𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz உள்நாட்டு பாலுற்பத்தித்துறையில் தன்னிறைவு அவசியமென்பதை ஏற்றுக்கொள்ளும் Pelwatte

உள்நாட்டு பாலுற்பத்தித்துறையில் தன்னிறைவு அவசியமென்பதை ஏற்றுக்கொள்ளும் Pelwatte

| | 0 Comments |

Pelwatte Dairy Industries, நாட்டில் பால் விநியோகம் மிகக் குறைவாக காணப்பட்ட நேரத்தில் உள்நாட்டு பால் விநியோகத்தை பூர்த்தி செய்வதில் தனது பங்கை வகிக்க முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இந் நிறுவனம் தனது முழு உற்பத்தித் திறனையும் பயன்படுத்தியதுடன்,  பலூடா சுவையுள்ள புதிய ஐஸ்கிரீம் வரிசையையும் அறிமுகப்படுத்தியது.

பாலுற்பத்திகளை இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், நுகர்வோர் பாலுக்கான மாற்றுத் தெரிவை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டிருந்தனர். ஏனெனில் இது இலங்கை வீடுகளின் உணவு நடைமுறைகளில் ஆழமாக வேரூன்றியிருந்தமையிலாகும். பால் உற்பத்தியை அதிகரிக்க Pelwatte முயற்சி எடுத்ததுடன், சுவை நரம்புகளுக்கு ஈடுகொடுக்க அதன் புதிய பலூடா சுவை ஐஸ்கிரீம் வரிசையை அறிமுகப்படுத்தியது.

Pelwatte Dairy இன் முகாமைத்துவ பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “Pelwatte இந்த காலப்பகுதியில் நாங்கள் முடிந்தவரை பல இலங்கையர்களின் தேவையை பூர்த்தி செய்வதை நோக்காகக் கொண்டு பணியாற்றியது. நாங்கள் 10,000 க்கும் மேற்பட்ட பாலுற்பத்தியாளர்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள விநியோக அலைவரிகளுடன் மிகப்பெரிய உள்நாட்டு பாலுற்பத்தியாளராக திகழ்வதோடு, நாட்டை இந்த தொழிற்துறையில் அபிவிருத்தியடையச் செய்து தன்னிறைவு பெறச் செய்யும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளோம்,”என்றார்.

“உள்ளூர் உற்பத்தியை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அண்மைய காலம் காட்டியுள்ளது. ஏனெனில், இது சர்வதேச வர்த்தகக் கட்டுப்பாடுகளிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் வாழ்வாதாரங்களையும் சமூகங்களையும் வளர்க்க உதவுகிறது. இந்த பங்களிப்பானது நுகர்வோரின் ஊட்டச்சத்து மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக செல்வாக்குச் செலுத்தும். உள்நாட்டு தொழிற்துறையை ஆதரிக்கவும் நாங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம்,” என மேலும் தெரிவித்தார்.

அனைத்து Pelwatte விற்பனை நிலையங்களும் திறந்தே இருந்ததுடன், பாலுற்பத்திப் பொருட்கள் எப்போதும் அவற்றில் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்த நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். விநியோகச் சங்கிலி ஊக்கப்படுத்தப்பட்டு, கேள்விக்கு ஏற்ப எதிர்வரும் மாதங்களில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எந்தவொரு வாடிக்கையாளரும் அல்லது இலங்கையரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிறுவனம் அனைத்து நிலைப்பாட்டு பங்குகளையும் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

2020 ඉ-ස්වාභිමානී ජාතික සම්මාන ප්‍රදානය සදහා අයදුම්පත් බාර ගැණේ2020 ඉ-ස්වාභිමානී ජාතික සම්මාන ප්‍රදානය සදහා අයදුම්පත් බාර ගැණේ

සමාජ සුබ සිද්ධිය සදහා බලපෑමක් කළ හැකි නවෝත්පාදන  හා නිර්මාණාත්මක නිමැයුම් හා යෙදවුම්  ඇගැයීමට ලක් කෙරෙන ඩිජිටල් සමාජ සවිබල ගැන්වීමේ 2020 ඉ-ස්වාභිමානී  ජාතික සම්මාන ප්‍රදානය සදහා අයදුම්පත්  බාර ගැණේ.  මෙම

හච්,‍ ශ්‍රී ලංකා සන්නාම නායකත්ව සම්මාන 2020 උළෙලේදී සම්මාන දිනූ ශ්‍රී ලංකාවේ එකම සන්නිවේදන සේවා සන්නාමය බවට පත් වෙයිහච්,‍ ශ්‍රී ලංකා සන්නාම නායකත්ව සම්මාන 2020 උළෙලේදී සම්මාන දිනූ ශ්‍රී ලංකාවේ එකම සන්නිවේදන සේවා සන්නාමය බවට පත් වෙයි

ජංගම දුරකතන බ්‍රෝඩ්බෑන්ඩ් සේවාවන් සඳහා ශ්‍රී ලාංකීය පාරිභෝගිකයින්ගේ අතර වඩාත් ප්‍රියතම තේරීම තේරීම වන හච්, පසුගියදා පැවති ශ්‍රී ලංකා සන්නාම නායකත්ව සම්මාන 2020 උළෙලෙහි, සම්මාන ලබාගත් එකම ශ්‍රී ලාංකීය ටෙලිකොම්

#BondWithHutch TikTok கொவிட் பாதுகாப்பு சவால் 7 நாட்களில் 3 மில்லியன் பார்வைகளை ஈட்டியது#BondWithHutch TikTok கொவிட் பாதுகாப்பு சவால் 7 நாட்களில் 3 மில்லியன் பார்வைகளை ஈட்டியது

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் வழங்குனராகத் திகழும் HUTCH, இளைஞர்களை முக்கியமான தொற்றுநோய் பாதுகாப்பு நடைமுறைகளில் ஈடுபடுத்தும் பொருட்டு TikTok தளத்தை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளது. நாட்டில் கொவிட் 19 இன் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் கூடிய இந்த புதுமையான பிரசாரத்தை