𝙇𝙞𝙛𝙚𝙨𝙩𝙮𝙡𝙚 𝙉𝙚𝙬𝙨 Latest Buzz நம்பிக்கைக்கான வெகுமதி’ நிகழ்வில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு வெகுமதியளித்த சதாஹரித

நம்பிக்கைக்கான வெகுமதி’ நிகழ்வில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு வெகுமதியளித்த சதாஹரித

| | 0 Comments |

பசுமை முதலீட்டுத் துறையின் முன்னோடியும், இலங்கையில் வணிக வனாந்தர செய்கையின் முதல்நிலை நிறுவனமுமான  சதாஹரித பிளாண்டேஷன்ஸ் லிமிடெட், மார்ச் 03 ஆம் திகதி கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற ‘நம்பிக்கைக்கான வெகுமதி’ என்ற தொனிப்பொருளில் அமைந்த நிகழ்வின் மூலமாக நாட்டின் அகர்வுட் துறையில் புதிய வரலாற்றை எழுதியுள்ளது. இலங்கைக்கான அந்நிய செலாவணி மூலமாக வணிக வனாந்தர செய்கையை அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாகவும் ஆதரவாளராகவும் அறியப்படும் சதாஹரித குழுமத்தின் தலைவர் சதிஷ் நவரத்ன அவர்களின் பங்குபற்றுதலுடன் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

சதாஹரித தனது வாடிக்கையாளர்களிடமிருந்து அகர்வுட் அறுவடையை அவற்றின் காலம் பூர்த்தியானதும், அவர்களுக்கான இலாபத்தை வழங்கி மீண்டும் கொள்வனவு செய்தது. அனைத்து COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இந்த பிரமாண்ட விழா வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. அகர்வுட்டை வணிக வனாந்தர அடிப்படையிலான முதலீடாக அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் சதாஹரித என்பதுடன்,  நேபொடவில் உள்ள முதலாவது பெருந்தோட்டத்தில் தமது இடங்களை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்களுக்கு அதன் இலாபத்தையும் வழங்கி வைத்தது.

ஆசியாவில் வணிக ரீதியான வனாந்தரத்தின் முன்னோடியான சதாஹரித,  பேண்தகு மற்றும் பாதுகாப்பான முதலீட்டு மார்க்கமாக தன்னை நிரூபித்துள்ளது. இந் நிறுவனம் 35,000 க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதுடன், அவர்கள் அனைவருக்கும் அதிக வருமானத்தை அளிக்கும் அதே நேரத்தில், நாட்டின் வனப்பகுதியைப் பாதுகாக்க தனது ஆதரவை உறுதி செய்கிறது. ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக அதன் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அது பேணுவதுடன், ஏனையவற்றைப் போலல்லாமல் அதிகபட்ச இலாபங்களை வழங்குகிறது.

இந்த “நம்பிக்கைக்கான வெகுமதி” நிகழ்வானது, 7 ஆண்டுகளுக்கு முன்னர் அகர்வுட் திட்டங்களில் முதலிட்டிருந்த முதலீட்டாளர்களுக்கு ரூபா 50,000 வழங்கப்பட்டதுடன், இத் தொகையானது நிறுவனம் அறுவடையின் பின்னரான பொறுப்பாக உறுதியளித்திருந்த தொகையை விட இருமடங்கு அதிகமாகும்.  இதற்கு 22.4% வருடாந்த வருமானம் கிடைப்பதுடன், இது வேறு எந்த நிதி நிறுவனத்தையும் விட கணிசமாக அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய அகர்வுட் சந்தையில் உள்ள ஒரேயொரு நிலையான இலங்கை வர்த்தகநாமமான சதாஹரித அகர்வுட், உலகின் பிற பகுதிகளுக்கு மிக உயர்ந்த தரமான அகர்வுட்டை வழங்குவதில் தொடர்ந்து உறுதியாக உள்ளது. அதன் பாராட்டத்தக்க ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பிரிவு அதன் நிபுணத்துவம் வாய்ந்த ஊழியர்களுடன் இணைந்து தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் மூலம் உயர்தர அகரினை உருவாக்குகிறது. உலக சந்தை நடத்தை குறித்த சர்வதேச ஆராய்ச்சி அறிக்கைகளின் அடிப்படையில் உலகளாவிய அகர்வுட் சந்தையில் முதல் 10 நிறுவனங்களில் சதாஹரித பிளாண்டேஷனும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சதிஷ் நவரத்ன,”இந்த முக்கியமான நாள் நனவாவக வெளிவருவதைக் கண்டு நான் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடைகிறேன், ஏனெனில் இது எங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து அறுவடை வாங்கும் நாளாகும், அதே நேரத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டதை விட அதிக வருமானத்தை வழங்க முடிகின்றமையுமாகும். அகர்வுட் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து அந்நிய செலாவணியை நாட்டிற்கு கொண்டு வருவதற்கும், உள்ளூர் முதலீட்டாளர்களை வலுப்படுத்துவதற்கும், இயற்கையை பாதுகாப்பதற்கும் நாங்கள் நீண்ட காலமாக திட்டமிட்டுள்ளோம். ஒரு நிறுவனம் என்ற வகையில், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்ததை வழங்குகிறோம் என்று என்னால் நம்பிக்கையுடன் சொல்ல முடியும்,” என்றார்.

“எங்கள் வாடிக்கையாளர்கள் 19 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் இருக்கிறார்கள், இது பல ஆண்டுகளாக நாங்கள் வென்ற, பாதுகாக்கப்பட்ட மற்றும் பலப்படுத்தப்பட்ட ‘நம்பிக்கையின்’ உண்மையான பிரதிபலிப்பாகும். எங்கள் நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்திக்கொண்டு, புதுமையான தொழில்நுட்பம் மற்றும் விரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மூலம் அதிக வருமானத்தை வழங்க நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருக்கிறோம், ” என்று அவர் மேலும் தெரிவித்தார். அத்துடன் நிறுவனம் மீது நம்பிக்கை வைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சதாஹரித பிளான்டேஷனின் நிறைவேற்று பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியான Dr. பிரதீப் எட்வேர்ட், “சதாஹரித குழுமம் – அகர்வுட்டின் வணிக வனாந்தர பயிர்ச்செய்கையின் முன்னோடியாக அதிக சந்தை பெறுமதியை ஊக்குவிப்பதை உறுதிசெய்தது. சர்வதேச சந்தைகளுக்கு மிக உயர்ந்த தரம் வாய்ந்த அகர்வுட் தேவைப்படுகிறது, மேலும் அந்த சந்தைகளுக்கு நேரடியாக தயாரிப்புகளை உற்பத்தி செய்து வழங்குவதற்கான எங்கள் இயலுமை, முதலீட்டாளர்களுக்கு வனாந்தர மற்றும் முதலீட்டு துறையில் அதிக இலாப வருமான விகிதங்களை வழங்குவதற்கு அனுமதிக்கிறது. இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிலையான மற்றும் நம்பகமான வருமான ஆதாரமாகவும், அந்நிய செலாவணி வருமானத்தில் ஒரு முக்கிய பங்குதாரராகவும் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,”எனக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சி குறித்து சதாஹரித குழுமத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜயம்பதி மிராண்டோ கருத்து தெரிவிக்கையில், “எங்கள் மதிப்புமிக்க 35,000 வாடிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துகிறேன். இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இலாபத் தொகையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான மற்றும் நல்ல சேவையை வழங்கக் கூடியதாக இருந்தமையால் எம்மால் வழங்க முடிந்தது.  அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தவும், வரவிருக்கும் காலத்தில் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கவும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்றார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

இலகுவான வீட்டு திருத்தப் பணிகளை எளிதாக்கும் FASTFIX செயலிஇலகுவான வீட்டு திருத்தப் பணிகளை எளிதாக்கும் FASTFIX செயலி

இறுதிப் பாவனையாளர்களுக்கான சேவை வழங்குனர்களுடன் எளிதாக ஒன்றினைக்கும் இலங்கையின் முதலாவது செயலியான FASTFIX  இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இச் செயலி மூலம் வழங்கப்படும் சேவையை விரிவுபடுத்தும் முகமாக FASTFIX முழுவதும் உரித்தான துணை நிறுவனமாக Anton கை கோர்த்துள்ளது. இது குழாய்

‘රාණි සඳුන් වාසනා වරම’ තුළින් රන් මාල සහ රු. මිලියන 1 ක් වටිනා ගෘහ උපකරණ තෑගි‘රාණි සඳුන් වාසනා වරම’ තුළින් රන් මාල සහ රු. මිලියන 1 ක් වටිනා ගෘහ උපකරණ තෑගි

සෑම සතියකම රන් මාලයක් සහ තවත් ආකර්ෂණීය තෑගි දිනා ගන්න! කඳානේ ස්වදේශී කර්මාන්තායතනයේ අනර්ඝතම නිෂ්පාදනයක් වන රාණි සඳුන් සබන්, වසර ගණනක් සිය සන්නාමය පිළිබඳ විශ්වාසය තබා කටයුතු කරන ශ්‍රී ලාංකීය

CLOVER IN THALAWATHUGODA சொகுசு மனைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்த PRIME SIGNATURE VILLASCLOVER IN THALAWATHUGODA சொகுசு மனைத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்த PRIME SIGNATURE VILLAS

60% சொகுசு வில்லா மனைகள் உடனடியாக விற்றுத் தீர்ந்தன இலங்கை ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடி நிறுவனமாகத் திகழும் Prime Group, தனது பிரத்தியேக signature villas வரிசையில் புதிய இணைப்பாக ‘Clover in Thalawathugoda’ மனைத்தொகுதியை அங்குரார்ப்பணம் செய்துள்ளது. இந்த