்கையாளர்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி தமது இடத்தில் இருந்தவாறே கொழும்பிலிருந்து தரமான சுகாதார பராமரிப்பை பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், கொழும்புக்கான பிரயாண செலவையையும் மீதப்படுத்திக் கொள்ள முடியும்.

மைல்கல்லாக அமைந்துள்ள இந்த பங்குடமையானது oDoc இன் உயர்தர மெய்நிகர் வீடியோ மற்றும் ஓடியோ  பொது மருத்துவ ஆலோசனை சேவைகளை  ரூ.  99 + வரி  என்ற மிகவும் கட்டுப்படியாகும் மாதாந்த சந்தா தொகைக்கு வழங்குகின்றது. இந்த சேவையின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறு நாளின் எந்த நேரத்திலும் எல்லையற்ற மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம். * 6363 # ஐ டயல் செய்வதன் மூலம் ஹட்ச் சந்தாதாரர் இந்த சேவையை செயற்படுத்திக் கொள்ள முடியும். போன் மூலமான ஆலோசனைகளை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் * 6363 # USSD குறியீட்டைப் பயன்படுத்தி மீண்டும் அழைப்பொன்றை தமக்கு எடுக்கும் படி கோரலாம். அவ்வாறு கோரியவுடன், ஒரு பொது வைத்தியர் மூன்று நிமிடங்களுக்குள் பாவனையாளருக்கு அழைப்பை மேற்கொள்வார்.

oDoc மருத்துவர்கள் வாடிக்கையாளர்களுடன் ஒன்லைன் மருத்துவ ஆலோசனைகளை நடாத்திய பின்னர் தொலைபேசியின் ஊடாக மருந்துகளை பரிந்துரைக்க அதிகாரமளிக்கப்பட்டவர்கள். புதிய  சேவையின் ஊடாக சில நிமிடங்களிலேயே 600 இற்கும் அதிக மருத்துவர்களுக்கான அணுகலை வாடிக்கையாளர்களால் பெற்றுக்கொள்ள முடியும்.

சுகாதார அமைச்சு (MoH) மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவகம் (ICTA) ஆகியவற்றுடன் நாடு முழுவதும் டெலிமெடிசின் சேவையைத் தொடங்கியுள்ள நிலையில், தேசிய சுகாதார சேவையை மேம்படுத்துவதே oDoc இன் நோக்கமாகும். HUTCH உடனான oDoc இன் பங்குடமையானது, தொடர்ச்சியாக நவீன உயர் தர பெறுமதி சேர் சேவைகள் வழங்கப்படும் HUTCH இன் வெகுஜன சந்தாதாரர் தளத்தை பயன்படுத்தி சமூகத்தின் பரந்த பகுதியினருக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு வழி செய்கின்றது.

இந்த புதிய பங்குடமை தொடர்பில் கருத்து தெரிவித்த HUTCH இன் பிரதான நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா,”  “HUTCH என்பது சமூக பொறுப்புள்ள நிறுவனமாகும், இது பொதுமக்களின் கவலைகளை நிவர்த்தி செய்கிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கட்டுப்படியாகும் விலையில் மெய்நிகர் சுகாதார சேவையை எடுத்துச் செல்வதற்கான இத்தகைய முயற்சிகளுக்கு எங்கள் முழு ஆதரவும் வழங்கப்படுகிறது. டெலிமெடிசின் சுகாதாரத்துறையில் ஒரு முக்கிய இடமாக உருவாகியுள்ளது என்பதுடன் கொவிட் 19 காலப்பகுதியில் இது இன்னும் முக்கியமானதாகிவிட்டது. எங்கள் விசுவாசமான சந்தாதாரர்களுக்கு எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவையைப் பெறுவதற்கு முன்னணி டெலிமெடிசின் சேவை வழங்குநரான oDocகுடன் பங்குடமையில் இணைவதில் HUTCH  பெருமிதம் கொள்கின்றது,” என்றார்.

oDoc இன் பிரதான நிறைவேற்று அதிகாரி ஹேஷான் பெர்ணான்டோ கருத்து தெரிவிக்கையில்; “oDoc இல், அனைவருக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான வழிவகைகளை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். 300,000 க்கும் மேற்பட்ட oDoc பாவனையாளர்கள் மற்றும் மாதத்திற்கு 3500 அப்ளிகேஷன் தரவிறக்கங்களுடன், தற்போது இலங்கையின் டெலிமெடிசினின் முன்னோடியாக நாம் உள்ளோம். மருத்துவர்களுக்கான விஜயத்தில் 75% வரையானவற்றை வீடியோ அழைப்புகள் மூலம் கையாள முடியும் என்பதை அமெரிக்க மருத்துவ சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது (American Medical Association), மேலும் இந்த அண்மைய போக்கை நாங்கள் பயன்படுத்த முடியும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 50 வெவ்வேறு பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்ற 450 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் எங்களுடன் இந்த புரட்சிகர சேவையில் இணைந்துள்ளனர். நோயாளிகள் இது போன்ற சேவையை தம் வசம் வைத்திருப்பது, அவர்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு விஜயம் செய்ய வேண்டிய தொந்தரவை இல்லாமல் செய்வதுடன் அவர்களுக்கு பெரும் நிவாரணத்தையும் தருகிறது,” என்றார்.

பட விளக்கம்:

இடமிருந்து – நபீல் மில்ஹான் (Head of New Business Development and Sales – oDoc) , கீத் டி அல்விஸ் (Co-Founder & CTO– oDoc), ஹேஷான் பெர்ணான்டோ (Co-Founder & CEO – oDoc ), ஹம்தி ஹசன் (GM Marketing – Hutch) , பிராஸ் மர்கார் (AGM Partnerships & Alliances – Hutch)

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

Singer වෙතින් ඉහළ කාර්ය සාධනයක් සහිත DELL නිෂ්පාදන අලෙවිකරුවන් ඇගයීමට ලක් කරයිSinger වෙතින් ඉහළ කාර්ය සාධනයක් සහිත DELL නිෂ්පාදන අලෙවිකරුවන් ඇගයීමට ලක් කරයි

සිංගර් ශ්‍රී ලංකා PLC යනු   ඉහළ පාරිභෝගික විශ්වාසයක් හිමි ශතවර්ෂයකට අධික ඉතිහාසයක් ඇති රටේ ප්‍රමුඛතම පාරිභෝගික භාණ්ඩ මෙන්ම පරිඝනක උපාංග අලෙවි ජාලයකි.ලෝකයේ විශාලතම තාක්ෂණික දැවැන්තයෙකු වන Dell, ඉල්ලුමට සරිලන සැපයුම්

ස්වදේශී කොහොඹ බේබි, හැටන් නැෂනල් බැංකුව හා එක්ව අලුත උපන් බිළිඳුන්, මෙලොවට බිහි කළ මව්වරුන්ට තිළිණ ලබා දෙයිස්වදේශී කොහොඹ බේබි, හැටන් නැෂනල් බැංකුව හා එක්ව අලුත උපන් බිළිඳුන්, මෙලොවට බිහි කළ මව්වරුන්ට තිළිණ ලබා දෙයි

දශක 08ක විශ්වාසය දිනා ගත්  ශ්‍රී ලංකාවේ අංක එකේ ශාකසාර සත්කාර නිෂ්පාදනයේ පුරෝගාමියා ස්වදේශී කොහොඹ, සිය ළදරු සබන් සන්නාමය වන ස්වදේශී කොහොඹ බේබි සබන් හා හැටන් නැෂනල් බැංකුව සමඟ සහයෝගිත්වයෙන්